முகவர்ணம் பூசியுள்ள யேசபேல் PAINTED - FACE JAZEBEL சிகாகோ இல்லினாய்ஸ் அமெரிக்கா 56-10-03 தீர்க்கதரிசி வில்லியம் மரியன் பிரன்ஹாம் முகவர்ணம் பூசியுள்ள யேசபேல் PAINTED - FACE JAZEBEL சிகாகோ இல்லினாய்ஸ் அமெரிக்கா 56-10-03 சகோதரனே உங்களுக்கு நன்றி. நாம் நின்றிருக்கையிலே நாம் ஜெபிக்கலாமா. எங்கள் பரலோக பிதாவே, இன்றிரவு இங்கே மீண்டும் இருப்பதற்கான ஸ்லாக்கியத்திற்காகவும், உம்முடைய ஜனங்கள் ஒன்றாக கூடிய இந்த மகத்தான கூடுகைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் இப்படி செய்து ஜெபித்தோமானால், அப்பொழுது நீர் பரலோகத்திலிருந்து செவிக்கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். மேலும் நீர் இதை செய்வீர் என்பதை நாங்கள் அறிவோம் ஏனெனில் அது உம்முடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. இன்றிரவு எங்கள் மீது நீர் புதிதாக அசைவாடும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுக்கு பரிசுத்த ஆவியினால் புத்தம் புதிதாக ஞானஸ்நானத்தை தாரும். இந்த ஆராதனை யிலிருந்து மகிமையை எடுத்துக்கொள்ளும். கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். உட்காரலாம். 2. கூட்டங்களானது ஏறக்குறைய மிகவும் சிறியதாக இருக்கின்றன. அவைகள் வெறுமனே... இதைப் பற்றி ஜோசப் என்னிடம் குறிப்பிட்டபோது, என்னுடைய அட்டவணையின்படி பார்த்தால், என்னால் இரண்டு நாட்கள் மட்டுமே தங்க முடியும் என்று நான் முதலில் நினைத்தேன். அப்பொழுது நான் செல்லவிருந்த மற்ற இடங்களின் பெருந்தன்மையால் எங்களால் அதை நீட்ட முடிந்தது, எனவே நாங்கள் அதை ஐந்து நாட்களாக்கினோம். எனவே நான் ஜோசப்பிடம், ஒருவிதத்தில் நான் இந்த பயணத்தை ஒருவிதத்தில் சிகாகோவை விட்டு கொஞ்ச காலம் விலகி இருக்க வைக்கபோகிற ஒன்றாக மாற்ற போகிறேன் என்றேன், ஏனெனில் நான் இங்கே மிக அதிகமாக இருக்கிறேன். பாருங்கள், நான் அதிகமாக வருவதால் ஜனங்கள் சலித்து போய் என்னை வரவேற்பார்களோ என்று நான் அஞ்சுகிறேன். யாரோ ஒருவர் பல முறை கூறியுள்ளார், "நீங்கள் சகோதரன் பிரன்ஹாமை அழைக்க விரும்பி, அவர் வீட்டில் இல்லாவிட்டால், சிகாகோவை தொடர்பு கொள்ளுங்கள். அவர் அங்கே இல்லையென்றால், லூசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டை தொடர்பு கொள்ளுங்கள். அந்த இடங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் இருப்பார்" என்றார். அது ஜோசப் அல்லது ஷ்ரீவ்போர்ட்டில் இருக்கும் சகோதரன் மூர். கடந்த - இந்த கடந்த இலையுதிர் காலத்தில், இந்த இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் அல்லது கோடைகாலத்தின் இறுதியில், நான் ஷ்ரீவ்போர்டில் ஒரு கூடார எழுப்புதல் கூட்டத்தில் இருந்தேன், நான் சகோதரன் மூரிடம் கூறினேன், நான் கூறினேன், "இப்பொழுது, சகோதரன் மூர் அவர்களே, இதுவரை நான் சந்திக்காத பல சகோதரர்கள் கிழக்கத்திய தேசத்திலும் மற்றும் பல்வேறுப்பட்ட இடங்களிலும் இருக்கிறர்கள், மேலும் அவர்கள் அதை கவனிக்கிறார்கள். அது அவர்களை கொஞ்சமாக புண்படுத்தி விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்." மேலும் நான் கூறினேன், "இப்பொழுது, இந்த கூட்டங்களை நான் முடித்தப்பிறகு, நான் எதுவரையென்றால்... கர்த்தர் என்னை வேறேதோவொன்றை செய்ய அழைக்கும்வரை, மேலும் பின்பு சுற்றியிருக்கும் மற்ற சில சகோதரர்களை சந்திக்கும் வரை, ஷ்ரீவ்போர்ட் மற்றும் சிகாகோவிற்கு வருவதை நான் ஒருவிதத்தில் குறைத்துக் கொள்ளப்போகிறேன்." 3. இப்பொழுது, யாரோ ஒருவர் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார், கடந்த இரவு பில்லி என்று நான் நம்புகிறேன், சென்ற இரவு, சில கூட்டங்களை நடத்த சிறிது நேரத்தை தெரிந்துக்கொள்ள சில சகோதரர்கள் என்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றான். நல்லது இப்பொழுது, நான் எந்த கூட்டங்களையும், எந்த பயண விவர திட்டத்தையும் (itinerary) ஏற்பாடு செய்வது கிடையாது. பயண திட்ட விவரங்கள் முழுவதும் ஷ்ரீவ்போர்ட், லூசியானாவில் தான் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாருங்கள், இந்த குழுவில் நாங்கள் பலர் இருக்கிறோம், ஒருவர் அதை ஏற்பாடு செய்து, இன்னொருவரும் அதை ஏற்பாடு செய்து, மற்றொருவரும் ஏற்பாடு செய்தால், அப்பொழுது, நல்லது, இந்த நபர் அதை தவறாக ஏற்பாடு செய்து விட்டார், எனவே நாங்கள் அதை ரத்து செய்யவேண்டியதாகிறது, நாங்கள் செய்தாகவேண்டும்.. ஓ, என்னே, அவர்களுக்கு வாக்கு கொடுத்தபிறகு அப்படி செய்வது என்பது அது புண்படுத்து வதாயிருக்கிறது. அந்த - அந்த அதிகார பூர்வமான வாக்குறுதியை ஷ்ரீவ்போர்ட், லூசியானாவில் இருக்கும் சகோதரன் மூர்தான் தருகிறார். மேலும் - மேலும் கிறிஸ்துமஸிற்கு பிறகு உடனே நாங்கள் வெளி நாடுகளுக்கு செல்லவில்லையென்றால்; எங்களிடம் கூட்டங்கள் இல்லாத காலியான தேதிகள் இருக்கின்றன. இப்பொழுது, ஓஹையோ, லிமாவில் இருக்கும் அந்த கடைசி தேதி வரை நான் தொடருகிறேன், ஜனவரி 10-ம் தேதியிலிருந்து தொடங்கி 15-ம் தேதி வரை பாப்டிஸ்டு ஜனங்களுடன் ஒரு அரங்கத்தில் லிமா, ஓஹையோவில் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த கடைசி தேதி அதுதான். 4. இப்பொழுது, அவர்கள் அங்கிருந்து கலிபோர்னியா வில் சிலவற்றை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அதாவது அவர்கள் கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவை சுற்றி சில தேதிகளை குறிக்கப் போகிறார்கள், அதன்பின் ஸ்பானிஷ் ஜனங்களுடன் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலும், பீனிக்சில், ஒரு சில இரவுகள் மட்டும், அதன்பின் அவர்கள் மறுபடியும் கிழக்கிற்கு வருகிறார்கள். இப்பொழுது, அக்டோபர் மாத கடைசியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும், நான் இடாஹோவிலிருந்து திரும்பி வந்தவுடன், அவர்கள் சிலவற்றை ஏற்பாடு செய்யப்போகிறார்கள், அது விர்ஜினியாவிலும் மேரிலாண்டிலும் அல்லது அந்த வழியில் இருக்கும் வேறேதோ இடத்தில் என்று நான் நினைக்கிறேன், அங்கே சில கூட்டங்களை... இன்னும் எனக்கு அது தெரியவில்லை. திரு. மூர் என்னிடம் எதுவும் கூறவில்லை. இந்த முறை நான் வீட்டிற்கு திரும்பிய பிறகு அவர் என்னிடம் கூறுவார். மேலும் இப்பொழுது, நீங்கள்.... உங்களுடைய, உங்கள் ஒவ்வொருவருடைய இடத்திற்கும் வர நான் விரும்புகிறேன். உலகம் முழுவதும், உலகத்தில் உள்ள எல்லா முக்கியமான நகரத்திற்கும் சுற்றுபயணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக, கிழக்கு கடற்கரையை விட்டு விட்டு மீண்டும் மேற்கிற்கு வருவதற்கு முன்பாக, சுற்றி இருக்கும் இடங்களில், சகோதரர்களை சந்திக்கும்படியாக, மூன்றிலிருந்து ஐந்து இரவுகளுக்கு, நாங்கள் சில துரிதமான சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்கிறோம். தேசத்திலுள்ள பல இடங்களில், கூட்டமானது முடிந்த பின்னர்... 5. என்னுடைய இருதயத்தில் ஏதோவொன்று இருக்கிறது, அதாவது இங்கே சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு குறிப்பிட்ட நகரத்திலிருந்து ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன், உங்களில் அநேகருக்கு அதை பற்றி தெரியும். அங்கே ஒரு லூத்தரன் கல்லூரியிலிருந்தது. அதற்கு முந்தைய கூட்டத்தில் அந்த மனிதன் என்னிடம் நான் ஒரு தரிசனங்களால் மெருகேற்றப்பட்ட குறிசொல்லு கிறவன் என்றார். நான்... பின்னர் எனக்கு அவர் எழுதி அனுப்பினார் மேலும் நான் ஒரு மிக மோசமான வேத போதகன் என்று என்று அவர் கூறினார். நல்லது, அது உண்மையென்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர் சொன்ன பிரகாரமாக அல்ல. அவர், "உங்களை போன்று ஜனங்களை சந்திக்கும் ஒரு மனிதன், சாத்தானால் குணப்படுத்த முடியாது என்று கூறுவதை கேட்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. ஏன்" என்றார். அவர், "சாத்தானால் குணபடுத்த முடியும் என்பதை நாங்கள் அறிவோம்" என்றார். "நான் வருகிறதான நகரத்தில்" என்றார். அவர், "அங்கே எங்களிடம் ஒரு பெண் இருக்கிறாள், அவள்... அவள் ஒரு சூனியக்காரி போன்றவள். வியாதியாய் தன்னிடம் வருபவர்களை அவள் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய நரம்புகளில் குத்தி, தன்னுடைய தலையிலிருந்து மையிரை இழுத்து, அவள் அதில் இரத்தத்தை எடுத்துக்கொள்வாள். மேலும் நதியண்டைக்கு நடந்து சென்று, அதை அவளுக்கு பின்னாக தூக்கி வீசுவாள். அவள் அந்த - அந்த நதிக்கரைக்கு நடந்து செல்லும் போது, ஏதேனும் ஒன்று அவளை திரும்பி பார்க்க செய்தால், அந்த வியாதி அந்த ஜனங்களுக்கு திரும்ப வந்துவிடும். அவள் திரும்பி பார்க்கவில்லையென்றால், அந்த ஜனங்கள் குணமாகி விடுவார்கள்" என்றார். அவர், "திரு. பிரன்ஹாமே, நான் சோதித்துப்பார்த்தேன், அந்த ஜனங்களில் குறைந்தது இருபது அல்லது முப்பது சதவீதம் குணமடைந்தார்கள்" என்றார். 6. அவர் கூறினார் "நீ வெறும் ஒரு சின்ன பையன்" என்னுடைய எல்லா நாற்பத்தி-ஏழு வருடங்களில். அவர், "நீ பிறப்பதற்கு முன்பிலிருந்தே நான் பிரசங்கித்து கொண்டிருக்கிறேன்" என்றார். மேலும் மேலும் நான், "நல்லது," என்று கூறி, அவருக்கு திரும்ப எழுதினேன், நான் ஒரு பெயெசெபூல் என்று அவர் கூறினார். நான் கூறினேன், "இப்பொழுது, முதலாவதாக, சகோதரனே, அதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன். ஏனெனில் நான் சரியாக இருந்தால், பின்பு நீங்கள் செய்தது என்ன? புரிகிறதா? நான் சரியாக இருந்தால்? புரிகிறதா? பின்பு நீங்கள் செய்தது என்ன? நீங்கள் பரிசுத்த ஆவியை தூஷித்து விட்டீர்கள் அது மன்னிக்க முடியாததாகும். 'அந்த கிரியைகளுக்கு விரோதமாக எவனாகிலும் ஒரு வார்த்தை பேசினால்,' இயேசு கூறினார், 'இந்த உலகத்திலும் அல்லது வர விருக்கின்ற உலகத்திலும் ஒருபோதும் மன்னிக்கப் படுவதில்லை." நான் கூறினேன், "அதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன் ஏனெனில் நீங்கள் அதை புரிந்துக்கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்." மேலும் நான், "நான் உங்களை நேசிக்கிறேன் ஏனெனில் நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மேல் போதுமான அளவுக்கு ஆர்வம் கொண்டதால், நான் தவறாயிருக்கிறேன் என்று என்னை திருத்த முயற்சிக்கிறீர்கள்" என்றேன். நான், "நான் அதை பாராட்டுகிறேன்" என்றேன். நான் தவறாயிருக்கும்போது யாரேனும் என்னை திருத்த முயற்சித்தால், நான் - நான் திருத்தப்படவே விரும்புவேன். ஆனால் நான் கூறினேன், "இப்பொழுது, அதாவது - அதாவது சாத்தானால் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதால், நான் உங்களுக்கு அந்த வேதவாக்கியத்தை கொடுக்க விரும்புகிறேன், அவனால் குணப்படுத்த முடியாது என்று இயேசு கூறினார். ஆகவே அதுவே அதை பற்றின கேள்வியை எனக்கு தீர்த்துவைக்கிறது." இயேசு கூறினார், அவர் சாத்தானை கொண்டு குணப்படுத்துகிறார் என்று அவரிடம் அவர்கள் கூறியபோது, அவர் கூறினார், "சாத்தானால் சாத்தானை துரத்த முடிந்தால், அப்பொழுது அவனுடைய இராஜ்ஜியம் பிரிந்திருக்குமே பாருங்கள்? எனவே நான் கூறினேன், "என்னை பொறுத்தவரை அதுவே அதை பற்றின கேள்வியை எனக்கு தீர்த்துவைக்கிறது...?... ஆனால்... நான் கூறினேன், "இப்பொழுது, அந்த சூனியக்காரியை பற்றின விஷயத்தில் உங்களை சரிபடுத்த," நான் கூறினேன், "நிச்சயமாக அந்த ஜனங்கள் குணமானார்கள்." நான் கூறினேன், "இன்றைக்கு நாட்டில் பல நபர்கள் தங்களை தெய்வீக சுகமளிப்பவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஜனங்கள் அவர்களிடம் செல்கிறார்கள், 'ஓ, எனக்கு வல்லமை இருக்கிறது, நான் இதை செய்கிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் கூறினேன், "நிச்சயமாக, அவர்கள்... அந்த ஜனங்கள் குணமடைகிறார்கள்," நான் கூறினேன், "அந்த சூனியக்காரியால் செய்யப்படுவது போன்றே அது இருக்கிறது. ஆனால் அதை செய்வது அந்த சூனியக்காரியல்ல; அந்த தெய்வீக சுகமளிப்பவரும் அதை செய்யவில்லை. அவர்கள் அந்த சூனியக்காரியின் மூலமாக தேவனை அணுகுகிறோம் என்று எண்ணுகிறதான அந்த ஜனங்களுடைய விசுவாசமாய் அது இருக்கிறது. விசுவாசமானது எங்கே இருந்தாலும் அதை தேவன் அங்கீகரிக்க வேண்டியவராயிருக்கிறார்." அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். 7. ஆகவே இதில்... ஓ, எப்படியாய் அந்த அதிகமான மனசாட்சி உறுத்தல் வந்தது, அப்பொழுது இந்த டீன் எனக்கு கடிதம் எழுதி, "எனக்கு உங்களோடு ஒரு நேர்காணல் வேண்டும்" என்றார். மேலாளர் அதை அனுமதித்தார். ஒரு பெரிய லூத்தரன் கல்லூரிக்கு, அங்கிருந்ததான வீட்டிற்கு அவர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அந்த மேஜையில் உட்கார்ந்துகொண்டு, நான், "நல்லது, இப்பொழுது நிச்சயமாக என்னை சாடுவார்கள்" என்று நினைத்தேன். ஆகவே அவர், "சகோதரன் பிரன்ஹாம், உங்களுடைய கூட்டங்களில் நாங்கள் இருந்திருக்கிறோம் மேலும் நிச்சயமாக அது பரிசுத்த ஆவிதான் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்" என்றார். நான், "ஆம், ஐயா" என்றேன். நான், "ஓ, என்னே" என்று நினைத்தேன். அவர், "லூத்தரன்களாகிய நாங்கள், தேவனை தேடுகிறோம்." அவர், "விசுவாசத்தின் மூலமாக நாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை தவிர வேறு ஏதோவொன்று வித்தியாசமாய் இருக்கிறது என்று உம்முடைய வாயிலிருந்து வருமானால், நாங்கள் அதை அறிந்துக் கொள்ள விரும்புகிறோம்." என்றார். நான், "நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?" என்று கேட்டேன். அவர், "நல்லது, நான் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை" என்றார். நான், "அப்போஸ்தலர் 19-ல் அந்த காலத்தில் இருந்த அந்த பாப்டிஸ்டுகளும் கூட அதை சிந்திக்கவில்லை" என்றேன். அவர்கள் விசுவாசித்தார்கள், கத்தினார்கள், கூச்சலிட்டார்கள், மேலும் மிகவும் சந்தோஷத்தோடு இருந்தார்கள். ஆனால் அவர்களோ இன்னும் பரிசுத்த ஆவியை பெறாமல் இருந்தார்கள். எனவே பவுல் அவர்கள் மீது தன்னுடைய கைகளை வைத்தான் அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டார்கள். " அவர், "நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். நான், "உங்களில் எத்தனை பேர் பசியாயிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "எங்கள் முழு கூட்டமுமே" என்றார். நான், "நல்லது, மேஜையை நகர்த்தி விட்டு, சுவரிடமாக சென்று முழங்கால் படியிடுங்கள்" என்றேன். அவர்கள் சுற்றி ஒரு பெரிய வரிசையை ஏற்படுத்தினார்கள், பெரிய வட்ட அரங்கம் அங்கேதான் நாங்கள் இரவு உணவு சாபிட்டோம். நான் சுற்றிலும் சென்று அவர்கள் மீது கைகளை வைத்தேன், எழுபத்தி இரண்டு பேர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டார்கள். ஆமென். எனவே அவர்கள் அங்கே ஒரு மகத்தான நேரத்தை கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, லூத்தரன்களுக்காக தேவன் அதை அமெரிக்காவில் செய்வாரென்றால், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், அது எங்கே இருந்தாலும், லூத்தரன்கள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள், அல்லது தேவனுக்காக பசிதாகம் கொண்ட யாருக்கு வேண்டுமானாலும் அவர் அதையே செய்வார். என்னே ஒரு மகத்தான காரியம். 8. இப்பொழுது, இன்றிரவு ஒரு சுவிசேஷ இரவை போன்றிருந்தது, ஆனால் நம்மால் முடிந்தால் நாம் அதை துரிதப்படுத்த வேண்டும். இன்றிரவு நான் சிறிது அதிக நேரம் எடுத்துக்கொண்டால், நாளை இரவு நான் சாட்சிகளை பற்றி கேட்க விரும்புகிறேன். சகோதரன் ஜோசப், அவர்கள் உள்ளே வந்தார்களா, அநேகர் உள்ளே வந்தார்கள். ("அவர்களிடம் விசாரிக்கும்படியாக நான் நேரம் ஒதுக்கவில்லை" என்று ஜோசப் போஸே கூறுகிறார்] ஓ, உங்களுக்கு நேரமில்லையா. இன்றிரவு இங்கே இருக்கும் எத்தனை பேர் கடந்த இரவு ஜெபித்ததால் தேவன் உங்களுடைய சரீரத்தை தொட்டார் என்று உணருகிறீர்கள்? உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும். இப்பொழுது, கடந்த இரவு ஜெபம் செய்து கொண்டவர்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, சுமார் பன்னிரண்டு பேரை இப்பொழுது நான் பார்க்கிறேன். ஆம். அங்கே ஒருவரை நான் பார்க்கிறேன், அங்கிருக்கும் அந்த சீமாட்டி. ஐயா, எல்லாம் சரி. அப்படியானால் நான் பார்ப்பது சரியாக பன்னிரெண்டு பேர்தான். நல்லது, இங்கே கிட்டத்தட்ட அறுபது அல்லது எழுபது பேர் என்னிடம் இருந்தார்கள் என்று நான் நினைத்தேன். அப்படியானால் அநேகமாக நான் வழக்கமாக செய்வது போன்று தொடர்ந்து செல்கிறேன், 'ஏனெனில் ஆரம்பத்தில் இருந்ததை விட நான் முன்னேறுவேன் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்? ஆகவே... நான் ஓரல் ராபர்ட்ஸின் ஊழியத்தை எடுக்க முடியாது. அதேபோல் ஓரல் ராபர்ட்ஸும் என்னுடைய ஊழியத்தை எடுக்க முடியாது. கர்த்தர் எங்கள் இருவரிடமும் ஏதோவொன்றை செய்யும்படியாக கொடுத் திருக்கிறார். மேலும்... ? ... நான், கர்த்தர் அருளிய வழியில் மட்டும்தான் நான் ஊழியம் செய்ய வேண்டும். ஆகவே இப்பொழுது நீங்கள் வரிசையில் இல்லாததால் குறை கூறாதீர்கள். ஏனெனில் நீங்கள் எங்கே உட்கார்ந்து இருக்கிறீர்களோ அங்கேயே தேவன் உங்களை குணப் படுத்த விரும்புகிறார். அது உண்மை. 9. அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். அது தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். தேவன் நல்ல தேவனாயிருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். அவர் உ உங்களுடைய வாஞ்சையை உங்களுக்கு தருவார். வேதாகமத்தில் இருப்பது போல, எப்படியாய் தோமா, "ஓ, நான் அதை விசுவாசிக்க மாட்டேன்" என்றான். இப்பொழுது, பாருங்கள், மற்ற எல்லா சீஷர்களும், "நிச்சயமாக, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். ஆம், ஐயா. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்" என்று சொன்னார்கள். தோமாவோ, "இல்லை, இல்லை, நான் அதை விசுவாசிக்க மாட்டேன். எனக்கு எனக்கு அதை காட்டிலும் அதிகமானது வேண்டும். எனக்கு சில ஆதாரங்கள் வேண்டும். நான் அதை விசுவாசிப்பதற்கு முன்பு, அவருடைய விலாவிலே என்னுடைய கைகளை போட வேண்டும் மேலும் அதுபோன்றதை செய்ய வேண்டும். ஆம், ஐயா" என்றான். அவர் ஒரு நல்ல தேவன். அவர், "தோமாவே, இங்கே வா, இப்பொழுது என்னை தொடு" என்றார். தோமா, "ஓ, நீர்தான் கர்த்தர். நீர்தான் என்பதை இப்போது நான் அறிந்திருக்கிறேன்" என்றான். "இப்பொழுது, நீ என்னை கண்டதினாலே விசுவாசிக்கிறாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுடைய பலன் எவ்வளவு அதிகமாயிருக்கும்" என்றார். பாருங்கள்? அதுதான் காரியம். நீங்கள் விசுவாசித்தாகவேண்டும். கொரிந்து சபையிடம் பவுலுக்கு என்னே ஒரு நேரம் உண்டாயிருந்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஒவ்வொருவரும் தாங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டோம் என்பதை விசுவாசிப்பதற்கு முன்பு அவர்கள் அந்நிய பாஷையையோ, சங்கீதத்தையோ, ஏதோ ஒரு விதமான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்று வைத்திருந்தார்கள். பாருங்கள்? அவர்களுடன் பவுலுக்கு பிரச்சனை இருந்தது. எபேசியர்களோடோ, கலாத்தியர்களோடோ, அவர்களில் யாரிடமுமே அவனுக்கு ஒருபோதும் பிரச்சனை இருந்ததில்லை. அதை பற்றி அவன் பேச வேண்டியதேயில்லை. ஏனெனில் அவர்கள் - அவர்கள் விசுவாசம் கொண்ட ஜனங்களாக தேவனை அப்படியே விசுவாசித்து, அதை ஏற்றுக் கொண்டார்கள், மேலும் - மேலும் எல்லாமுமே சரியாக இருந்தது. பாருங்கள்? எனவே அவர்கள்... ஆனால் தேவன் நல்ல தேவனாயிருக்கிறார். நீங்கள் அதை அந்த வழியில் விரும்பினால், உங்களுக்கு அவர் அந்த வழியிலே அதை தருவார். ஆனால் நான் - நான் அவரை அப்படியே விசுவாசிக்க விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? அவரை அப்படியே அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அதை அந்த வழியிலேயே விசுவாசிக்கவே விரும்புகிறேன். 10. இப்பொழுது, நாம் ஒன்றாக ஐக்கியம் கொண்டு இருக்கும்போது இப்போது கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. மேலும் நாளை இரவு, நாளை இரவுக்கு பின்னர், அதாவது சில... சகோதரன் ஆஸ்பர்ன், சகோதரன் டாமி ஹிக்ஸ், சகோதரன் ஆகில்வி இங்கே இருந்து, இந்த கூட்டத்தை இந்த வாரம் முழுவதும் நடத்தப்போகிறார்கள் என்று ஜோசப் அறிவித்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, அவர்கள் மிக அருமையான நல்ல சகோதரர்கள். இப்பொழுது, சகோதரன் ஆஸ்பர்னை எனக்கு மிக நன்றாக தெரியும். எனக்கு அவரை மிக நன்றாக தெரியும். மேலும் அவர் ஒரு அருமையான சகோதரன் என்பதை நான் அறிவேன். சகோதரன் டாமி ஹிக்சை எனக்கு மிக நன்றாக தெரியும். மேலும் அவரும் ஒரு அருமையான சகோதரன் என்பதை நான் அறிவேன். எனக்கு சகோதரன் ஆகில்வி (Ogilvie) அதிகமாக பரிட்சியமானவரல்ல. அவரை நான் இரண்டு முறைதான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவர் நிச்சயமாக ஒரு அருமையான சகோதரனாக தெரிகிறார். நீங்கள் தொடர்ந்து வந்து, உங்கள் அண்டை வீட்டுகாரர்களையும் மற்றவர்களையும் அழைத்து வந்து, இந்த சகோதரர்கள் பேசுவதை கேட்கவேண்டுமென்று, நான் நான் விரும்புகிறேன். அவர்கள் அருமையான மனிதர்கள் இல்லையென்றால் அவர்கள் இருக்கிற பிரகாரமாக தேவன் அவர்களை பயன்படுத்த மாட்டார். 11. இப்பொழுது, பில்லி கிரஹாம் என்னுடைய சொந்த ஊருக்கு வந்தபோது நான் அங்கிருந்து வந்து விட்டேன். நான் எப்போதுமே பில்லி கிராஹாமை சந்திக்க விரும்பினேன். ஆனால் இப்பொழுது அவர் லூயிவில்லில் இருந்து, பிரசங்கித்து கொண்டிருக்கிறார். என்னுடைய குடும்பத்தாரும் ஏனையோரும் கலந்து கொண்டி ருக்கிறார்கள். அந்த கூட்டத்திற்கு ஒத்துழைக்கும் விதத்தில் எங்களால் முடிந்த எல்லா பிரயாசத்தையும் நாங்கள் செய்கிறோம், எங்களுடைய சபைகள் மூடப்பட்டிருக்கிறது மேலும் ஒவ்வொன்றுமே, சுமார் என்பத்தி ஐந்து சதவீதம் மதுபானங்கள் லூயிவில், கென்டக்கியிலிருந்துதான் வருகின்றன, அங்குதான் நான் வசிக்கிறேன். மேலும் புகையிலை தொழிற்சாலைகள், அது தான் சாத்தானுடைய சிங்காசனமாயிருக்கிறது. லூயிவில்லில் ஒரு எழுப்புதலானது ஏற்பட்டு ஏதோவொன்றை ஆரம்பிக்கும் மட்டுமாக தேவன் அந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமை அபிஷேகிக்கும் படியாக, சிகாகோவில் இருக்கிறதான ஜனங்களாகிய நீங்கள் இப்பொழுது, அவருக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். ஜெபியுங்கள். அவருக்காக நான் எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் ஜெபிக்கிறேன் மற்றும் எல்லாமுமே, ஏனெனில் தேவன் அந்த மனிதனை ஒரு மகத்தான விதத்தில் பயன்படுத்துகிறார். ஆகவே எனக்கு சொல்லப்பட்ட பிரகாரமாக, ஒரு அருமையான சகோதரன். 12. இப்பொழுது, பழைய ஏற்பாட்டிற்கு மீண்டும் திரும்பி சென்று, வாசிப்பதற்காக நான் ஒரு சிறு வேதவாக்கியத்தை, ஒரு சில வார்த்தைகளை இங்கே இரண்டு இராஜாக்கள் 9 -ம் அதிகாரம், 30-ம் வசனத்திலிருந்து எடுக்க விரும்புகிறேன். யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் முகத்திற்கு வர்ணமிட்டு,... தன் தலையைச் சிங்காரித்துக் கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து. (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழிபெயர்ப்பு] வாசிக்கப்பட்ட தம்முடைய வார்த்தைக்கு கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. இப்பொழுது, நாம் மீண்டுமாக பழைய ஏற்பாட்டிற்கு செல் கிறோம், ஏனெனில் பழைய ஏற்பாடு எப்போதுமே புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமாயிருக்கிறது. எபிரேயர் 11-ல் அவர்கள் உதாரணங்களாக இருந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது, அதாவது அவர்கள் உதாரணங்களாக இருந்தார்கள் என்று. மேலும் எபிரெயர் 12-ல் அது கூறுகிறது, ...மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு... விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (கர்த்தாரகிய இயேசு கிறிஸ்து.) இப்போது, அந்த ஜனங்கள் தேவனிடமாக நடந்து கொண்ட அந்த குறிப்பிட்ட நடக்கைகளின்நிமித்தம், தேவன் அப்போது அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோமானால், பின்பு நாமும் அவர்கள் நடந்துகொண்ட அதே விதத்தில் நடந்தால், அவர்களுக்கு கிடைத்த அதே பலன்தான் நமக்கும் கிடைக்கும் என்பதை நாம் கண்டறிகிறோம். நீங்கள் அதை அப்படியே எதிர்பார்க்கலாம், 'ஏனெனில் தேவன் ஒருபோதும் மாறுவது கிடையாது. அவர் அப்படியே மாறாதவராயிருக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்கள் மாறாத வைகளாய் இருக்கின்றன, அவருடைய தண்டனைகளும் மாறாதவைகளாயிருக்கின்றன. கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 13. பின்பு நான் பார்க்கபோகிறேன்... நான் மறந்து விட்டேன், இன்றிரவு பில்லி ஜெப அட்டைகளை கொடுத்தானா என்று கேட்கும்படி அவர்கள் என்னை அவனிடம் அழைத்துவந்தார்கள். அவன் கொடுக்க வில்லையென்றால், நாம் சிலவற்றை கொடுக்க வேண்டும், அநேகமாக... உங்களுடைய அட்டையை கீழே போட்டு விடாதீர்கள். அவைகள்... இங்கே எத்தனை பேர் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள்? உங்களுடைய கரங் களை உயர்த்துங்கள். சரி, அது நல்லது. எப்படியாயினும் ஜெபிப்பதற்கு, ஒரு ஜெப வரிசைக்கு போதுமானது இருக்கிறது, நாம் இல்லையென்றால்... நாம் செல்லலாம், தொடர்ந்து செல்லலாம். எனவே வியாதியஸ் தர்களுக்காக ஜெபிக்கும்படியாக இன்றிரவு நான் சுவிசேஷ பகுதியை சற்று குறைத்துக்கொள்ளபோகிறேன். 14. இப்பொழுது, யேசபேல். யேசபேல் என்று சொன் னாலே, ஒவ்வொருவரையும் நடுங்க வைக்கிற ஒரு பெயராய் அது இருக்கிறது. அது மார்த்தாள், ரூத், அல்லது மரியாள் அல்லது - அல்லது மற்ற பெயர்களை போல அதுவும் ஒரு வழக்கமான பெயர்தான். ஆனால் அவர்கள் யேசபேல் என்கின்ற அந்த பெயரை கேட்டால் போதும், அது எல்லாவற்றிற்கும் காரணம் யாரென்றால் தவறான பாதையை எடுத்த ஒரு ஸ்திரீதான். இப்பொழுது, நான் யேசபேலை கற்பனை செய்து பார்க்கிறேன், யேசபேல் என்கின்ற பெயரை வைத்துக் கொண்டதால் மாத்திரம் அவள் என்னவாக இருந்தாளோ அதுவாக அவள் ஆகவில்லை. அதை செய்தது அவளுடைய பெயரல்ல; அவளுடைய நடத்தைதான் அவள் அப்படியாக இருக்கும்படி செய்தது. செய்தது. அதை செய்தது அதுதான். அவளுடைய நடத்தை உங்களை நடுங்க வைப்பது போல அந்த பெயர் நம்மை நடுங்க வைக்க கூடாது. ஆனால் நீங்கள் யேசபேல் என்று குறிப்பிட்டால், "ஓ ஓ ஓ, என்னே, " ஆனால் அவளுடைய சில பாவத்தை குறிப்பிட்டால், "ஓ நல்லது, அதெல்லாம் பரவாயில்லை." அது அந்த... அவள் என்னவாக இருந்தாளோ அதுவாக அவளை உருவாக்கியது அவளுடைய பெயரல்ல; அவளுடைய பாவம்தான் அவளை உருவாக்கியது - அவள் என்னவாக இருந்தாளோ அதுவாக அவளை உருவாக்கியது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாக உங்களை உருவாக்குவது உங்களுடைய பெயரல்ல. உங்களுடைய குணாதிசயம் தான் உங்களை உருவாக்குகிறது. உங்களுடைய குணாதிசயமானது உங்களை வனைந்து, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாக உங்களை உருவாக்குகிறது. 15. நான் எப்பொழுதுமே "நான் ஒரு மனிதனுடைய வீட்டிற்குள் செல்லட்டும்" என்று கூறுவேன். அவன் வீதியில் நின்று சாட்சி கூறட்டும், பாடட்டும், கூச்சலிடட்டும், அந்நிய பாஷையில் பேசட்டும், ஆவியில் (Spirit) நடனமாடட்டும், அவன் விரும்பிய எதை வேண்டு மானாலும் செய்யட்டும்; நான் அவனுடைய வீட்டிற்குள் சென்று அந்த சுவர் முழுவதும் மாட்டிவைக்கப் பட்டிருக்கிறதான பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை (pin-up girls) பார்க்கட்டும்... அவனுடைய மேஜையின் மீது அவன் வாசிக்கிறதான இந்த வார, மாத இதழ்களை நான் பார்க்கட்டும், அவன் வானொலியை போட்டு அந்த ஆப்பிரிக்காவின் முட்டாள்தனமான ராக் அண்ட் ரோல் மற்றும் பூகி வூகியை வைப்பதை நான் கவனிக்கட்டும், அவன் என்ன ஆவியை பெற்றிருக்கிறான் என்று சரியாக என்னால் இப்பொழுதே உங்களிடம் சொல்ல முடியும். அது எதினால் போஷிக்கப்படுகிறது என்பது புரிகிறதா? அவன் வீதியில் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல, அவன் உண்மையாகவே எதினால் போஷிக்கப் படுகிறான் என்பது இங்கேதான் இருக்கிறது. அதுதான் அவனுடைய உணவு பழக்கமாயிருக்கிறது. அது உண்மை. நான்... எவ்வளவு... அவன் எவ்வளவு நன்றாக உரிமை கோரினாலும், எவ்வளவு நல்ல சமுதாயத்திலிருந்தாலும், அவன் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவனுடைய சமுதாய அந்தஸ்து என்னவாக இருந்தாலும், அது ஒரு புள்ளி அளவு கூட வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அவனுடைய ஆவி எதினால் போஷிக்கப்படுகிறது, என்ன இசையை அவன் கேட்கிறான், அவன் எதை வாசிக்கிறான், அவன் எதை பார்க்கிறான் என்பதை கவனியுங்கள். அவன் எதினால் உருவாக்கப்பட்டிருக்கிறான் என்று அப்பொழுது உங்களால் கூற முடியும். அவனுடைய குணாதிசயம் எப்பொழுதுமே தெரிவிக்கும். 16. இப்பொழுது, அநேகமாக ஒரு காலத்தில் யேசபேல் ஒரு இனிமையான சிறுமியாக இருந்திருக்கலாம், மற்ற எந்த ஒரு சிறுமியை போலவும், அவளும் தன் தாயின் முழங்காலையும் தன் தந்தையையும் சுற்றிசுற்றி துள்ளி குதித்திருக்கலாம். ஆனால் கொடூரத்திற்கும் பாவத்திற்கும் அவளுடைய பெயர் வரலாற்றில் ஒரு சிறந்த உதாரணமாக போகிறது என்றும், வேதாகமத்திலோ அல்லது எந்த இடத்தினுடைய வரலாற்றிலும் இருக்கிற ஸ்திரீகளின் பெயர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பெயராக இடம் பெறப்போகிறது என்றும், அந்த தந்தையும் தாயும் ஒருபோதும் யோசித்துகூட இருக்க மாட்டார்கள். லேடி மெக்கபி அவளுக்கு ஈடாகமாட்டாள். லேடி மெக்கபூ சிகார் புகைக்கையில், வேகமாக குதிரை வண்டியை (carriage) வீதிகளினூடாக ஒட்டிச்சென்றதற்காக ஒக்லஹோமாவில் கைது செய்யப்பட்டாள். ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் இங்கே சந்திக்கை யில், ஒரு மிகப்பெரிய கூட்டத்தில், அவளை பற்றிய இந்த கதையை டாக்டர் ஐபென் சொன்னபோது அவரிடம் கேட்கப்பட்டது, அவள் எவ்வளவு மோசமானவளாக இருந்தாள் என்ற இந்த கதையை அவர் கூறினார்... அவர்கள் அவளை பிடித்து அவள் மீது தாரை ஊற்றி இறகுகளினால் மூடியபோது [Tarred and Feathered - பழங்காலத்திய தண்டனை], அவர்கள் -- அவர்கள் அவளை கைகளால் கூட தொட விரும்பாத அளவுக்கு அவள் மிகவும் அருவருப்பாயிருந்தாள். ஒவ்வொருவரும் அந்த கதையை தங்களுடைய இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கேட்கும் அளவுக்கு அவர் அந்த கதையை அப்பேற்பட்ட விதத்தில் கூறினார். அவர் மிகவும்... அவர் கதையை சொல்லி முடித்த பின்பு அவர் ஒலிபெருக்கியை விட்டு பின்னாடி சென்றார், அவர் ஒரு சிறிய நபராயிருந்தார். அவர், "இந்த உலகத்தில் இருக்கும் மதங்களிலுள்ள பெரும் மதிப்பிற்குரிய மனிதர் களே, லேடி மேக்கபியின் கைகளை சுத்தப்படுத்துவதற்கு உங்களுடைய மதத்தில் எதாவது இருக்கிறதா?" என்று கேட்டார். ஒவ்வொருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர் காற்றில் துள்ளிகுதித்து, தன்னுடைய பாதங்களை ஒன்றாக இடித்து, தன்னுடைய கரங்களை தட்டி, "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவளுடைய கைகளை மாத்திரமல்ல ஆனால் அவளுடைய இருதயத்தையும் சுத்தப்படுத்தும்" என்றார். அது சரி. கிறிஸ்தவ மார்க்கத்தின் அர்த்தமே அதுதான். அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாயிருந்தாலும் அது அவர்களை சுத்தப்படுத்தும். எனவே அவ்வளவுதான். 17. குட்டி யேசபேல், அவள் ஒரு சிறுமியாக வீட்டில் சுற்றி சுற்றி துள்ளிகுதித்த போது, குதியாட்டம் (skipping) செய்த போது, விளையாடியபோது, கயிற்றை தாண்டி குதித்த போது, அல்லது சிறு பெண்பிள்ளைகள் செய்த எல்லாவற்றையும் செய்தபோது. அவள் அந்தவிதமாக மாறுவாள் என்று அவர்கள் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் அவள் என்னவாக இருந்தாளோ அதுவாக அவளை உருவாக்கியது எதுவென்றால் வீட்டில் அவளுக்கு போதிக்கப்பட்ட விதமே. அவள் ஒரு அஞ்ஞானியாய் இருந்தாள். வீட்டில் உங்களுக்கு என்ன போதனைகள் போதிக்கப்படுகிறதோ, பெரும்பாலும் அதுவாகத்தான் நீங்கள் ஆகிறீர்கள், அதாவது எந்த விதமான போதனைகளை நீங்கள் கவனிக்கிறீர்களோ அதுவாக நீங்கள் ஆகிறீர்கள். தேவனை, யேகோவாவை வெறுக்கும் படியாக அவளுக்கு போதிக்கப்பட்டது, ஏனெனில் அவள்... அவளுடைய தெய்வம் பாகாலாயிருந்தான். தேவனையும் தேவ ஜனங்களையும் வெறுக்கும்படியாக அவளுக்கு போதிக்கப்பட்டது. மேலும் அவளுடைய இருதயத்தி லிருந்த அந்த வெறுப்புதான், அதுதான் அவள் என்னவாக இருந்தாளோ அதுவாக அவளை உருவாக்கியது. 18. ஆனால் ஓ, என்னே. மற்றுமொரு காரியம், வியப்பொன்றுமில்லை ஆகாப்... அவனுடைய தகப்பன் தொடக்கத்தில் இருந்தே பின்வாங்கிப் போனவனாயிருந்தான். ஆகாப் ஒரு எல்லைக்கோட்டு, வெதுவெதுப்பான விசுவாசியாயிருந்தான், இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஒரு பயனற்ற சுமை இருப்பது போல அந்நாளில் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு பயனற்ற சுமையாயிருந்தான். இருமனம் உள்ளவனாய் எப்பொழுதும் நிலையற்ற ஒரு மனிதனாய் அவன் இருந்தான். ஆனால் அவன் ஒரு அழகிய உருவமுள்ள இளைஞனாய், தன்னுடைய தலை மயிரை மழமழப்பாக படிய சீவினவனாயிருந்தான் (hair slicked down) என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன், உங்களுக்கு தெரியும், ஒருவிதத்தில் இங்கிருப்பவைகளோடு வெளியே செல்லும் இந்த வாலிப பையன்களில் ஒருவனை போன்று, அவைகளை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள், வேகமாக ஓட்டப்படும் ஹாட் ராட்ஸ் (Hot rods மிக வேகமாக ஓடும்படி மாற்றியமைக்கப்பட்ட கார்கள்], அவ்வாறாக ஏதோ அழைப்பீர்கள். உங்களுக்கு புரிகிறதா? இன்றைக்கு வாலிப பையன்களில் ஒருவன் ஓட்டி திரிவதை போல... உங்களுக்கு தெரியும், அவன் அவ்விதமான ஒரு மனிதன் என்பதையே அது காண்பிக்கிறது இல்லையேல் அவ்விதமான ஒரு பெண்ணினால் அவன் காதல் வயப்பட்டிருக்க (fell) மாட்டான். அது உண்மை. இஸ்ரவேல், இஸ்ரவேல் ஜனங்களில் தான் திருமணம் செய்ய வேண்டும். அவர்கள் கலப்பு திருமணம் செய்யக்கூடாது. அது சரியென்று உங்களுக்கு தெரியும். அவர்கள்... இன்றைக்கும் கூட நீங்கள் அவ்வாறு, அவிசுவாசிகளை விசுவாசிகளோடு இணைக்க கூடாது. அது தேவனுடைய சட்டத்திற்கு, வேத சட்டத்திற்கு புறம்பானது. 19. மேலும் எனவே, உங்களுக்கு தெரியும், குட்டி யேசபேல் தன்னுடைய வீட்டில் ஒரு விஷயத்தை கற்றுக்கொண் டாள், அது முகவர்ணத்தை பயன்படுத்துவதாயிருந்தது. அது அஞ்ஞானிகளின் பழக்கவழக்கம். எந்த முகவர்ணமும், உலகத்தில் ஒருபோதும் தானாய் தோன்றியதில்லை, ஆனால் முகத்திற்கு வர்ணம் பூசக்கூடிய அனைத்துமே அஞ்ஞானிகளிடம் இருந்து தோன்றியது, அது எப்போதுமே விசுவாசிகளால் கண்டிக்கப்படுகிறது. ஒரு சில நிமிடங்களுக்கு உங்களை மிகவும் அசௌகரியமாக உணரவைக்க, இது மிகவும் ஆழமாக தாக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்பொழுது, என் மீது கோவப் படாதீர்கள்; நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால் எது உண்மையோ அதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், நான் ஆப்பிரிக்கா காடுகளில் இருந்து இப்பொழுதுதான் திரும்பினேன். அந்த அஞ்ஞான பழங்குடிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் தங்களுடைய முகங்களுக்கு வர்ணம் பூசி, மிகப்பெரிய காதணிகளை மாட்டிக் கொள்வார்கள். இந்திய காட்டு மிராண்டியான அஞ்ஞானி தன்னுடைய முகத்திற்கு வர்ணம் பூசி, அவன் அதற்கு - அதற்கு... போகும்போது யுத்தசடங்கிற்கான முக வர்ணத்தை (war paint) பூசிக்கொள்வான், அந்த யுத்தம் என்பது அவனுடைய விக்கிரகங்களை சுற்றி வழிபடுவதாக இருக்கிறது. அவன் முகவர்ணம் பூசிக்கொள்ளுகிறான். உங்களுக்கு வெட்கமாயிருக்கிறதா? பாருங்கள்? அது அஞ்ஞானிகளின் அடையாளமாயிருக்கிறது. அது கிறிஸ்தவ சபைக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது மிகவும் பரிதாபமானது, அது அப்படிதானே? நிச்சயமாக அது பரிதாபமானதுதான். அதை உள்ளே கொண்டுவந்தது எதுவென்றால் அந்த பலவீனமான பிரசங்க பீடம்தான். அந்த பிரசங்கி தன்னைக்குறித்து தானே வெட்கப்பட வேண்டியவனாயிருக்கிறான். 20. எனவே முகவர்ணம் பூசுவது அவளுடைய வழக்கமாக இருந்தது; அவள் தன்னை தானே ஒரு கவனத்தை கவர்ந்து இழுக்கும் ஒரு அழகு பட்டாம் பூச்சியாக்கிக்கொண்டாள் (butterfly). மேலும் சகோதரனே, அந்த ரகம் பல நல்ல ஆண்களை காதல் ஆசை காட்டி மோசம்போக்கும் ரகமாயிருக்கிறது. அது உண்மை. அவர்களை ரோஜா மொட்டு போன்ற இதழோடும், அதின் மீது மிக அதிகமான அழகு சாதனம் (Max Factor) பூசியபடியும் வீதியில் பார்க்கலாம், ஆனால் அது ஒருபோதும் பாவ சுருக்கங்களை (sin wrinkles) எரித்துப்போடாது. ஒருக்காலும் நீங்கள் அவ்வாறு யோசிக்காதீர்கள். தேவன் சரியாக அதினூடாக நோக்கிப் பார்க்கிறார். எனவே அதை பார்ப்பதற்கு அழகாயிருக்கவைக்கும் படி எப்படி அதை பூசிக்கொள்வது என்பதை யேசபேல் அறிவாள். ஆகவே இந்த யூத இளைஞன், ஆகாப் இராஜாவானபோது, அவள் அந்த மெனிக்யூரை (Manicure) தன்னுடைய கண்களில் பூசிக்கொண்டு, அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்களோ அதை பூசிக் கொண்டு, உங்களுக்கு தெரியும், அவள் அவைகளை முன்னும் பின்னும் சிமிட்டினாள், ஆகாபின் இருதயம் குட்டிகரணம் அடிக்க ஆரம்பித்தது, ஏனெனில் அவனுக்கு மேலானதை போதிக்கும்படி அவன் தேவனை அங்கே கொண்டிருக்கவில்லை. அது உண்மை. எனவே என்னே, அது என்னே ஒரு - என்னே ஒரு காரியமாயிருந்தது. 21. இப்பொழுது, அவள் ஆகாப்போடு காதல் விளையாட்டு விளையாட ஆரம்பித்தபோது, ஆகாப் அவளை திருமணம் செய்துகொண்டான். அவன், "அவள்தான் எனக்கேற்றவள்" என்று நினைத்தான். பல ஆண்கள் அதுபோன்ற தவறை செய்திருக்கின்றனர். பல ஆண்கள் அதை செய்திருக்கிறார்கள். துணி துவைக்கும் நாளில், அல்லது அவள் கழுவி சுத்தமான பிறகு நீங்கள் அவளை காணவேண்டும். நிஜமாகவே, அது உங்களுடைய மனதை முற்றிலும் மாற்றிவிடும். எப்படியிருந்தாலும் குணாதிசயத்தை பார்த்து பெண்ணை திருமணம் செய்யவேண்டுமே தவிர தோற்றத்தை பார்த்தல்ல. இளைஞனே, நான் உன்னிடம் கூறுகிறேன், நீ அவளை திருமணம் செய்து கொண்டால், அவள் முழுவதும் முகவர்ணம் பூசுகிறவளாயிருந்தாள், இந்த நாட்களில் ஒன்றில் அவளின் சாயம் படிப்படியாக காணாமல் போய் விடும். அவள் கண்ணுக்கு இனியவளாக (pretty) இருந்தாலும் கூட, அதுவும் இந்த நாட்களில் ஒன்றில் இல்லாமல் போய்விடும். அவளுக்கு முதல் குழந்தை பிறக்கும் வரை காத்திரு, அந்த பல் வெளியே தெரிய ஆரம்பிக்கும். கொஞ்ச காலம் கழித்து, அவளின் கண்களின் மீது சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும், மேலும் அந்த தலை மயிரானது வெள்ளை ஆகிவிடும். ஒரு நாள் காலையில் நீ எழுந்து நீ யாரை திருமணம் செய்திருக்கிறாய் என்று வியப்படைவாய். அது உண்மை. நான் - நான் அதை நிஜமாகவே கூறுகிறேன், நகைச்சுவைக்காக அல்ல. இல்லை, ஐயா. அது உண்மை. நான் கூறப்போகும் ஏதோவொன்றிற்காக நான் ஒரு அடித்தளத்தை போட்டுக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை. ஆனால் நீ அவளை நேசிக்கிறாய் ஏனெனில் நீ ஜெபித்த ஏதோவொன்று அவளிடம் இருக்கிறது, மேலும் தேவன் உங்களை ஒன்றிணைத்தார், அவளுக்கு வயதாகி, சுருக்கம் விழுந்து அசிங்கமாக இருக்கலாம்; அது ஒரு புள்ளி அளவு கூட வித்தியாசத்தை ஏற்படுத்தாது, அவளை நீ நித்தியம் முழுவதும் நேசிப்பாய். "தேவன் இணைத்ததை, எந்த மனுஷனாலும் பிரிக்க முடியாது." அது உண்மை. எனவே முதலில் தேவனிடம் கேளுங்கள். 22. ஆனால் ஆகாப்போ, அங்கே சென்று இந்த பெண்ணின் மீது அவன் காதல் வயப்பட்டான். எனவே அவன் வந்து, அவளை விவாகம் செய்து, அவளை இஸ்ரவேலுக்குள் அழைத்துவந்தான். ஒரு பாகாலை தொழுதுகொள்ளுகிறவளாக, அவள் வந்தபோது... மேலும் ஆகாப் அங்கே சென்று அவன் ஒரு எல்லைக்கோட்டு விசுவாசி (borderline believer) என்று காண்பித்ததை நீங்கள் கவனித்தீர்களா. இந்த பெண்ணை அடைவதற்காக அவன் உலகத்தோடு சென்று தேவையில்லாமல் அதிக நேரத்தை செலவழித்தான் (dilly- dallying). அங்குதான், கோட்டை தாண்டி சென்றதால்தான் பல நபர்கள் தவறு செய்து இருக்கிறார்கள். தேவன் ஒரு எல்லைக்கோட்டினை வைத்திருக்கிறார். என்னுடைய நண்பர் ஒரு வயதான மெத்தோடிஸ்டு பிரசங்கியார், சகோதரன் கெல்லி, அவரும் சகோதரி கெல்லியும் ஒரு பாடலை பாடுவது வழக்கம், நாம் தடுப்பு வேலிகளை கீழே போட்டுவிட்டோம்; நாம் தடுப்பு வேலிகளை கீழே போட்டுவிட்டோம். நாம் பாவத்தோடு சமரசம் செய்துவிட்டோம். நாம் தடுப்பு வேலிகளை கீழே போட்டுவிட்டோம்; செம்மறி ஆடுகள் வெளியே சென்று விட்டன, ஆனால் வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன? நீங்கள் தடுப்பு வேலிகளை கீழே போட்டுவிட்டீர்கள். அதுதான் விஷயம். நீங்கள் பாவத்தோடு சமரசம் செய்து விட்டீர்கள். அதினால்தான் வெள்ளாடுகள் உள்ளே வந்தன, ஏனெனில் நீங்கள் தரத்தை கீழே போட்டு விட்டீர்கள். 23. ஏன், பல வருடங்களுக்கு முன்பு, பிரசங்க பீடத்திற்கு தூக்கிவரப்பட்ட வயதான ஜான் ஸ்மித் அவர்களால் இரண்டு மணி நேரம் மட்டுமே பிரசிங்கக்க முடிந்தது, அவர் மிகவும் வயதானவராயிருந்தார். அவர் இரண்டு மணி நேரம் மட்டுமே பிரசங்கிப்பார், அதுவும் ஒலிபெருக்கி இல்லாமல். அவர் கூறினார், "அந்த எண்ணமே, " உண்மையாகவே, அதுதான் மெத்தோடிஸம். அவர், "நம்முடைய மெத்தோடிஸ்டு குமாரத்திகள் தங்களுடைய கைகளில் நகைகளை (jewelry) அணிந்திருக்கிறார்கள் என்ற யோசனையே..." என்று கூறினார். இப்பொழுது அவர்களை குட்டைக்கால் சட்டைகளுடன் பார்த்தால் அவர் என்ன செய்வார்? பாருங்கள்? இப்போது அவர் மெத்தோடிஸ்டுகளை, பாப்டிஸ்டுகளை, பெந்தெகொஸ்தே யினர்களை பற்றி என்ன நினைப்பார்? ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள், எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றது... அது எங்கே இருந்து வந்தது என்பதை மாத்திரமே, அதினுடைய பின்னணி எங்கே இருக்கிறது என்பதையே நான் உங்களுக்கு காண்பித்தேன். பின்பு அதை பற்றி நான் ஏன் மிகவும் கோவப்படுகிறேன் என்பதை உங்களால் காண முடியும், உங்களிடம் அல்ல, அதை செய்யும்படி உங்களை செய்யவைக்கிறதான அந்த பிசாசின் காரியங்களிடம், நான் ஏன் மிகவும் கோவப்படுகிறேன் என்பதை உங்களால் காண முடியும். இப்பொழுது, நான் இதை கூறுகிறேன் என்பதால் அதை யோசிக்காதீர்கள். நான் அதை கூறினேன் என்பதற்காக மாத்திரம் நீங்கள் வெளியே சென்று கழுவி சுத்தம் செய்துகொண்டால், அப்பொழுது நீங்கள் இன்னும் தவறாகவே இருக்கிறீர்கள். முழங்கால் படியிட்டு ஜெபியுங்கள், தேவன் உங்களுடைய இருதயத்திற்குள் வர அனுமதியுங்கள், அப்பொழுது நீங்கள் எப்படியிருந்தாலும் சுத்தமாகி விடுவீர்கள். நான் நிச்சயமாயிருக்கிறேன். ஏனெனில் உங்களுடைய கட்டுப்பாட்டை அந்த ஆவி கொண்டிருக்கும் வரை, நீங்கள் என்னோடு வீண்வம்பு செய்து, திரும்பி சண்டையிட்டு, "அது அப்படி அல்ல" என்றும் மேலும் அதுப் போன்றவைகளையும் கூறுவீர்கள். பார்வையில்லாமல் மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்ட (blind staggers) ஒரு செம்மறி ஆட்டை போல் உங்களுடைய தலையை ஆட்டுவீர்கள். ஆனால் அது எந்த நன்மையையும் செய்யாது, 'ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் என்னில் இருந்தால், நீங்கள் நியாயத்தீர்ப்பை சந்திப்பதற்கு முன்பு உங்களை அந்த காரியத்தில் சரிப்படுத்திக் கொள்ளவது நல்லது. அது சரி. ஆனால் மாறுபாடான ஏதோவொன்றை கூறும்படி உங்களுடைய பாஸ்டரை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையில், கர்த்தர் உரைக்கிறதாவதா யிருக்கிறது. அது உண்மை. 24. எனவே யேசபேல் தன்னுடைய தலையை சிங்காரிக்கி றாள் (அது அவளுடைய தலை மயிரை கத்தரித்து, மேலே சுருட்டி விடுவதாயிருந்தது) என்பதை நாம் கண்டறிகிறோம், அவளுடைய தலையை சிங்காரிக்கிறாள், அது ஒரு இழிவான செயலாயிருக்கிறது. தன் தலை மயிரை கத்தரிக்கிற ஸ்திரீ அவளுடைய புருஷனை கனவீனம் பண்ணுகிறாள். அவ்வாறுதான் வேதாகமம் கூறுகிறது. ஒரு கனவீனமான ஸ்திரீ விவாகரத்து (divorced) செய்யப்பட்டு தள்ளிவிடப்பட வேண்டியவளாயிருக்கிறாள் (put away). எனவே, வேதாகமத்தின் படி பார்த்தால், அவள் வேறு யாரையோ நேசிக்கிறாள் என்பதற்கு அது அடையாளமா யிருக்கிறது, 'ஏனெனில் அவள் அதை செய்யும்போது தன்னுடைய புருஷனை அவள் கனவீனம் பண்ணுகிறாள். வேதாகமம் அப்படிதான் கூறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அது அவ்வாறுதான் கூறுகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்? வேதாகமம் அதை கூறுகிறது என்று அறிந்த எல்லாரும் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பின்பு எதற்காக நீங்கள் அதை செய்கிறீர்கள்? அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்?. ஏனெனில் ஒருவேளை உங்களுடைய பாஸ்டர் வித்தியாசமான எதையும் கூறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த காரியத்தை கிழித்து துண்டு துண்டாக்கும் சில கண்டிப்பான பழைய பாணியிலான சுவிசேஷ போதனைகள் நமக்கு தேவையாயிருக்கிறது. அது சரி. 25. நம்மால் ஒரு எழுப்புதலை கொண்டிருக்க முடியாததில் வியப்பொன்றுமில்லை. தேவனால் ஒரு நகரத்திற்கு வரங்களையும் மற்ற எல்லாவற்றையும் அனுப்பி மேலும் - மேலும் அற்புதங்களையும் காரியங்களையும் செய்ய முடியும், ஜனங்களோ ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து இருப்பார்கள். பாளையத்தில் பாவம் இருப்பதில் வியப் பொன்றுமில்லை. நாம் அந்த காரியத்தை சுத்தம் செய்து வெளியே அகற்றிவிட்டு செயல்பட வேண்டும் (அதுதான் முற்றிலும் சரி.), மேலும் சபையை சீர்படுத்தி, சரியாக இயங்கவைக்க வேண்டும், அப்பொழுது தேவன் உள்ளே வந்து நம் மத்தியில் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வார். அது சரியென்று உங்களுக்கு தெரியும். உங்களை புண்படுத்தும்படியாக நான் அதை கூறவில்லை. நான் உங்களை நேசிக்கின்ற காரணத்தால் அதை கூறுகிறேன். மேலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கு முன்பாகவும் நான் நியாயத்தீர்ப்பு மேடையில் நின்று கணக்கொப்புவிக்க வேண்டும். என் நெஞ்சிலிருந்த பாரம் இறங்கிவிட்டது; இப்போது அது உங்கள் மீது இருக்கிறது. எனவே ஜெபித்து, தேவன் உங்களிடம் என்ன கூறுகிறார் என்பதை பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்தாலும், நீங்கள் அந்த அதே ஆவியை கொண்டிருந்தால், நீங்கள் தொடர்ந்து அந்த காரியத்தையே செய்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் அப்படியே அந்த ஆவியை பரிசுத்த ஆவிக்கு மாற்றிகொள்ளுங்கள், எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் காரியங்களை மாற்றுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள். 26. இப்பொழுது, ஆகவே பின்பு யேசபேல், அவள் அங்கே வந்ததும், அவள் அணிந்திருந்த அந்த உயர் குதிங்கால் ஷீவை (heel shoe) தரையில் அழுத்தமாக மிதித்து, அவள், "இப்போது, ஆகாப்பே, நான் இந்த வேலையை பார்த்து கொள்கிறேன்" என்றாள். அப்படி செய்ய தொடங்குவதே தவறாயிருக்கிறது. புருஷன்தான் வீட்டிற்கு தலைவனாக இருக்கிறான். எல்லாம் ஆனால் ஐக்கிய நாடுகளாகிய (United States) இங்கே, பெண்தான் வீட்டிற்கு தலைவனாக இருக்கிறாள். இது பெண்களின் தேசமாயிருக்கிறது. அமெரிக்காவின் தேவனாயிருப்பது (god of America) பெண்தான். கர்த்தருடைய வருகைக்கு முன்பு ஒரு பெண் இந்த ஐக்கிய நாடுகளில் (United States) மிகப்பெரிய ஆட்சி செய்பவளாக இருப்பாள் என்று நான் கணிக்கிறேன் (predict), 'ஏனெனில் இது பெண்களின் தேசமாயிருக்கிறது. ஹாலிவுட்டில் ஆரம்பித்தது, அவ்வாறுதான் வெளியே பரவி கொண்டிருக்கிறது. இப்பொழுது, அந்த வீதியின் வழியாக ஒரு பரிதாபமான வயதான மனிதன் வருவதையும் அந்த சிறிய யேசபேல் தன் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துகொண்டு, அப்படியாக சிகரெட்டை இழுத்து புகையை ஊதிக் கொண்டும் செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். அவள், "சரி என்றாள், அவள் "சீ போ" என்று கத்தினாள், அவன் கதவண்டைக்கு குதித்து ஓடி போய்விட்டான். அது சரி. மேலும் இரவு நேரத்தில் கழுகுகள் அங்கே நின்று கூர்நகங்களால் பச்சையான மாட்டிறைச்சி கண்டத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது போன்று இருக்கும் அளவுக்கு அந்த ஒயிலான சிகப்பு கைவிரல் நகங்களுடன் அவள் அங்கே உட்கார்ந்து இருப்பாள். அவள் பாத்திரங்களை கழுவமாட்டாள், 'ஏனெனில் அந்த சாயம் போய்விடுமோ என்று அவளுக்கு பயம். அவளுடைய பரிதாபமான கணவன் பாத்திரங்களை கழுவிகொண்டிருக்கிறான், அதுபோன்று அவன் கழுவிய பிறகு, அவளோ அங்கே உட்கார்ந்து ஒரு சிகரெட்டை இழுத்து கொண்டிருப்பாள். அவனோ குழந்தையை பார்த்து கொண்டான். சரி. அது வெட்கங்கெட்டதாயிருக்கிறது, ஆம் தானே? கேட்பதற்கு ஏளனமாயிருக்கலாம், ஆனால் அதைதான் வேதாகமம் கூறுகிறது மேலும் அதுதான் உண்மை. மிக துல்லியமான உண்மை. அவ்வளவு பெரிய நீளமான கைவிரல் நகங்களுடன் ஒரு தட்டில் இருக்கும் பிஸ்கட்டுகளை செய்த ஒரு பெண்ணுடன் உங்களால் எப்போதாவது அதை சாப்பிட முடியுமா. என்னால் முடியாது; அது என்னுடைய வயிற்றை புரட்டி போட்டு விடும் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். என்னால் அவ்வாறு செய்யவே முடியாது. 27. எனவே எப்படியாயினும், ஓ, என்னே, அதெல்லாம் சரி. ஆனால் தைரியமில்லாத சிறு ஆண்மகனே. கிறிஸ்தவ சகோதரர் களாயிருந்து, அதுபோன்ற ஒரு காரியத்தை செய்ய உன்னுடைய மனைவியை அனுமதிக்கிற உன்னை குறித்து நான் வெட்கப்படுகிறேன்; நீ எதினால் உண்டாக்கப்பட்டு இருக்கிறாய் என்பதையே அது காண்பிக்கிறது. அது சரி. இப்பொழுது, பெண்களே, உங்களிடம் இவ்வளவு மட்டுமீறிய கோபத்துடன் பேசிய பிறகும், நீங்கள் "ஆமென்" என்றுதான் கூற வேண்டும் 'ஏனெனில் அவன் தான் ஆளுகை செய்பவனாயிருக்கிறான். அது சரி. நீ ஜீவிக்கிற விதமாக உன்னை ஜீவிக்க விட்டது, அது அவனுடைய தவறாகும். அப்படி விட்டதிற்காக தேவன் அவனை பொறுப்பாளியாக்கப்போகிறார். அது சரி. உன்னுடைய சொந்த வீட்டை பொறுப்பெடுத்து ஒழுங்கு படுத்தும் அளவுக்கு நீ போதுமான அளவுக்கு ஆண்மகனாக இல்லையென்றால், தேவன் உன் மீது இரக்கமாயிருப்பாராக. அது சரி. 'ஏனெனில் "அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்" என்று வேதாகமம் ஆரம்பத்திலேயே கூறுகிறது. இப்பொழுது, இப்போது அவள் ஒரு கால் மிதியடியல்ல (doormat); அவள் உன்னுடைய இனிய இருதயமாயிருக்கிறாள் (sweet heart). புரிகிறதா? ஆனால் நீ உட்கார்ந்து அவளுடன் பேசவேண்டும், அதற்கான காரணத்தை விளக்கி, அவளிடம் சொல்லி, வேதாகமத்தை வாசித்து, ஒன்றாக ஜெபிக்க வேண்டும். நீ அப்படி செய்திருந்தால், அப்போது இந்த காரியங்கள் சபையில் இருந்திருக்காது. அது சரியே. 28. ஆகவே யேசபேல், அவள் தலையிட ஆரம்பித்தபோது, அவளுடைய பரிதாபமான கணவன் ஒரு நாள் ஒரு விதத்தில் மனமுடைந்து போனான், ஏனெனில் ஒருவன் தன்னுடைய இடத்தை அவனுக்கு கொடுக்கும்படியாக தேவனுடைய பாரம்பரியத்தையும், தேவனுடைய கட்டளைகளையும் உடைக்கவில்லை, ஏனெனில், அவன் தன்னுடைய சுதந்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறியுள்ளது, நாபோத்திற்கு -- அது சந்ததியாக வழங்கப்பட்டது. ஆனால் அப்பொழுது, அவன் அதை கொடுக்கவில்லை என்பதை நாம் பார்க்கும் போது, ஆகாப் ஏங்கிபோக ஆரம்பித்து, ஓடிசென்று கட்டிலின்மீது படுத்துகொண்டான். அந்த கவர்ந்து இழுக்கும் பட்டாம்பூச்சியாகிய, அந்த சிறு யேசபேல், வந்து அவனை தன்னுடைய மடியில் வைத்து கொண்டு, "இப்பொழுது, அன்பே, உனக்கு என்ன பிரச்சனை?" என்றாள். "ஓ, நாபோத் அவனுடைய - அவனுடைய திராட்சத் தோட்டத்தை எனக்கு கொடுக்கவில்லை" என்றான். அவள், "கவலைப்படாதே, அது உனக்கு கிடைக்கும்படி நான் செய்கிறேன். எப்படியாயினும் இந்த இராஜ்ஜியத்தில் இராஜ்ஜிய பாரம் பண்ணுவது யார்?" என்றாள். பாருங்கள், அது எனக்கு ஸ்தாபன தடைவேலிகளை ஞாபகப்படுத்துவது போன்றிருக்கிறது. பாருங்கள்? "அது உனக்கு கிடைக்கும்படி நான் செய்கிறேன். என்னுடைய இஷ்டத்திற்கு மட்டும் என்னை விட்டு விடு. நான் கிடைக்கும்படி செய்கிறேன்." அவள் தன்னுடைய சிறிய பாதத்தை அழுத்தமாக கீழே உதைத்துவிட்டு, அங்கே விரைந்து சென்று, ஒருவிதத்தில் பின்வாங்கி போயிருந்த இன்னும் சில நபர்களை சேர்த்துகொண்டு, அங்கே சென்று, நாபோத்திற்கு விரோதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தி, அவன் மீது கல்லெறிந்து கொன்றாள். 29. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், ஜனங்களின் மத்தியில் அவ்விதமான பாவம் வரும்போது, துணிந்து நின்று அதை பற்றி அவர்களிடம் கூறும்படியாக யாரோ ஒருவனை தேவன் எப்பொழுதுமே கொண்டிருக்கிறார். ஆமென். ஆம், ஐயா. எலியா என்று பெயர்கொண்ட ஒரு திஸ்பியனை அவர் கொண்டிருந்தார், அங்கே நடந்து சென்று அந்த ஜனங்களிடம் அது தவறு என்றான். அவன், "அதுபோன்றதான காரியத்திற்காக தேவன் உங்களை பதில் சொல்ல வைப்பார்" என்றான். சரி. அது எவ்வளவு பொல்லாததாக ஆனாலும் ஒரு பொருட்டல்ல, அதற்கு எதிராக பேசும்படி எங்கோ ஓரிடத்தில் தேவன் ஒரு சாட்சியை கொண்டிருக்கப்போகிறார். அவ்வளவு தான். எங்கோ ஓரிடத்தில் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை எழுப்ப அவர் வல்லவராயிருக்கிறார். அவர் அதை ஏதாவது ஒரு விதத்தில், ஏதாவது ஓரிடத்தில், யாரோ ஒருவர் மூலமாக செய்வார். அங்கே, அந்த எல்லா தீர்க்கதரிசிகளும்... ஓ, என்னே. யேசபேல் அவர்களை எதிர்த்திருப்பாள். அவர்கள் அவர்கள் போகிற போக்கில் சென்று விட்டார்கள். ஆனால் வயதான எலியாவோ அங்கே நின்று, அவர்களுக்கு சரியானதை, துல்லியமாக, கூறினான், "அதற்கான பதிலை நீங்கள் கொடுக்கும்படி தேவன் செய்வார், நீங்கள் தேவனுக்கு விரோதமாக இருக்கிறீர்கள்." மேலும் அவர்களிடம் எது சரி என்றும் எது தவறு என்றும் உண்மையாகவே கூறினான். அவள் அவனை வெறுத்தாளா. என்னே, அவள் அவனை வெறுத்தாள். நிச்சயமாக. நீங்கள் ஜனங்களிடம் உண்மையை கூற ஆரம்பித்தால், பல நேரங்களில் அவர்கள் மனந்திரும்புவதற்கு பதிலாக உங்களை வெறுப்பார்கள். அது சரி. எது உண்மை என்பதை அறிந்துகொண்டதற்காக நீங்கள் மனந்திரும்பி தேவனுக்கு நன்றி கூற வேண்டும். அது சரி. ஆனால், ஓ, அவள் அந்த தீர்க்கதரிசியை வெறுத்தாள். என்னே. 30. எனவே அவன் அங்கே செல்கிறான், மேலும் நாபோத்திற்கு விரோதமாக அவள் ஒரு - ஒரு பொய்யான குற்றச்சாட்டை ஏற்படுத்தி, அவனை கல்லெறிந்து கொன்றாள். அந்த மனிதன் அவனுடைய - அந்த வீதியிலே மரித்தான். அப்பொழுது அவன்... அவள் நினைத்தாள், "ஓ, அதைப்பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியாது; அதெல்லாம் சரியாக இருக்கிறது. என்னுடைய இரண்டு தூதர்களை நான் அங்கே அனுப்பி, அங்கே மேடையில் நின்று, அவன் தேவனுக்கும் இராஜாவுக்கும் துரோகி என்று குற்றஞ் சாட்டினேன்," அந்த மனிதன் முற்றிலும் குற்றமற்றவனாயிருந்த போதும், அவனை அவர்கள் கல்லெறிந்தார்கள். அவள், "அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்று நினைத்தாள். ஆனால் பாவமும் துன்மார்க்கமும் உங்கள் வாசற்படியிலே படுத்திருக்கிறதை நீங்கள் அறிந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக சகலத்தையும் அறிந்த பரலோகத்தின் தேவன் ஒருவர் இருக்கிறார். அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் அறிவார். அவர் சகலத்தையும் அறிவார். அவன் அதை செய்தபோது, அவர் எலியாவிடம் பேசி, "அங்கே சென்று ஆகாப்பை சந்தித்து அவனிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறு" என்றார். ஆமென். நான் அதை நேசிக்கிறேன். ஓ, என்னே. "பாவம் பெருகினபோது, கிருபை மிக அதிகமாக பெருகிற்று." அது சரி. 31. அதாவது அவருக்காக அங்கே சென்று அவனுடைய தோலை உரிக்க கூடிய ஒருவனை அவர் அங்கே கொண்டிருந்தார்... எனவே ஆகாப் சாலையில் வந்து கொண்டிருக்கையில் அவனை சந்தித்தான். ஆகாப் சுதந்தரித்துக் கொள்ளும்படி அங்கே சென்று கொண்டிருந்தான், அவன் கொண்டிருந்தான்... அவர்கள் அந்த மனிதனை கொலை செய்திருந்தார்கள் ஏனெனில் அவன் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் அவனுக்கு சொல்லியிருந்தாரோ அதையே முற்றிலுமாக சரியாக அவன் செய்து கொண்டிருந்தான். அதாவது சுதந்திர வீதமானது ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு வர வேண்டும். அவன் எந்த வழியிலாவது அதை இழந்திருந்தால் அது ஒரு இனத்தானால் மீட்கப்பட வேண்டும். ரூத்தின் புஸ்தகத்தையும் இனத்தானின் சட்டங்களையும் வாசித்து அது சரியா என்று பாருங்கள். ஆகவே அவன் உரிமை குரல் எழுப்பியதற்காகவே அவனை அவள் கொலை செய்தாள். ஆகாப் மேலானதை அறிந்தவனாய் வந்திருக்க வேண்டும். வார்த்தையானது அவனுக்கு முன்பாக இருந்தது, அந்த தீர்க்கதரிசியும் அவனுக்கு முன்பாக இருந்தான். அதற்கு பதிலாக, அவனுடைய அரண்மனைக்கு பக்கத்தில் ஒரு அழகிய தோட்டம் வேண்டுமென்று நிலத்தின் மேல் பைத்தியமாய் இருந்தான் (land crazy), எனவே அவன் அங்கே சென்று அதை வலுக்கட்டாயமாக கைப்பற்றினான். எலியா அவனை வழியிலே சந்தித்து, அவனிடம், "நீ இதை செய்ததினால், நீ கொலைகாரன்" என்று கூறினான், "நாபோத்தின் இரத்தத்தை நக்கின அதே நாய்கள் அதே ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நக்கும்" என்றான். சகோதரனே, தேவன் பொறுத்து பொறுத்து பார்த்து தன்னுடைய பொறுமையை இழந்துவிட்டால், அதற்கு மேல் அவர் பொறுத்துகொள்ளவே மாட்டார் என்று நான் கூறுகிறேன். அவன் கூறினான், "அதுமட்டுமல்ல, நீ விவாகம் செய்திருக்கும் அந்த யேசபேலை..." ஓ, என்னே. அவனுடைய மனைவியை பற்றி பேச அவன் தயங்கவே இல்லை, "நீ விவாகம் செய்திருக்கும் அந்த யேசபேலை, யெஸ்ரயேலின் வீதிகளில் அந்த நாய்கள் அவளை தின்னும், இன்னது யேசபேல் என்று அவர்களால் சொல்லக் கூடாதபடிக்கு, நிலத்தின் மேல் எருவாய் கிடப்பாள்" என்றான். 32. என்னே. பெண்களே, அவ்வாறு இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள், நீங்கள் விரும்புவீர்களா? அவளை பற்றின ஞாபகம் கூட எங்கேயும் விட்டுவைக்கப்படவில்லை... கூறினால் அது... அது எல்லாம் அவ்வாறு செய்யப்படுகையில் நீங்கள் நினைவுக் கூறவேண்டும், வேதாகமத்தில் அதை செய்த அந்த ஒரே பெண்ணை, தேவன் நாய்களுக்கு இரையாக்கினார். அது சரி. அது ... ஒரு பெண் அதை செய்வதை நீங்கள் பார்க்கும்போது, "அப்படி யானால் அது நாய் கறி" என்று நீங்கள் கூறலாம். நீங்கள் பாருங்கள்? 'ஏனெனில் தேவன் அதைதான் செய்தார். அவர் அதை நாய்களுக்கு உணவாக்கினார். அவர் அதை நாய்களுக்கு உணவாக்கினார். அந்த விதமான பெண்களை அவர் நாய்களுக்கு உணவாக்கினார். எனவே நீங்கள் அதைவிட்டு விலகி இருங்கள். சுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். ஆமென். தேவனோடு சரி செய்து கொள்ளுங்கள். நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் ஒரு பழைய பாணியிலான அழுத்தமாக தேய்த்து சுத்திகரிக்கப்படுவதே, தோண்டி அகற்றப்படுவதே. சோளம் வளரும்படியாக அந்த நிலப்பகுதியில் உள்ள அந்த களைகளை அகற்றி போடுங்கள். இயேசு வருகிறார். எல்லாம் சரி, அதுதான் நமக்கு தேவை. அந்த வெட்டி வடிவமைக்கும் வரிசைக்கு திரும்புங்கள். பாதைக்கு திரும்புங்கள். தேவன் நம் மத்தியில் வருவார். ஆனால் உலகமானது உங்களோடு கலந்து இருக்கும் வரை, தேவன் அசையவே மாட்டார். சில நேரங்களில் அந்த காரியங்கள் ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்று நீங்கள் வியப்படைவீர்கள். நீங்கள் சிறிது நேரம் அதைப்பற்றி சிந்தித்து பாருங்கள். சிறிது நேரம் ஜெபியுங்கள் அப்பொழுது தேவன் பாவத்தை கண்டிப்பார். 33. கவனியுங்கள். பின்பு உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், சூழ்நிலைகள் மோசமாயின. எலியா மலைகளின்மேல் தனியே உட்கார்ந்து இருந்தான். தேவன் அவனிடம், "அங்கே கீழே போ" என்று கூறினார். அவனுக்கு ஒரு தரிசனத்தை காண்பித்து, "இதில் நான் என் பொறுமையை இழந்து விட்டேன்," என்றார். "நீ அழைக்கும் வரை, மழையோ அல்லது பனியும் கூட பெய்யும்படி நான் அனுமதிக்க மாட்டேன் என்று அங்கே கீழே போய் ஆகாப்பிடம் கூறு" என்றார். இப்பொழுது, ஒரு தேவ மனுஷன் எப்பொழுதுமே தேவனுடைய அந்த உண்மையான வார்த்தையைதான் பின்பற்றுவான். இப்பொழுது, யேசபேல் அவனை அச்சுறுத்தியும் மற்ற எல்லாவற்றையும் செய்திருந்தாள். நல்லது, நீங்கள் கூறலாம், "இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் யேசபேலை பற்றி முடிப்பதற்கு முன்பாக ஒரு நிமிடம் பொறுங்கள். அந்த சிறிய பெண்ணிற்கு சந்தர்ப்பமே கிடைக்காமல் இருந்திருக்கலாம். அவள் பிறக்கும்போதே அஞ்ஞானியாக (pagan) பிறந்தாள். அவளுக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை." ஓ, அவளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுக்கு ஒரு பாஸ்டர் இருந்தார், பாஸ்டர் எலிசா இருந்தார். அதைப்பற்றி அவளிடம் கூற எலிசா பயப்படவே இல்லை. நினைக்காதீர்கள்... தேவன் எப்பொழுதுமே அங்கே வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிறார். அவள் அந்த வெளிச்சத்தில் நடக்க மறுத்தாள்; அவ்வளவுதான். சரி. ஓ, எலியாவை தன்னுடைய பாஸ்டர் என்று சொல்ல அவள் விரும்பவில்லை, நிச்சயமாக விரும்பவில்லை. அவள் முறையான, மதிப்பிற்குரிய மற்ற மனிதர்களை தன்னுடைய பாஸ்டராக கொண்டிருந்தாள். ஆனால் அவள் அவனை எவ்வளவாக வெறுத்தாலும், அவளுடைய பாஸ்டராக இருக்கும்படிதேவன் எலியாவை அனுப்பினார். அவள் அவனை வெறுத்தாள் ஏனெனில் யூத மார்க்கம் அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. 34. இன்றைக்கும் அது தான் பிரச்சனை. ஜனங்கள் உலகத்தைப் போல நடந்துக்கொள்ளவும், உலகத்தைப் போல பேசவும், உலகத்தைப் போல உடை உடுத்தவும், சபையையும் மற்றும் உலகத்தையும் எல்லாவற்றையும் ஒன்றாக்கவும் விரும்புகிறார்கள். கிறிஸ்தவர்கள், பரிசுத்த ஆவியின் மார்க்கம் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. அதுதான் ஒரே பிரச்சனை. ஆமென். நீங்கள் அவர்களை பரிசுத்த உருளைகள் என்றும், அவர்களுக்கு சரியான மன நிலையும் மற்றவைகளும் இல்லை என்று கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் அப்படியாக ஜீவிப்பது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. அதுதான் பிரச்சனை. மேலும் அந்தவிதமாக இருந்த ஜனங்களாகிய உங்களில் சிலர் விலகி போய்விட்டீர்கள். நான் என்ன கூறுகிறேன்? என்னே. அநேகமாக அது நல்லது. ஆனால்... வழக்கமாக அம்மா எனக்கு ஆமணக்கு எண்ணையை தருவதை போல சற்று அது இருக்கிறது. அம்மா கூறுவார்கள்... அதை நினைக்கும்போதே எனக்கு குமட்டல் வருகிறது. "அது உனக்கு குமட்டலுணர்ச்சியை ஏற்படுத்தவில்லையென்றால், அது உனக்கு எந்த நன்மை யையும் செய்யாது" என்பார். நல்லது, அநேகமாக இங்கேயும் அதே காரியம்தான். உங்களை குறித்து நீங்களே குமட்டலுணர்ச்சியடைந்தால், அநேகமாக அது உங்களுடைய - உங்களுடைய ஆவிக்குரிய செரிமானத்தை சீர்ப்படுத்தும் ஆகவே உங்களால் உண்மையாகவே வார்த்தையை எடுத்துக் கொள்ளமுடியும். 35. அவர்கள் வியந்தார்கள். எலியா கீழே சென்று, அரமனைக்குள் தயக்கமின்றி துணிச்சலாக, எல்லா சேவகர்களையும் மற்றவைகளையும் கடந்து சென்று, தன்னுடைய விரலை ஆகாபின் முகத்திற்கு நேராக நீட்டி அவனிடம் கூறினான், "நான் அழைக்கும் வரை வானங்களிலிருந்து பனி கூட பெய்யாது" என்றான். ஓ, என்னே. ஏன்? தேவன் அவனிடம் உரைத்திருந்தார். அவன் தேவனுடைய வார்த்தையோடு இருந்தான், அதனால்தான் அவன் பயப்படவே இல்லை. ஒருபோதும் பயப்படாதீர்கள். மிகாயா தேவனுடைய வார்த்தையுடன் இருந்து பயப்படவே இல்லை. தேவனுடைய வார்த்தையையும் மேலும் அந்த வார்த்தையோடு இயங்கும் தேவனுடைய தரிசனத்தையும் நீங்கள் பெற்றிருக்கும்போது எந்த மனுஷனும் பயப்படவே மாட்டான். அந்த தீர்க்கதரிசிகளுக்கு எதிர்த்து கண்டனம் பண்ணி, அவர்கள் தவறாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் பிசாசின் ஆவியை கொண்டிருக்கிறார்கள் என்றும் மிகாயாவால் அவர்களிடம் கூற முடிந்த காரணம் என்னவென்றால், அங்கே நடைமுறையிலிருந்த நாகரீகங்களும் (Fashions) மேலும் அவர்கள் செய்துகொண்டிருந்த ஒவ்வொன்றுமே தான், ஏனெனில் அவர்கள் வார்த்தையோடு வரிசையில் நிற்கவில்லை. தேவன் உண்மையான தரிசனத்தை உண்மையான தீர்க்கதரிசிக்கு கொடுக்கிறார். அவன்... அவர்களை வரிசைப்படுத்த முயற்சித்தான்... மேலும் இப்பொழுது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான் இன்றைக்கான உண்மையான தரிசனமாயிருக்கிறது. உண்மையான தீர்க்கதரிசி ஞானஸ்நானமாயிருக்கிறது, அது - அது பரிசுத்த ஆவியானவர் தாமே [The true prophet is the baptism, it-it's the Holy Spirit Himself.] அவர்தான் வந்து நம்மை வார்த்தையோடு வரிசைப்படுத்துகிற ஒருவராயிருக்கிறார். கவனியுங்கள். ஏதோவொரு பிஷப்போ அல்லது பேராயரோ அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவரே சபையை வழி நடத்துகிறார். ஆமென். 36. இப்பொழுது, கவனியுங்கள். இப்பொழுது, நாம் என்ன பார்க்கிறோம் என்றால்... இராஜாவாகிய ஆகாப் அங்கே நின்று அவனை பார்த்துக்கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா. இந்த வயதான மனிதன், ஒருவேளை பார்ப்பதற்கு கம்பளிபூச்சி (fuzzy worm) போன்று இருந்திருக்கலாம், தாடியும் முடியும் அப்படியாக நீட்டிக் கொண்டிருக்க, தன் மேல் ஒரு ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு... என்னவாயினும் அவன் முழுவதுமாக முடியினால் நிறைந்த வனாயிருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. இராஜாவின் அரமனை மன்றத் தில் அவன் அவ்வாறு நின்றது பார்ப்பதற்கு விநோதமாக இருந்திருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். ஆனால் தன்னுடைய விரலை அவனுடைய முகத்திற்கு நேராக அசைத்து, "நான் அழைக்கும் வரை வானத்திலிருந்து பனி கூட பெய்யாது" என்றான். ஆமென். அவன் கர்த்தர் உரைக்கிறதாவதை உடையவனாயிருந்தான், மீண்டும் தயக்கமின்றி துணிச்சலாக வனாந்திரத்திற்குள் சென்று விட்டான். அவன் சென்ற பிறகு, ஆகாப், "ஹா-ஹா-ஹா. அந்த வயதான வாத்து பிரசங்கி இங்கே வந்து, அது போன்ற ஒரு காரியத்தை கூறினானே, அதுபோன்றதை நீங்கள் எப்பொ ழுதாவது கேட்டதுண்டா? ஹா-ஹா. ஏன், இந்த எல்லா காரியங்களையும் அறிந்த நம்முடைய மதகுருக்கள் நம்மிடம் இங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள். ஏன், இங்கே எதுவுமே தவறாக இல்லை. அவன் வெறுமனே பழைய நாகரிகம் கொண்ட, பழங்காலத்தான்" என்று கூச்சலிட் டான். ஆனால் அவனோ கர்த்தர் உரைக்கிறதாவதை உடையவ னாயிருந்தான். ஆம், ஐயா. அவன் சரியாக மீண்டும் வனாந்திரத்திற்குள் தயக்கமின்றி துணிச்சலாக சென்று விட்டான். "அவன் எப்படி போகிறான் என்பதை கவனி" என்று அவர்களில் சிலர் கூறினார்கள். 'ஆ, அதற்கெல்லாம் கவனத்தை செலுத்தாதே." 37. அவன் கேரீத் ஓடையண்டை (brook Cheritch) சென்று அமர்ந்தான். அவ்விடத்தில், கர்த்தர் அவனிடம் கூறினார், "நீ அவ்விடத்திற்கு போ, ஏனெனில் நீ அவ்விடத்தில் இருக்கும் வரை நான் உன்னை பார்த்துக்கொள்வேன்" என்றார். எனக்கு அது பிடிக்கும். நீ கர்த்தருடையதை பார்த்துக் கொள், கர்த்தர் உன்னை பார்த்துக் கொள்வார். கர்த்தர் உரைக்கிறதாவதை மட்டும் நீ செய், அவர் உன்னை பார்த்துக்கொள்வார். மழை பெய்யவே பெய்யாது என்று எவ்வளவு நிச்சயமாக இருக்க முடியுமோ அவ்வளவு நிச்சயத்துடன், எலியா அவ்விடம் சென்று அமர்ந்தான். மேலும் உங்களுக்கு தெரியவேண்டிய முதல் காரியம், ஒரு வறட்சி வந்தது. அந்த எல்லா - அந்த எல்லா ஊற்று நீர்களும் வற்றி போயின. அவன் ஒரு பைத்தியக்காரன் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் இப்போது அவர்கள் இந்நிலைக்கு வந்துவிட்டார்கள்... அவன் ஒரு பழங்காலத்தான். அவன் பழைய நாகரீகம் கொண்டவன், அதுபோன்று ஒவ்வொன்றும், பிரசங்கிக்கிற ஒரு வயதான வினோதமானவன். ஆனால் அந்நாட்களில் அந்த தேசத்திற்கான தேவனுடைய பாஸ்டராய் அவன் இருந்தான், பாஸ்டர் திஸ்பியனாகிய எலியா. எனவே அவர்கள் அவன் கூறுவதை கவனிக்கவில்லை. ஆனால் அவன் கொஞ்சம் மன நிலை சரியில்லாதவன் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அவனோ தேவனுடைய சித்தத்தின்படி அவ்விடம் சென்று அந்த நீருற்றண்டை அமர்ந்தான். இங்கே பள்ளத்தாக்கிலே இருந்த ஜனங்களோ எல்லா தண்ணீர் குழாய்களும் இருந்த இடத்தில், மற்றும் எல்லா ஊற்று நீர்களும் கொதித்து கொண்டிருந்த இடத்தில், ஒரு வாய் தண்ணீருக்காக மரித்து கொண்டிருந்தார்கள்; மேலும் எலியாவோ அங்கே உட்கார்ந்து அவன் விரும்பிய எல்லா நேரங்களிலும் குடித்துக் கொண்டிருந்தான். 'ஏனெனில் அவன் கர்த்தர் உரைக்கிறதாவதை உடையவனாயிருந்தான். 38. இப்பொழுது, இன்றைக்கு நான் வியக்கிறேன், 'உங்களுடைய ஒரு பெரிய ஸ்தாபனத்தை நீங்கள் சேர்ந்தவராக இருக்கின்ற காரணத்தால் அல்லது கூரையின் மேலே சிலுவையை கொண்ட ஒரு பெரிய சபை இருக்கிறது, மேலும் பத்து லட்சம் டாலர் மதிப்புடைய ஆர்கன் (Organ - இசை கருவி) இருக்கிறது என்கின்ற காரணத்தால் எனக்கு வேண்டும்போதெல்லாம் நான் குடிப்பேன், என்று நீங்கள் நினைத்தால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், கர்த்தர் உரைக்கிறதாவதில் மட்டும்தான் அந்த நீருற்று திறக்கும். அவன் அவ்விடத்தில் நின்று ஒரு பழைய நல்ல ஆவிக் குரிய பானத்தை அவன் விரும்பிய எல்லா நேரங்களிலும் குடித்துக்கொண்டிருந்தான். இங்கேயோ இந்த இடத்தில் தண்ணீரானது வறண்டு போய் விட்டது. இன்றைக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை என்னவென்று நான் சிந்தித்து பார்க்கிறேன், அது நம்முடைய இடங்களிலும், நம்முடைய கிறிஸ்தவ இடங்களிலும் தண்ணீர்களானது வற்றி போய் விட்டது. பிரச்சனை தான் என்ன? நீ... நீண்ட நாட்களுக்கு முன்பு, ஜனங்கள் அழுது, இருக்கையின் பக்கத்தில் இருக்கும் வழியில் முன்னும் பின்னும் நடந்து, முழு இரவும் முகங்குப்புற விழுந்து ஜெபிப்பார்கள் மேலும் உங்களுடைய பிள்ளைகளை தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு கொண்டு வருகிறதான பழைய நாகரீக கூட்டங்களை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கோ பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் நபர்களை (babysitters) அவர்கள் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள்... ஒரு பெண் ஒரு சிகரெட்டை புகைப்பது வெட்ககேடாயிருந்தது. இன்றைக்கோ அநேக ஜனக்கூட்டம் சிகரெட்டுகளை புகைக்கிறார்கள். பெண்ணானவள் முகவர்ணம் பூசுவதும் மற்ற இந்த எல்லா காரியங்களையும் பயன்படுத்துவது என்பது வெட்ககேடாயிருந்தது. இன்றைக்கோ அது எல்லாம் ஒன்றுதான்... கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உங்களால் வித்தியாசமே சொல்ல முடியாது. எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய தண்ணீர் குழாயானது துண்டிக்கப்பட்டு விட்டது. அதுதான் பிரச்சனை. நீங்கள் ஒரு பாலைவனத்தில் இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு எல்லா நேரங்களிலும் சபையில் சண்டைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியும்... 39. நீங்கள் எந்தவிதமான ஒரு - ஒரு செடியையும் எடுத்து அதை தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் நட்டுவைத்தால், அதில் முட்கள் வரும். ஆனால் அந்த அதே செடியை நீங்கள் எடுத்து அதிக தண்ணீர் இருக்கும் இடத்தில் நட்டு வைத்தால், அது மிருதுவாகிவிடும். ஏன் அப்படி இருக்கிறது? ஏனெனில் அது வறட்சியாயிருக்கிறது. இன்றைக்கு சபைகளில் இருக்கும் பிரச்சனையும் அதேதான். "தேவனுக்கு மகிமை, நான் ஒரு பாப்டிஸ்டு. அல்லேலுயா" என்று மட்டுமீறிய அமளி செய்கிறார்கள். "நான் ஒரு பிரஸ்பிடேரியன், எங்களிடம் தேர்ந் தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த பாஸ்டர்கள் இருக்கிறார்கள் என்று நான் உனக்கு சொல்லுகிறேன். ஆம், ஐயா, உன்னுடைய பழைய பெந்தெகொஸ்தே தேவபாடத்தை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை." "நான் உன்னிடம் கூறுகிறேன்; நான் அசெம்பிளிசை (Assemblies) சேர்ந்தவன்; அதுதான் நான். ஏனையோரை போல நாங்களும் மகத்தானவர்கள்." "நான் ஐக்கிய ... சேர்ந்தவன்" "நான் இதை, அதை அல்லது மற்றதை சேர்ந்தவன்." ஓ, நான் உன்னுடைய முட்களை பார்க்கிறேன். உனக்கான நீர் பாய்ச்சலானது இல்லாமல் போய்விட்டது. அதுதான் பிரச்சனை. அது மட்டும்தான் பிரச்சனை. தண்ணீரானது துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆண்டுகளுக்கு முன்பு உன்னிடம் இருந்ததான காரியங்கள் உன்னிடம் இல்லை. அற்புதங்களும் மற்றவைகளும் சபையில் இல்லை. சபையில் இருந்த உணர்வுகளும், அந்த அந்த ஐக்கியங்களும் அப்போது இருந்ததை போல இல்லை. பிரச்சனை தான் என்ன? உன்னுடைய அல்லேலுயா தோட்டத்திற்கு வழிநடத்தி சென்ற அந்த மகிமையின் நீரூற்று துண்டிக்கப்பட்டுவிட்டது. அதை செய்தது எது? பாவம். பாவமானது சபைக்குள் நுழைந்து, உங்களுக்குள் நுழைந்ததுதான் அதற்கான காரணம், அந்த குழாய்கள் அடைப்பட்டு போவதை தடுத்து நிறுத்தாத அந்த பலவீனமான பிரசங்க பீடமே அதற்கு காரணம். அது சரி. ஆமென். அதுதான் உண்மை. இது மிகவும் முரட்டுதனமாக தோன்றலாம், ஆனால் இதுதான் உண்மை. நீங்கள் மட்டும் நிறுத்தி ஒரு பழைய பாணியிலான ஜெப கூட்டத்தை வைத்து, தேவனிடம் மீண்டும் திரும்பவில்லையென்றால், இப்பொழுதிலிருந்து இன்னும் பத்து ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்? யாரேனும் எழும்பி சென்று இந்த காரியத்தை பிரசங்கித்து, இந்த காரியத்தை சபையை விட்டு அப்புறப்படுத்துவது மிகவும் அவசியமா யிருக்கிறது. அது ஒரு புற்றுநோயாயிருக்கிறது, மேலும் அது எலும்பு வரை அரித்து தின்கின்றது. அதை வெளியே அப்புறப் படுத்துங்கள். தேவனே, அந்த காரியமானது நடப்பதை நீர் காண்கையில், வார்த்தையில் நின்று வார்த்தையை பிரசங்கிக்கும் சுவிசேஷகர்களை அனுப்பும். பின்பு அதை அப்படியே செல்ல அனுமதிப்பீரா? 40. ஏன், சமீபத்தில் சிகரெட்டுகளை புகைத்துக்கொண்டு, குட்டைக்கால் சட்டைகளை அணிந்து, அந்நிய பாஷைகளில் பேசிக்கொண்டு, ஒரு ஜெப கூட்டத்திலிருந்த ஒரு கூட்ட பெண்களை நான் சந்தித்தேன்: பெந்தெகொஸ்தே யினர்கள். தேவனே இரக்கமாயிரும். அவர்கள் பின்வாங்கி போன பாவிகள் நிச்சயமாகவே அவர்கள் அதுதான். நான் நியாயாதிபதி அல்ல, ஆனால், "அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிவீர்கள்." அதின் புத்தியீனத்தை நீங்கள் தெளிவாக உணர்கிறீர்களா? வேதாகமத்தில் யாரேனும் எப்போதாவது ஆடைகளை கழற்றினார்களா என்றால் ஒரே ஒரு முறை மட்டும் தான் அப்படி நடந்தது, மேலும் அதை செய்தது ஒரு பிசாசு பீடித்த மனிதன் என்பதை உங்களால் உணர முடிகிறதா? இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறதான இந்த எல்லா காரியங்களையும், நீங்கள் எல்லாரும் - நீங்கள் எல்லாரும் கலந்து கொள்ளுகிறதான இந்த ராக் அண்ட் ரோல் கொண்டாட்டங்களையும், அந்த இடங்களில், வாலிப பெண்கள் அவன் கையெழுத்து போட வேண்டுமென்று தங்களுடைய உள்ளாடைகளை கழற்றி மேடை மீது வீசும் அளவிற்கு, பிரஸ்லியும் மற்றவர்களும் மிகவும் வெறிபிடித்து போய் அந்த விதமான செயலாட்டத்திற்கு உட்பட்டு, அதை நாகரீகம் என்று அழைக்கிறார்கள், அதன் பிறகு அவர்களில் டஜன் கணக்கானவர்களை பைத்தியக்காரர்களுக்கான காப்பகத்திற்கு அனுப்புகிறார்கள் என்பதை உங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறதா? மேலும் நீங்கள் கேட்கிறதான நம்முடைய வானொலி நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய மற்ற ஒவ்வொன்றுமே அந்த ஒழுக்ககேட்டால் நிரம்பியிருக்கின்றன? அது கெர்ச்சிக்கிற சிங்கம் போல் இருக்கும் பிசாசு. அவர்கள் அந்த அதே காரியத்தை, பூகி- வூகியுடனும் மற்ற எல்லாவற்றுடனும் சபைக்குள் கொண்டு வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் ஹாட்டன்டாட்களில் (பழங்குடியின் பெயர்] இருக்கும் விதமாக, அந்த அதே பாவமயமான துக்கம் பீடித்த ஓசை (mournful sound) ... அவர்கள் அங்கே நிற்பதை நான் கண்டபோது, அந்த மந்திரவாதிகள் அவர்கள் செல்வார்கள், அந்த ஓசைகள். அஞ்ஞானிகள் தங்கள் முகத்தின் மீது வர்ணத்துடன், அந்த இளம் பெண்கள் நடனமாடுவார்கள் எதுவரையென்றால்...?... செக்ஸ் கொண்டாட்டங்களும் மற்ற எல்லாமுமே. அதில் அமெரிக்கா தன்னில் நாகரீகத்தின் உச்சத்தை எட்டி மீண்டுமாக பின்னோக்கி நகர்ந்து, திரும்பவும் அஞ்ஞானி களாகி கொண்டிருக்கிறது, முகவர்ணம் பூசுவதும் ராக்கிங் செய்வதும் ரோலிங் செய்வதுமாக இருந்து, மேலும் - மேலும் தங்களையே சபை அங்கத்தினன் என்று அழைத்துக்கொள்கிறது. ஆமென். பல நேரங்களில்... சமீபத்தில் அவர்கள் கனடாவில் ஒன்றை நடத்தினார்கள். அது முடிந்த இரண்டு நாட்களில் அவர்கள் பத்து பிள்ளைகளை பைத்தியக்காரர்களுக்கான மருத்துவமனைக்கு அனுப்பினார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக. நீங்கள் பழைய பாணியிலான சுவிசேஷத்திற்கு அமர்ந்து கிறிஸ்துவிடமாக மீண்டும் வருவது மிகவும் அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்கள் கொண்டிருந்தார்கள். சரிக்கும் தவறுக்கும் நடுவே உள்ள கோடுகளை வரையுங்கள். 41. எலியா, அந்த மலையின் மேல் உட்கார்ந்து இருந்தான், அவனை ஒரு பைத்தியக்காரன் என்று அவர்கள் கூறினார்கள். அவன் எதைப்பற்றி பேசுகிறானோ அதை அவன் அறியாமல் பேசுகிறான் என்றார்கள். ஆனால் இங்கே அவர்களோ சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் இருந்தார்கள்; கோதுமை பயிரானது விளையவில்லை, தண்ணீர் கொஞ்சமும் இல்லை. நாக்கை மெல்வதை தவிர அவர்களுக்கு ஒன்றுமே இல்லாதிருந்தது. ஆனால் அவர்களோ அவனை ஒரு பைத்தியக்காரன் என்றார்கள். இங்கே இன்றிரவு சிகாகோவில் இருக்கும் ஜனங்களாகிய உங்களில் அநேகரை காட்டிலும் அவன் மிகவும் சிறப்பான நிலையில் அங்கே உட்கார்ந்து இருந்தான். அது சரி. அவன் முதலாவதாக அங்கே தேவனுடைய சித்தத்தில் உட்கார்ந்து இருந்தான், அவனுக்கென்று காகங்கள் ஏதோவொன்றை சாப்பிடுவதற்காக கொண்டுவந்துக் கொண்டிருக்க, ஒரு நீரூற்றின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அவன் சாப்பிடுவதற்கென்று ஏதோவொன்றை கொண்டு வரும்படியாக அவனுக்கு சுமை தூக்குபவர்கள் (porters) இருந்தார்கள். அவனுக்கு பசியெடுத்த ஒவ்வொரு முறையும், உடனே ஒரு காகம் ஒரு சான்ட்விட்சுடன் (sandwich) வந்து, அதை அவனுக்கு கொடுக்கும். அவன் சாப்பிட்டு, கீழே உட்கார்ந்து தண்ணீர் குடித்துவிட்டு, எழுந்து கர்த்தரை ஸ்தோத்தரிப்பான். இப்பொழுது, அது சிறப்பானது இல்லையென்றால், பின்பு எது சிறப்பானது என்று எனக்கு தெரியாது. என்னை பொறுத்தமட்டில் அது சொகுசான (luxury) வாழ்க்கையாகும். உங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லையா? நிச்சயமாக அது அவ்வாறுதான் இருந்தது, அவன் தேவனுடைய சித்தத்தில் இருந்தான் என்பதை அறிந்திருந்தான். ஒருமுறை யாரோ ஒருவர் என்னிடம், "சகோதரன் பிரன்ஹாமே, அந்த காகங்கள் அவனுக்கு அப்பமும் இறைச்சியையும் கொண்டுவந்தன என்பதை உண்மையாகவே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டார். நான், "ஆம், ஐயா" என்றேன். "அவைகள் எவ்வாறு கொண்டு வந்தன என்று உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார். "வேதாகமம் அவ்வாறு தான் கூறியிருக்கிறது. அவ்வளவுதான்" என்றேன். அவர், "சரி, கவனியுங்கள், அப்படியானால் நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். எங்கிருந்து அவைகளுக்கு அது கிடைத்தது?" என்று கேட்டார். நான், "நான் உங்களிடம் அதை கூறப்போகிறேன்; எனக்கு அது தெரியாது" என்றேன். ஆனால், "எனக்கு தெரிந்த ஒரே காரியம், அவைகள் அதை கொண்டுவந்தன; அவன் அதை சாப்பிட்டான்" என்று கூறினேன். மேலும் நான் கூறினேன், "சற்று நேரத்திற்கு முன்பு நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வியை போல, நான் கத்தி கூச்சலிடுவது போல என்னை செய்யவைப்பது எது? அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. அது எங்கே இருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது, ஆனால் அது இங்கே வந்து சேருகிறது, நான் அதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன். என்னால் செய்ய முடிந்த ஒன்றே ஒன்று அதுமட்டும்தான். தேவன் அதை அனுப்பினார், நான் அதை நேசிக்கிறேன்."ஆமென். 42. எனவே நீங்கள் கர்த்தருடைய சித்தத்தில் இருக்கும் வரை, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறது? அது எங்கிருந்து வருகிறது என்பது எனக்கொரு பொருட்டல்ல, கர்த்தர் அதை எனக்கு அனுப்பியிருக்கும் வரை; அதுவே நன்றானது. ஆமென். நான் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். உலகம் அதைப்பற்றி என்ன நினைக் கிறது என்பதை பற்றி எனக்கு கவலையே இல்லை. நீங்கள் தொடர்ந்து சென்று, உங்கள் நாக்குகளை மெல்லுங்கள், உங்களுடைய மொத்த தண்ணீரும் வறண்டு போய் விட்டது, சபையில் அல்லேலூயாவே இல்லை, எல்லாம் நியாயத் தீர்ப்பாயிருக்கிறது, பிரசங்கிகள் தங்களுடைய சிறிய பெண்தன்மை கொண்ட பத்து காசு மதிப்புள்ள செய்தியை கொண்டுவந்து, உங்களுடைய முதுகை தட்டிக் கொடுக்கவும் மேலும் மற்றவைகளை செய்யவும் முயற்சிக்கும்போது, வெறுமனே உட்கார்ந்திருந்து கைவிரல் நகங்களில் அழுக்குகளை எடுத்துக்கொண்டும், விரல் சாயம் பூசிக்கொண்டும் இருக்கிறீர்கள். அது சரி. இப்பொழுது அது பிரஸ்பிடேரியனல்ல; அது பெந்தெகொஸ்தேவாயிருக்கிறது. சரி சரி ஓ, அது கடுமையாயிருக்கிறது, இல்லையா? ஆனால் அதுதான் உண்மை. ஆம், ஐயா. நீங்கள் எதை பெற்றிருக்க வேண்டுமென்றால் இன்னும் அதிகமான யோவான் ஸ்நானன்களையே, அதுபோன்ற தான ஒரு பழைய செய்தியையே, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு மனிதன் அவன் பாவத்தின் முகத்திற்கு நேராக நடந்து சென்று, "நீ அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல" என்றான். அது சரி. ஆமென். அப்படி செய்ய வேண்டுமென்று தான் வேதாகமமே கூறுகிறது. அதை கிழித்தெறி. "கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது." அது சரி. அதை வெட்டி கீழே போடு (Cut her down). அதுதான் நமக்கு அவசியமாயிருக்கிறது, விருத்தசேதனம் தான் நமக்கு அவசியமாயிருக்கிறது. "விருத்தசேதனம்" என்றால் "தேவையில்லாத மாம்சத்தை வெட்டி நீக்குதல்" என்று அர்த்தம். சில தேவையில்லாத மாம்சத்தையும் முட்டாள்தனங்களையும் வெட்டி அப்புறப்படுத்துவதே இன்று இரவு ஒரு பெந்தெகொஸ்தே சபையில் நமக்கு அவசியமாயிருக் கிறது. அது கச்சிதமான உண்மை. வெட்டி வடிவமைக்கும் வரிசைக்கு திரும்புவதே. 43. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் கர்த்தருடைய அபிஷேகத்திற்கு கீழாக ஒரு அருமையான நேரத்தை கொண்டவனாய் எலியா அங்கே மூன்று வருடங்கள் இருந்தான். ஒவ்வொரு முறையும் ஒரு காகம், பறந்து வந்து அப்படியே கீழே இறங்கி, அவனுக்கு ஒரு சான்ட்விட்சை கொண்டுவந்து கொடுக்கும், அவன் அதை சாப்பிடுவான். எழுந்து கர்த்தரை ஸ்தோத்தரித்து, கொஞ்சம் தண்ணீரை அவன் குடித்து, சிறிது நேரம் ஆர்ப்பரித்துவிட்டு, மீண்டும் உட்கார்ந்து கொள்வான். அது அதிசயமில்லையென்றால். பின்பு அவர்கள் கண்டறிய ஆரம்பித்தார்கள். "அந்த பரிசுத்த உருளைக்கு என்ன ஆனது என்று யோசித்தார்கள்?" யோசித்தார்கள்... ஏன், கடைசியில் பார்த்தால் அவன் கூறியது சரியாக இருக்குமோ." எனவே அப்பொழுது அவர்கள் அவனை தேட ஆரம்பித்தார்கள். அவனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு தேசத்திலும் அவர்கள் தேடிப்பார்த்தார்கள். ஆனால் அவனோ... அவர்களால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயமாக முடியவில்லை. ஆகவே கர்த்தர், "ஆகாப்..." அல்லது "எலியா" விடம் கூறினார், நீ கீழே சென்று ஆகாப்பை சந்திக்க வேண்டும்" என்றார். எனவே அவன் மலையை விட்டு கீழே இறங்கி நடந்து சென்றான். ஆகாப் அவனை சந்தித்தபோது, "ஓ, இங்கே நீ இருக்கிறாயா, நீ தானா அது ஹுஹ்? இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா" என்று அவன் கூறினான். ஓ, என்னே. அவன் என்ன கூறினான் என்று உங்களுக்கு தெரியுமா? அவன், "இஸ்ரவேலை கலங்கபண்ணுகிறவன் நானல்ல; அது நீயும் உன்னுடைய சிறு யேசபேலும் தான் அதை செய்தீர்கள்" என்றான். அது முற்றிலுமான உண்மை. நீ இந்த பில்லிசூனியத்தை (witchcraft) இஸ்ரவேலுக்குள் கொண்டுவந்து நீ செய்த இந்த காரியங்களை செய்தாய். இதை செய்த ஒருவன் நீ தான்." மேலும் அவன் கூறினான்... 44. இன்றைக்கு ஜனங்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள். "ஓ, அவர்கள் மிகவும் சத்தம் போடுகிறார்கள், அவர்கள் இதையும் அதையும் செய்கிறார்கள். அதுதான் பிரச்சனை" என்று அவர்கள் கூற முயற்சிக்கிறார்கள். கவனியுங்கள், தொல்லைக்குட்படுத்துவது மருத்துவர் அல்ல; வியாதி தான் தொல்லைகுட்படுத்துகிறது. அது சரி. அது வியாதியாயிருக்கிறது; அவர்களுடைய ஆசீர்வாதத்தை துண்டித்து போட்டது பாவம்தான். அந்த பாவம் அது உள்ளே... உங்களுக்கு நல்ல பாஸ்டர் இல்லை என்பதால் அல்ல, உங்களுக்கு நல்ல சபைகள் இல்லை என்பதால் அல்ல, உங்களுக்கு இது, அது அல்லது மற்றது இல்லை என்பதால் அல்ல, நிச்சயமாக, உங்களுக்கு இருக்கிறது. ஆனால் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய இன்ன - இன்ன காரியங்களை உங்களை விட்டு துண்டித்து போடுவதே பாவம்தான். எல்லா நேரங்களிலும் சபையை எடுத்துக்கொள்ளப் படுதலின் நிலையில் இருக்கவொட்டாமல் செய்வது பாவம்தான். அது பாவமாயிருக்கிறது, கட்டிடமல்ல, சபையல்ல, ஆனால் சபையில் இருக்கும் பாவமே. 45. எனவே அப்பொழுது அவன், "அவர்களை இங்கே கர்மேல் பர்வதத்தின் மீது வர சொல், யார் தேவன் என்பதை நாம் பார்த்துவிடலாம். அக்கினியினால் உத்தரவு அருளும் தேவனே தேவன். யார் தேவன் என்பதை நிரூபித்து காட்டலாம்" என்றான். ஓ, அந்த தேவன் இன்னமும் தேவனைப் போன்று பதில் சொல்லுகிறார், தேவனைப் போன்று பேசுகிறார், தேவனைப் போன்று நடக்கிறார், தேவனைப் போன்று சுகப்படுத்துகிறார், தேவனைப் போன்று இரட்சிக்கிறார், தேவனைப் போன்று சுத்திகரிக்கிறார், அந்த மாறாத அதே தேவனே நமக்கு இருக்கிறார் என்பதை அறிவதால் நான்-நான் மிகவும் மகிழ்கிறேன். ஆமென். இன்னமும் மாறாத தேவன்... அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது; இன்றைக்கும் தேவன் ஜனங்களை சந்திக்கிறார். தேவன் தன்னுடைய சபையில் இருந்து, அந்த காரியத்தை சுத்திகரித்து, புளிப்பானதை அதை விட்டு அகற்ற முயற்சிக்கிறார். அவர் செய்தியாளர்களையும், அடையாளங் களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் மற்ற ஒவ்வொன்றையும் அனுப்பி, அவர் அவர்களை நேசிக்கிறார் என்றும், அவர்கள் சுத்தமாவதை அவர் விரும்புகிறார் என்பதையும் நிரூபிக்க முயற்சிக்கிறார். இதை இங்கேயிருந்து, ஒழுக்ககேடான எல்லாவற்றையும், புதன்கிழமை இரவுகளில் ஜெப கூட்டத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்து, நான்கு அல்லது ஐந்து முறை திருமணம் செய்த ஹாலிவுட்டில் இருந்து வந்த ஒரு வயதான பெண்ணின் இந்த மட்டமான காரியத்தை பார்ப்பதையும், மேலும் மேற்கு கடற்கரையிலிருக்கும் பாதி பெண்களுடன் இழிவான தொடர்பு வைத்திருப்பவனையும், "லூசியை யார் நேசிக்கிறீர்கள்," என்பதையும் மற்ற இந்த எல்லா காரியங்களையும் விட்டுவிடுங்கள். கிறிஸ்தவ ஜனங்களாகிய நீங்கள் அதை பார்ப்பதற்காகவே வீட்டிலிருந்து, தேவனுடைய வீட்டிற்கு வராமலிருக்கிறீர்கள், அதுவே உங்களுக்குள் என்ன ஆவி இருக்கிறது என்பதை காண்பிக்கிறது. ஆமென். FBI ஆவணங்களிலிருந்து நான் அதை பெற்று என் வீட்டில் வைத்திருக்கிறேன்; எந்த ஊழியக்காரர் வேண்டுமானாலும் அதை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கு முன்மாதிரிகளாக வைத்திருக்கும் அந்த ஜனங்கள்: அவர்களை போல் உடை உடுத்துவது, அவர்களை போல் பாவனை செய்வது, அவர்களை போல் பேசுவது, அவர்களுடைய நடத்தைகளையும் அருவருப்புகளையும் மட்டும் நீங்கள் அறிந்திருந்தால். சகோதரனே, வேதாகமத்தை வாசி. ஒரு கிறிஸ்தவனை போன்று பேசு; ஒரு கிறிஸ்தவனை போன்று நட; ஒரு கிறிஸ்தவனை போன்று இரு; ஒரு கிறிஸ்தவனை போன்று ஜீவி, அதுதான் இன்றைக்கு நமக்கு தேவை. ஆமென். 46. இப்பொழுது, அது முகவர்ணமோ, அல்லது உன்னுடைய தலை மயிரை வெட்டும் கத்தரிக்கோல்களோ உன்னுடைய பிரச்சனைகள் அல்ல. உன்னை அதை செய்யும்படி பண்ணுகிற உனக்குள் இருக்கும் அந்த ஆவிதான் பிரச்சனை. உண்மையான பிரச்சனை அதுதான். மேக்ஸ் ஃபேக்டர், (Max Factor அழகு சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் பெயர்] அவனால் முடிந்த அளவுக்கு அது எல்லாவற்றையும் உற்பத்தி செய்து, அங்கே மேலே வைத்திருந்தாலும், நீ மட்டும் ஒரு கிறிஸ்தவளாய் இருந்தால் அதை ஒருபோதும் தொடவே மாட்டாய். நான் என்ன கூறுகிறேன் என்றால், நீ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று, நீ ஜீவிக்க வேண்டிய இடத்தில் ஜீவித்துக்கொண்டிருந்து (அது சரி), உன்னுடைய பாஸ்டர் சத்தியத்தை பிரசிங்கித்து, அதை பற்றி உனக்கு அறிவித்திருந்தால். அதை நீ கொஞ்சம் கூட கவனிக்கவே மாட்டாய். நீங்கள் இருபத்தி ஐந்து டாலர்கள் கொடுத்து வாங்கும் இந்த சிறிய ஷூக்களை ஒரு டஜன் சேர்த்தாலும், அதை விட மிக அதிகமான பதனிட்ட தோலை (leather) கொண்ட அந்த முழங்கால் வரை லேஸ்நாடாக்கள் உள்ள ஷூக்களை, பட்டன் வைத்த பழங்காலத்து ஷூக்களை, இன்று உங்களால் எப்படி வீதியில் விற்க முடியும்? கால் விரலை சுற்றி ஒரு சிறு பட்டையிருக்கிறது, அதின்வழியாக மிக அதிகமாக சிகப்பு சாயமடித்த கால் விரல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது, மழையில் செல்லும்போது அந்த உயர்குதிங்கால்(heels) செருப்பு வழுக்கி செல்ல, நீங்கள் வீதியின் வழியாக அப்படியே நடந்து செல்கிறீர்கள். அது சரி. அது சரி. ஆனால் உங்களால் அந்த பழங்காலத்து ஷூக்களை விற்க முடியாது ஏனெனில் உங்களுக்கு அது தேவையில்லை; மார்த்தா சுசியானா வேறு விதமான ஒன்றை அணிந்திருப்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் பார்த்துவிட்டீர்கள். புரிகிறதா? அவளை போல உடை உடுத்தவே நீங்கள் விரும்புகிறீர்கள். தளர்வாக தொங்கிக் கொண்டிருக்கும் உடையை நீங்கள் விரும்புவதில்லை. அப்படியே உங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உடையையே நீங்கள் விரும்புகிறீர்கள், ஏனெனில் நீங்கள் சுசியை தொலைக் காட்சியிலும், வானொலியிலும், பத்திரிக்கையிலும் கண்டுவிட்டீர்கள். பிசாசு அந்த எல்லாவற்றையும், பீர் குடிப்பதையும், ஒர்டேல்ஸ் '92-வையும் [Ortels '92 - மதுபானத்தின் பெயர்], சில்ட்சையும் (Schlitz - மதுபானத்தின் பெயர்], இந்த எல்லா காரியங்களையும் வாலிப பிள்ளைகளை சுற்றி வைக்கிறான், அது... அது ஒரு பொய். வேறொன்றும் இல்லை ஆனால்... அது வாலிப பையன்களையும் பெண்களையும் அதை குடிக்கும்படிக்கு மயக்க - கண்களை கொண்ட ஈனர்களாக்குகிறது. அது பிசாசு. அது பைத்தியக் காரர்களுக்கான மருத்துவமனைகளை நிரப்புகிறது. அது விபச்சார விடுதிகளை நிரப்புகிறது. அது மற்ற ஒவ்வொன்றையும் செய்கிறது. அது குடும்பங்களை உடைத்தெரிகிறது. அது கற்பழிப்பிற்கும், கொலைக்கும், மற்ற ஒவ்வொன்றிற்குமே காரணமாயிருக்கிறது. சிகரெட்டுகளானது சிந்தைக்கு நஞ்சூட்டி, புற்றுநோயை விளைவிக்கிறது. மருத்துவ சங்கம் போதுமான அளவுக்கு அதை பொது அறிவிப்பு செய்திருந்தாலும் கூட,நீங்களோ தொடர்ந்து அந்த பிசாசின் புகையிலையை (devil's weed) புகைத்து கொண்டே இருக்கிறீர்கள். நான் எதற்காக இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை; அது நான் பேசுவதை போன்று இல்லை, ஆனால் அது அப்படியாக வெளியே வந்துகொண்டிருக்கும் வரை நான் - நான் - நான் அதை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறேன். சற்றே... அது சரி. அது தவறானது; அதை விட்டு விலகுங்கள். கிறிஸ்தவர்களே, தேவனால் நிரப்பப்படுங்கள். ஆம், ஐயா. 47. ஒரு நாள் தேவனுடைய வார்த்தைக்கு பதில் அளிக்கும் படியான அந்த கடைசி நேரம் வந்தபோது, எலியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்படியாக, அவர்கள் இரதத்தை சமாரியாவில் இருக்கும்-குளத்தில் கழுவுவதற்கு முன்பாக, ஆகாப்பின் இரத்தத்தை நாய்கள் அந்த அதே இடத்தில் நக்கின. அவன் எய்யப்பட்டு கொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் இரதத்தை கழுவ சென்றபோது, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின. யோசபாத்தின் குமாரனாகிய யெகூ, நீதிமானாயிருந்தான், சரியான அப்பாவை தனக்கு பின்பாக கொண்டிருந்தபோது, அதுதான் ஒரு சரியான மனிதனை ஒரு உண்மையான இராஜாவை உண்டாக்கியது. யோசபாத் தேவனுடைய மனுஷனாயிருந்தான். அவன் எதை உற்பத்தி செய்தான் என்பது புரிகிறதா? பாருங்கள்? யெகூ அந்த இடத்திற்கு இந்த இரதத்தில் கடுஞ்சீற்றத்தோடு சவாரி செய்து வந்த போது, பாவம் என்று அழைக்கப்படுகிற ஒவ்வொன்றை யும் அவன் சுத்திகரித்தான். அதாவது அவன் வீட்டை சுத்திகரித்தான் என்று நான் கூறுகிறேன். பெரிய ஆள் தொடங்கி சிறிய ஆள் வரை, கடுஞ்சீற்றத்தோடு சவாரி செய்து, அந்த காரியத்தை கிழித்தெறிந்து, கருப்பை கருப்பென்றும், வெள்ளையை வெள்ளை என்றும் அழைக்கிற இன்னும் கொஞ்சம் அதிகமான யெகூகள் இன்றைக்கு நமக்கு தேவைப்படுகிறார்கள் (அது சரி.). அது சரி. சரியை சரியென்றும், தவறை, தவறென்றும்... 48. மேலும் அவன் அந்த இடத்தினூடாக வந்தபோது, சிறு மிஸ் யேசபேல், அவள், "சரி, எப்படியாயினும் நான் ஒரு கவர்ச்சியானவள் (vamp), தெரியுமா." என்று நினைத்தாள். "நான் கண்ணுக்கு இனியவளாக இருக்கிறேன்" என்றாள். மேலும் அவள் அங்கே சென்று தன்னுடைய அழகுசாதன பெட்டியை எடுத்து, உங்களுக்கு தெரியும், அவள் தன்னுடைய முகத்தை முழுவதுமாக அந்த அழகு சாதன பொருட்களுடனும் மற்றவைகளுடனும் அலங்கரிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு தெரியும். உணவகத்தில் பெண்கள் அவ்வாறு செய்வதை நான் கண்டிருக்கிறேன், அதன்பின் ஒரு காகித துண்டை, ஒரு துடைக்கும் துணியை எடுத்து, அதை அப்படியாக உதட்டில் ஒத்திஒத்தி எடுப்பார்கள். அப்படி செய்வது எனக்கு ஒரு குச்சியையோ அல்லது என்னத்தையோ அப்படியாக கடிக்க முயற்சித்து, மீண்டும் அதை பார்த்து, அதை சுற்றி சுற்றி வரும் ஒரு வெறிநாயைதான் நினைவுப்படுத்துகிறது. பின்பு அவள் தன்னை முழுவதுமாக அலங்கரித்து, அவள் தன்னுடைய தலை மயிரை அது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியாக இருக்கும் விதத்தில், சீவி சிங்காரித்துக்கொண்டாள், உங்களுக்கு தெரியும். அவள் மிகமிக அழகாக இருப்பதாக அவள் நினைத்தாள். புது விதமான உடையை உடுத்திக்கொண்டு, பகட்டாக அவள் வெளியே நடந்து வந்தாள், உங்களுக்கு தெரியும். அவள் ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து, "சிம்ரி ஷேமம் அடைந்தானா?" என்றாள். 49. யெகூ ஒரு தேவமனுஷனாயிருந்தான்; அது அவனிடம் செல்லவில்லை. அவன் அந்த சரியான ரகத்தை சேர்ந்த பாஸ்டராயிருந்தான். அவன் ஒரு உண்மையான சுவிசேஷகன். அவன், "என் பட்சமாகவும் தேவன் பட்சமாகவும் அங்கே மேலே இருப்பவர்கள் யார்?" என்று கேட்டான். அவைகளை பொறுத்துக்கொள்ள முடியாத அவளுடைய தைரியமான இரண்டு அண்ணகர்கள், "நாங்கள் இருக்கிறோம்" என்றார்கள். "அவளை ஜன்னலை விட்டு கீழே தள்ளுங்கள்" என்றான். ஆமென். அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான், என்று கூறலாம், இல்லையா? அவள் தரையை வந்து மோதியவுடன் இரத்தமானது குதிரைகளின் மீதும் அந்த இரதத்தின் மீதும் தெறித்தது. "அவள் அங்கேயே கிடக்கட்டும்" என்று கூறி, அவள் மீது ஓட்டி சென்றான். அவனுக்கு தெரியக்கூட இல்லை விரும்ப... அவன் இன்னும் தேவனுடைய சித்தத்தில் தான் இருந்தான். ஏனெனில் தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தேவனுடைய சித்தத்தோடு தான் கிரியை செய்யும். அங்கே சென்று, அமர்ந்து, தன்னுடைய விருந்தை(dinner) சாப்பிட்டு, "நல்லது, இன்றைக்கு ஒரு நல்ல சுத்திகரிப்பு" என்றான். "நீங்கள் சென்று அவளை அடக்கம் பண்ண வேண்டும். 'ஏனெனில் அவள் ஒரு இராஜகுமாரத்தி" என்றான். அவள் அங்கே வந்தபோது, தேவனுடைய வார்த்தை நிறைவேற வேண்டும் என்பதை அவன் மறந்துவிட்டான். மீதி இருந்தது என்ன? அவளுடைய கையின் உள்ளங்கைகளும் மேலும் அவளின் மண்டை ஓடு மட்டுமே. அந்த நாய்கள் அவளை தின்றுவிட்டன. நீங்கள் மாத்திரம் அது என்னவென்று அறிந்தால். அது ஒரு வினோதமான காரியமாக இருந்திருக்க வேண்டும், 'ஏனெனில் நாய்கள் மனிதனுடைய இரத்தத்தை தொடாது. அது சரி. அப்படி செய்யும்படி அவைகளை உந்தித்தள்ளினவர் தேவனே. அது சரி. நான் அதை அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆம், ஐயா, அவை மனிதனுடைய இரத்தத்தை தொடாது. ஆகவே அப்பொழுது இந்த நாய்கள் அவளை தின்று விட்டன, ஏனெனில் அதை செய்ய வேண்டுமென்று தேவன் அவைகளுக்கு கட்டளையிட்டிருந்தார். அவள் அங்கே அப்பேற்பட்ட அவமானத்தை அடைந்தாள். 50. தேவனுடைய வார்த்தை ஜெயங்கொண்டது. நண் பனே, அது எப்போதுமே ஜெயங்கொள்ளும். நான் உன் மீது கோபபடவில்லை. நான் உன்னை நேசிக்கிறேன். நீ வேண்டுமென நான் விரும்புகிறேன்... நான்-நான் சுவிசேஷ ஆராதனையை விட்டு தள்ளி இருப்பது நல்லது, 'ஏனெனில் அநேகமாக நான் மிகவும் கரடுமுரடாக பிரசங்கிக்கிறேன். அப்படி செய்யவேண்டும் என்பது என்னுடைய எண்ண மல்ல. நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், சகோதரனே, சகோதரியே, அதுதான் சத்தியம். அதுதான் சத்தியம், எனவே எனக்கு உதவுங்கள். மேலும் இதை என்னால் கூற முடியும்: அது கர்த்தர் உரைக்கிறதாவ தாயிருக்கிறது, ஏனெனில் அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது. அது சரி. இப்பொழுது, அந்த நீண்ட கால புற்றுநோயின் நிலைபாட்டை சபையை விட்டு அகற்றுங்கள். பெண்களே, அதை விட்டு வெளியே வாருங்கள். பெண்கள் மட்டும் அல்ல, ஆனால் ஆண்களும் கூட, ஆண்களே, அதை விட்டு வெளியே வாருங்கள். மேலும் பிரசங்கியாரும் கூட, பாஸ்டர், நீங்கள் தடுப்புவேலியை கீழே போட்டு விட்டீர்கள். உங்களில் ஏதோவொன்று தவறாயிருக்கிறது. நீங்கள் ஜெபத்தில் முழுமையாக தரித்திருக்கவில்லை, இல்லையென்றால் உம்முடைய சபையார் அந்நிலைக்கு செல்வதை உம்மால் கண்டிருக்க முடியும்; நீங்கள் நான்கு சுவற்றிற்கு பிரசங்கித்தாலும், நீங்கள் உறுதியாக நின்று அந்த காரியத்தை தடுத்திருப்பீர்கள். அது உண்மை. அதுதான் சத்தியம். நீங்கள் அதை செய்திருப்பீர்கள். 51. நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் ஒரு பாணி- பழைய பாணியிலான அழுத்தி தேய்த்து, சுத்திகரிக்கப் படுவதே. பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் கவனிக்கவில்லை யென்றால், பாப்டிஸ்டுகளும் பிரஸ்பிடேரியன்களும் உங்களுடைய ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்டு, அதோடு அவர்கள் மகிமைக்கு சென்று விடுவார்கள். பிரபலமான பாப்டிஸ்டு ஊழியக்காரர்களும், பிரஸ்பிடேரியன்களும், லூத்தரன்களும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்று, "சகோதரன் பிரன்ஹாமே, அதற்காக நாங்கள் பசியோடு இருக்கிறோம். அதற்காக நாங்கள் பசியோடு இருக்கிறோம்" என்று கூறுகிறார்கள். தேசத்தில் இருக்கும் சில தலைசிறந்த மனிதர்கள் (outstanding men) தேவனுக்காக பசியோடு இருந்து, அவர்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே முன்னேறிக்கொண்டே செல்கிறார்கள். ஓ, நாம் சுத்திகரித்துக் கொள்வோம். லூத்தரன்கள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தெகொஸ்தேயினர்கள் என நாம் அனைவருமே. நாம் பிரிந்திருக்கவில்லை; நாம் அனைவரும் அந்த ஜீவிக்கிற தேவனுடைய ஒரு பெரிய சபையாயிருக்கிறோம். நாம் ஒருவரோடு ஒருவர் நம்முடைய கரங்களை இணைத்து, நம்முடைய இருதயங்களை இணைத்து, கல்வாரியை நோக்கிப் பார்த்து, பெரியோர் முதல் சிறியோர் வரை அணிவகுத்து செல்வோம். நாம் வெற்றி மேல் வெற்றி அடைந்து தொடர்ந்து முன்னேரிடுவோம். நண்பர்களே, இயேசு சீக்கிரமாக வருகிறார். இங்கே இருக்கும் ஜனங்களே, நினைவில் கொள்ளுங்கள், அந்த வெளியே அழைக்கப்பட்ட குழுவாயிருக்க முயற்சியுங்கள். கடைசி சபை காலத்தில் அந்த வெதுவெதுப்பான லவோதிக்கேயா சபை காலம் இருக்கும் என்று வேதாகமம் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். அந்நிலையை தான் பெந்தெகொஸ்தே சபை அடைந்திருக்கிறது. அந்நிலையை தான் அவர்கள் அனைவரும் அடை கிறார்கள். நீங்கள் கவனிக்கவில்லையென்றால், தேவன் கீழே இறங்கி வந்து, இங்கேயும், மேலும் இங்கேயும், மேலும் இங்கேயும் மீதி இருக்கும் கொஞ்ச பேரை மணவாட்டியாக்கி இழுத்துக் கொண்டு போய்விடுவார். பாருங்கள்? எனவே நாம் விழித்திருந்து, தேவனை நம்பி, தேவனில் விசுவாசம் வைத்து, தேவன் இங்கே இருக்கிறார் என்று விசுவாசிப்போம். 52. எலியாவுக்குள் இருந்த அதே தேவன் தான் இன்றிரவும் மாறாத தேவனாய் இங்கேயும் இருக்கிறார். அவர் அந்த அதே மாறாத தேவன்... நீங்கள் வேண்டுமானால் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் அது மாறாத அதே தேவன்தான். அவர்-அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் அற்புதங்களை செய்கிறார்; அவர் தரிசனங்களை காண்பிக்கிறார்; அவர் வல்லமைகளை அனுப்புகிறார்; அவர் வியாதியஸ்தர்களை குணப்படுத்துகிறார்; அவரிடம் வெளிப்பாடுகள் இருக்கின்றன; அவர் - ஒவ்வொன்றுமே, தேவன் எப்பொழுதும் செய்து வந்த அதையே மிகச்சரியாக செய்கிறார். அப்படியானால் நண்பர்களே, இந்த வேதாகம வெளிச்சத்தில், அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்து ஜீவித்த விதமாகவே எப்படி நம்மால் தொடர்ந்து ஜீவிக்க முடிகிறது? நீங்கள் செய்கிற காரியம் இதோ இருக்கிறது. இப்பொழுது, இன்றிரவு நீங்கள் சபையை விட்டு செல்லும் போது, "உனக்கு தெரியுமா, சகோதரன் பிரன்ஹாம் சொன்னது சரிதான் என்று நான் ஒருவிதத்தில் விசுவாசிக்கிறேன். ஆம், இப்பொழுது, அதுதான் சத்தியம்." ஆனால் நீங்கள் போகக் கூடாது என்று இருக்கும்போது நீங்களோ நாளைக்கு நேரடியாக அலுவலகத்திற்கு மீண்டுமாக போய் விடுகிறீர்கள். உங்கள் கணவன் வியாதிப்பட்டிருந்தால், நீங்கள் அதை செய்யவேண்டும். ஆனால் அவன் வியாதிப்பட வில்லையென்றால், அன்பான சகோதரியே, கவனியுங்கள், தேவன் உங்களை ஒரு இடத்திற்காக உண்டாக்கினார், அது சமையல் அறையாயிருக்கிறது. நீங்கள் அதை விட்டு வெளியே செல்லும்போது, நீங்கள் அவருடைய சித்தத்தை விட்டு வெளியே சென்றுவிடுகிறீர்கள். அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் உதவிக்கான துணைவியாய் (helpmate) இருக்கும்படிக்கே பெண்ணானவள் உண்டாக்கப்பட்டாள். அலுவலக பணிக்காக அவள் ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை. அது மிக அதிகமான அவமானத்திற்கும் விவாகரத்துகளுக்கும் மற்றவைகளுக்கும் காரணமாயிருக்கின்றன. இன்றைக்கு, வீதிகளில் இருக்கும் பெண் போலீஸ்களால் உங்களுடைய அருமையான நகரமும் கூட எங்களுடையதை போல தரங்குறைந்து போய் விட்டது. ஆயிரக்கணக்கான ஆண்கள் வேலை தேடி வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும்போது அது சிகாகோவுக்கோ அல்லது வேறேதோ நகரத்திற்கோ அவமானமாக இல்லையா. அது நிச்சயமான உண்மை. மேலும் அதிகாரத்தோடு? ஓ, என்னே. "ஏய், அங்கே போ." [பெண் போலீஸ்கள் போன்று சகோதரன் பிரன்ஹாம் சொல்லிக்காட்டுகிறார்]. நீங்கள் சமையலறையில் இருந்து உங்களுடைய கணவனுக்காக இரவு வேளைக்கான அல்லது மற்ற வேளைக்கான பையை [பை pie - உணவு வகையின் பெயர்] சமைக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நிச்சயமான உண்மை. 53. எனக்கு தெரிகிறது நீங்கள்... நண்பர்களே, அது - அது கடினமாயிருக்கிறது. ஆனால் அது வெறுப்போடு கூறப் படவில்லை; அது அன்போடு கூறப்படுகிறது, அதாவது நான் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் அதை அந்த முகவர்ணம் பூசியுள்ள யேசபேல் விதத்தில் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் பாவத்தை பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அது - அது அவ்வளவுதான். நான் - நான் - நான் அதை விரும்புவதில்லை. நான் அதை ஜனங்களில் பார்க்கிறேன். இங்கே இருக்கும் ஜனங்களும், நான் எந்த ஜனங்களுக்கு பிரசங்கிக்கிறேனோ அவர்களும் என்னை நேசிக்கிறார்கள். அந்த ஜனங்களிடமிருந்து தான் எனக்கு வாழ்வாதாரமே கிடைக்கிறது. தேவன் அவர்களு டைய இருதயத்தில் அதை வைக்கிறார் மேலும் அவர்கள் எனக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கிறார்கள். ஆனால் நான் நியாயத்தீர்ப்பின் மன்றத்தில் நிற்க, தேவனுடைய அந்த மகத்தான வெளிச்சத்தின் பிரசன்னத்தில், தேவன் என்னை கீழே நோக்கிப்பார்த்து, "வில்லியம் பிரன்ஹாம், அது தவறு என்று உனக்கு தெரிந்திருந்தும், அவர்கள் அதினுள் விழும்படியாக நீ விட்டுவிட்டாய். எனவே அவர்களுடைய இரத்தப்பழியை உன் கையிலே நான் கேட்கிறேன்" என்று கூறினால். தேவன் தடுப்பாராக. இல்லை, இல்லை, இல்லை. நான் இதை சொல்லுகிறேன், என் அருமையான சகோதரனே, சகோதரியே, நான் உயிர் வாழ தேவன் எனக்கு சுவாசத்தை தருகிற வரை அதை பிரசங்கிப்பேன். அதன்பின் அந்நாளில், அது... நீ - நீ... அவர் "மிகவும் நன்றாக செய்தாய், உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே." என்று அவர் கூறுவதையே நான் விரும்புகிறேன். இப்பொழுது, அவர் அப்படிதான் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மேலும், அவர், "ஓ, இப்பொழுது நீங்கள் சந்தோஷமான ஜனங்களா யிருக்கிறீர்கள், உங்களிடமிருந்த உலக காரியங்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டதால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா" என்று அவர் கூறவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். 54. அது மற்றொரு இரவில் மயிர் கத்தரிக்கப்பட்ட செம்மறி ஆட்டை பற்றி நான் பிரசங்கித்ததை போன்று இருக்கிறது. நீங்கள் செம்மறி ஆடாயிருக்கிறீர்கள், ஆவியானவர் சபையை விட்டு சென்றதற்கான காரணம் என்னவென்றால், ஆவியானவர் செம்மறியாட்டின் மீது மட்டுமே தங்குவார். "இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, இந்த காரியங்களை செய்யும் பெண்களாகிய எங்களை பற்றியும், மேலும் ஆண்களாகிய எங்களை பற்றியும் நீங்கள் பேசுகிறீர்கள். அது... சகோதரன் பிரன்ஹாமே, வேலையை முடித்துவிட்டு நான் விட்டிற்கு வந்த பிறகு, நான் கொஞ்சமாக குடிக்கலாம் என்று விரும்புவது என்னுடைய அமெரிக்க உரிமையாயிருக்கிறதே." என்று நீங்கள் கூறலாம். அது சரிதான். "ஒரு நல்ல சிகரெட்டை நான் புகைக்க விரும்பி னால், அதைப்பற்றி பேசுவது உங்களுடைய வேலையல்ல. அது என்னுடைய உரிமையாயிருக்கிறது." அது சரிதான். ஆனால் நீ ஒரு செம்மறி ஆடாயிருந்தால், உன்னுடைய சொந்த உரிமைகளை, உன்னுடைய சொந்த சிறப்புரிமைகளை கத்தரிக்கப்படும்படி நீ விட்டுக்கொடுக்க விரும்புவாய் ஒரு செம்மறி ஆடானது அதின்மீது என்ன வருகிறதோ அதை அவர்கள் எடுத்துக்கொள்ளும்படியாக, கீழே படுத்துக்கொள்ள விரும்புகிறது, அதினுடைய... அது சரிதானே? "நான் ஒரு ஆடையையும் ஒரு கீழ்சட்டையையும் (skirt) அணிந்துக்கொள்ள விரும்பினால், அதை நான் விரும்புகிற விதத்தில் அணிந்துகொண்டால், அது என்னுடைய தனிப்பட்ட விஷயமாயிருக்கிறது. அது எனக்கான அமெரிக்க சிறப்புரிமை யாயிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பொது ஜனங்கள் அதை அணிந்துகொள்கிறார்கள், அவர்கள்... அது அது சட்டபூர்வமானது. அதை அணிந்து கொண்டு சென்றால் அவர்கள் என்னை வீதியிலிருந்து துரத்திவிடமாட்டார்கள். அதை செய்யவேண்டும் என்று நான் விரும்பினால், நான் செய்வேன். அது என்னுடைய சிறப்புரிமையாயிருக்கிறது." என்று நீங்கள் இவ்வாறு கூறலாம். பெருமாட்டியே (Madam) அது சரிதான்; அது நிச்சயாமான உண்மை. ஆனால் நீங்கள் மாத்திரம் ஒரு செம்மறியாடாயிருந்தால், தேவனுடைய செம்மறியாடாய் இருக்கும்படி உங்களுடைய உரிமைகளை இழக்க தயாராயிருப்பீர்கள். அது சரி. நீங்கள் ஒரு செம்மறியாடாயிருந்தால், உங்களுடைய உரிமைகளை நீங்கள் ஒப்புப் கொடுத்துவிடுவீர்கள். அது உண்மை. ஆகவே நீங்கள் அதை செய்யவேண்டும். நீங்கள் - நீங்கள் வெளியே சென்று அதை முயற்சிக்காதீர்கள்... "சரி, நான் அதை விட்டுவிட போகிறேன்" என்று நீங்கள் கூறலாம். தேவன் அதை உங்களுக்கு அப்படியே -அப்படியே உங்களால் அதை மறுக்கவே முடியாத அளவுக்கு அவ்வளவு உண்மையாக் கும் வரை ஜெபியுங்கள், நீங்களே அதை விட்டுவிடுவீர்கள். நீங்கள் மட்டும் அப்படி செய்தால். இப்பொழுது, உங்களுக்கு உதவும்படியாகவே நாங்கள் இங்கே இருக்கிறோம், உங்களை புண்படுத்தும்படியாக அல்ல, ஆனால் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாயிருக்கும் படியாகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இன்றிரவு, நீங்கள் இந்த பழமையான கடினமான வெட்டும் சுவிசேஷ செய்தியை உங்களுடைய இருதயத்தில் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு சென்று, அதை பற்றி ஜெபித்து, "தேவனே, என் மீது இரக்கமாயிரும்" என்று சொல்ல வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். அது சத்தியமாக இருக்கிறது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், "அது தான் சத்தியம் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்?" என்று கூறுகிறவர்கள், உங்களுடைய கையை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமை. நாம் ஜெபிக்கலாம். 55. எங்களுடைய அன்பான பரலோக பிதாவே, ஆசீர்வதிக்கப்பட்ட உம்முடைய பரிசுத்த வார்த்தையின் வெளிச்சத்தில், என்னுடைய இருதயத்தில் இன்னுமாக ஊற்றிக்கொண்டிருந்தாலும், வரவிருக்கிறதான இந்த ஜெப வரிசைக்காக நான் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். தேவனே, இப்பொழுது நீர் உதவி செய்யும் படியாக நான் ஜெபிக்கிறேன். எப்படியாவது நான் சொல்ல போவதாக இருந்தவைகளை, அவர்களுடைய இருதயங்களில் உந்தி தள்ளும். கர்த்தாவே, அதை அருளும். அன்பின் ஆவியினால் (Spirit of love) அது ஏற்றுக்கொள்ளப்படுவதாக, கண்டனத்தினால் அல்ல, ஆனால் அன்பின் ஆவியினால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, இந்த கடுமையான பாவத்தின் புற்றுநோய் உம்முடைய இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளின் மீது வந்துகொண்டிருப்பதையும், எப்படியாக பாஸ்டர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்து அதைப்பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் காண்கிறேன். ஓ தேவனே, அதை எதிர்த்து நிற்கும் மனிதர்களை எழுப்பும். கர்த்தாவே, அதை அருளும். என்னவாயிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எதிர்த்து நின்று (பிதாவே, அதை அருளும்), அவர்களால் வெளிச்சத்தை காணமுடியும் என்று பிரசங்கிக்கும் இன்னும் அதிகமான திஸ்பியன்களை, எலியாவை வழியிலே அனுப்பும். ஓ, ஆமாம், யேசபேலுக்கு வெளிச்சம் இருந்தது, வெளிச்சம் அதிகமாகவே இருந்தது. தேவன் ஜெபத்திற்கு பதில் அளித்தார் என்றும் அற்புதங்களை செய்தார் என்றும் பார்க்கும்படியாக அவளுக்கு கர்மேல் பர்வதத்தின் வெளிச்சம் இருந்தது. அவளுக்கு அது தெரியும். ஆனால் அவளோ தியாகம் செய்துவிட்டு, அந்த வெளிச்சத்தில் நடக்க விரும்பவில்லை. பிதாவே, இன்றிரவு இங்கே இருக்கும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதித்து, மகிமையை எடுத்துக்கொள்ளும்படியாக, நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது வியாதியஸ்தர்களை குணப்படுத்தி, எலியாவின் தேவன் இன்றிரவும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார், அவர் இன்னும் மாறாத அதே தேவனாக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்தும். நான் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். 56. நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்கிற இந்த வேளையிலே, இன்றிரவு நான் வியக்கிறேன்... ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்போது ஒரு குடும்பத்திலிருக்கும் சிறு உரையாடலை போன்று நாம் கொண்டிருந்த இந்த சிறு உரையாடலில் நான் எதிர்ப்பார்க்கிறேன், ஆராதனையில் எனக்காக ஒதுக்கப்பட்ட பாகம் நாளை இரவு முடிவடை வதற்கு - முன்பு, "சகோதரன் பிரன்ஹாமே, இதினால்..." என்று நீங்கள் கூறுவீர்களா என நான் எதிர்ப்பாக்கிறேன், சகோதரன் பிரன்ஹாமே என்றல்ல, "தேவனாகிய கர்த்தாவே, இந்த காரியங்களில் நான் குற்றமுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் நான் என்னை பற்றி வெட்கப் படுகிறேன். நான் - நான் சபைக்கு போய் கொண்டு என்னை நானே ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்கிறேன். நான் கொஞ்சமாக குடிக்கிறேன். நான் கொஞ்சமாக புகை பிடிக்கிறேன். கும்பலோடு சேர்ந்து, சில கொச்சையான ஜோக்குகளை சொல்லுகிறேன். பொதுவாக பழகும் இடங்களில் நான் குடிக்கிறேன், ஆனால் என்னை குறித்து நான் வெட்கப்படுகிறேன், சகோதரன் பிரன்ஹாமே, கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரன் என்று அறிக்கை செய்தும், ஒரு தவறான ஆவிதான் என்னை அவ்வாறு செய்யவைக்கிறது என்பதை நான் உணருகிறேன். ' மேலும் பெண்களும், "சகோதரன் பிரன்ஹாமே, நான் - நான் என்னை குறித்து வெட்கப்படுகிறேன், என்னுடைய - என்னுடைய எல்லா தலை முடியையும் நான் வெட்டிவிட்டேன், நான் அப்படி செய்யக்கூடாது என்று வேதாகமம் எனக்கு கூறியிருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னுடைய நேரத்தின் பெரும் பகுதியை நான் அலங்கார நிலையத்தில் (Beauty shop) செலவழிக்கிறேன் என்பதை நான் அறிவேன்" என்று கூறுவார்களா என்று. "சகோதரியே உங்களுடைய சிறந்த தோற்றத்தில் நீங்கள் தோற்றமளிக்க வேண்டும். அது சரி. சுத்தமாகவும் அழகாகவும் அன்பாகவும் இனிமையாகவும் இருங்கள். நீங்கள் அப்படி இருப்பதை உங்களுடைய கணவன் பாராட்டுவார் என்பதை நான் அறிவேன். உங்களுடைய தலை முடியை நீங்கள் வளரவிட்டால் நீங்கள் இன்னும் அழகாக இருப்பீர்கள்... பெண்கள் நீளமான தலை முடியுடன் இருக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு ஆண்களை போல இருக்க கூடாது. ஆண்கள் நீளமான தலை முடியுடன் இருக்க கூடாது. அவன் நீளமான தலை முடி வைத்திருக்க கூடாது என்று வேதாகமம் கூறுகிறது. 57. "சகோதரன் பிரன்ஹாமே, நான் முகவர்ணங்களையும் அழகு சாதனங்களையும் பயன்படுத்தியிருக்கிறேன். நான் தவறான உடைகளை அணிந்து; என்னை நானே ஆண்களுக்கு முன்பாக காட்சிப்படுத்தியிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்" என்று கூறுங்கள். கவனியுங்கள், நான் இதை கூறினேன். நான் அதை மீண்டும் கூற விரும்புகிறேன், உங்களுடைய தலைகளை தாழ்த்தி யிருக்கையிலே, அன்பான சகோதரியே, உன்னுடைய கணவனுக்கு நீ ஒரு லீலி புஷ்பத்தை போன்று அவ்வளவு தூய்மையாக இருக்கலாம்; நீ மிகவும் தூய்மையாக இருந்து, அந்த காரியங்களால் களங்கமில்லாமல் இருக்கலாம். ஆனால் நியாயத்தீர்ப்பின் போது விபச்சாரம் செய்தாய் என்று நீ அழைக்கப்படலாம் என்பது உனக்கு தெரியுமா? "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று" என்று இயேசு கூறியதை நீ அறிவாய். நல்லது, நீ அந்த விதத்தில் உடை அணிந்து வீதியில் நீ செல்லும்போது, ஒரு பாவியான மனுஷன் உன்னை பார்த்து இச்சித்தால், பின்பு அவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே விபச்சாரம் செய்ததற்காக பதில் கூறவேண்டும். நீதான் அப்பொழுது குற்றம் செய்த ஒருவளாய் இருப்பாய். மேலும் தேவனுடைய பிரசன்னத்தில் நீ விபச்சாரம் செய்ததற்காக பதில் கூற வேண்டும். எந்த விபச்சாரியும் எப்பொழுதும் பரலோகத்திற்குள் நுழையவே முடியாது. அவனுக்கு முன்பாக அந்த விதத்தில் இருக்கும்படியாக நீ உன்னையே காட்சிப்படுத்தினாய். நான் கூற வருவது உனக்கு புரிகிறதா? உன்னுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, நியாயத்தீர்ப்பில் நீ முழுவதுமாக ஏமாற்றமடையக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நீ செல்லவேண்டுமென்று நான் விரும்புகிறேன். உன்னால் முடிந்த அளவுக்கு நீ தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கலாம். நீ மிகவும் அன்பான பெண் வகையை சேர்ந்தவளாக இருக்கலாம், ஆனால் நீ அவ்விதத்தில் ஆடை அணிந்துகொள்கையில் மனுஷன் உன்னை நீயே இச்சித்தால், உன்னை அவ்விதத்தில் மனுஷனுக்கு காட்சிப் படுத்தினாய், எனவே அவர்கள் அப்படி செய்கிறார்கள், நியாயத்தீர்ப்பின் நாளில் ஒரு விபச்சாரியாக நீ பதில் கூறுவாய். அது நிச்சயமான உண்மை. வேதாகமம் அப்படிதான் கூறியிருக்கிறது. பாருங்கள், இந்த வார்த்தை ஆழமாயிருக்கிறது. 58. என்னுடைய தாய்நாடாகிய இந்த அமெரிக்கா தேசத்தில் நான் வருட கணக்காக பயணம் செய்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு நான் உங்கள் அனைவரிடமும் கூறினேன். நான் இந்த தேசத்தினூடாக வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக்கொண்டும், அற்புதங்களோடும் அடையாளங்களோடும் சுற்றினேன். நான், "இந்த நாட்களில் ஒன்றில் நான் திரும்பி வருகிறேன். நான் சுவிசேஷ சத்தியத்துடன் வருகிறேன்" என்று கூறினேன். அது சரி. ஜனங்களின் அன்பை என்னால் சம்பாதிக்க முடிந்தால், அப்பொழுது எது சத்தியமோ அதை நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் குற்றமுள்ளவராயிருக்கிறீர்களா? இப்பொழுது யாரும் உங்களுடைய தலையை உயர்த்தாதீர்கள், ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். உங்களுடைய கையை நீங்கள் கிறிஸ்துவிடம் உயர்த்தி கூறுங்கள், "உம்முடைய உதவியால், தேவனே, என்னுடைய இருதயத்தை இன்றிரவு சுத்தப்படுத்தும், நான் ஒரு வித்தியாசமான நபராயிருக் கட்டும்." ஆண்கள் அல்லது பெண்கள் இருவருமே, சரியாக இப்பொழுதே உங்களுடைய கையை கிறிஸ்துவிடம் உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; ஒவ்வொரு இடத்திலும், அது பரவாயில்லை. 'கிறிஸ்துவே, உம்முடைய உதவியால், இந்த இரவு முதற்கொண்டு என்னை வித்தியாசமாக பார்க்க வைக்கிற, வித்தியாசமாக நடக்க வைக்கிற ஒரு வித்தியாசமான ஆவியை (Spirit) நீர் எனக்கு தரும்வரை நான் ஜெபிக்க விரும்புகிறேன். உலகத்தைப் போல நான் நடந்துக்கொள்ள விரும்பவில்லை." உலகத்தை விட்டு வேறுபிரிந்திருங்கள், அசுத்தமானதை விட்டு, விருத்தசேதனம் பண்ணப்படாததை விட்டு வெளியே வாருங்கள், அவர்களுடைய அசுத்தமானவைகளையும், அவர்களுடைய ஆபாசமான உடைகளையும், அவர்களுடைய புகைப்பிடித்தலையும், அவர்களுடைய குடிப்பழக்கத்தையும், அவர்களுடைய சூதாட்டங்களையும், அவர்களுடைய கொச்சையான நகைச்சுவை களையும் தொடாதீர்கள். உங்களை அதோடு நீங்கள் சம்பந்தபடுத்தி கொள்ளாதீர்கள். தேவன்... தேவனுடைய அந்த மென்மையான புறா, மிக மோசமான அசுத்தமான காரியங்கள் அவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது அது போன்ற ஒரு இடத்தில் எப்போதாவது உட்காரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை நண்பனே, இல்லை, இல்லை. அது உடனடியாக பறந்து விடும். ஆகவே அது போன்றதை நீங்கள் உங்களில் கொண்டிருந்தால், இன்றிரவே அதை உங்களை விட்டு நீக்கிவிடுங்கள், நீங்கள் நீக்குவீர்களா? இப்பொழுது, குறைந்தது முப்பது, நாற்பது கைகள் மேலே உயர்த்தப்பட்டது. உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன். 59. இப்பொழுது, அன்பான தேவனே, இன்றிரவு நான் வீட்டிற்கு மகிமைக்கு செல்ல வேண்டுமானால், அதை நான் விசுவாசிக்கிறேன் என்றோ ஓர் நாளில்... என்னோடு நீர் ஈடுபட்டு முடிக்கும் வரை நீர் என்னை இங்கே நீண்ட காலமாக வைத்திருக்கிறீர் என்று நான் நம்புகிறேன், நீர் அதை செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் சுவிசேஷ வெளிச்சத்திலே நான் சத்தியத்தை தான் கூறினேன் என்று நான் உணருகிறேன். மேலும் நான் ஜெபிக்கிறேன், தேவனே, அதாவது - அதாவது அது சரியாக இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று. உயர்த்தப்பட்ட இந்த கைகளால், தாங்கள் தவறாயிருக்கிறோம் என்று அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்; கர்த்தாவே, அவர்கள் உத்தமமாக இருக்கிறார்கள். அவர்கள்... அவர்கள் புண்பட்டவர்களாய் உணருவதை நாங்கள் விரும்பவில்லை; அவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டோம் என்று உணருவதையே நாங்கள் விரும்புகிறோம். இப்பொழுது அவர்கள் எங்களுக்கு வேண்டும், அவர்களுக்கு ஒரு புது ஆவியை கொடுப்பது, உம்முடைய தெய்வீக சித்தமானால், அது உம்முடைய தெய்வீக சித்தம் தான் என்பதை நான் அறிவேன். அவர்கள் அப்படியாக நடந்துக்கொள்ள விரும்பவில்லை. ஆண்கள் குடிப்பதும் அது போன்றவைகளை செய்வதும், மேலும் கெட்ட வார்த்தைகள் நிறைந்த ஜோக்குகளை சொல்லவும் விரும்பவில்லை. பெண்களும் தங்களுடைய முகங்களுக்கு வர்ணம் அடித்து, அஞ்ஞானிகளை போல நடக்கவும், அஞ்ஞானிகளின் அடையாளத்தோடு அடையாளப்படுத்தி கொள்ளவும் விரும்ப வில்லை. தேவனே, இன்றிரவு அவர்களுக்கு நீர் உதவி செய்யும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இப்பொழுது, அந்த... கர்த்தாவே, எல்லா பாவிகளையும் இரட்சியும். பின் வாங்கிபோனவர்களை மீண்டுமாக தேவனுடைய ஆசீர்வாதங்கள் இருக்கும் இடத்திற்கு திரும்பவும் அழையும். அல்லேலூயா தோட்டத்திற்குள் பாய்ந்து செல்லும் நீர்பாசன வழியை அடைத்திருக்கும் அந்த காரியங்களையும் அந்த மோசமான எல்லா அடைப்புகளையும் எடுத்துப்போடும், அங்கே பூக்கள் நித்தியமாக வளர்ந்து, தேவனுடைய பரிசுத்தமான பிரசன்னத்தின் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நறுமணம் அவர்களோடு அந்த நாள்முழுவதும் இருக்கட்டும். தேவனே, அருளும். தண்ணீர் பாய்ச்சலானது நின்றுவிட்டது ஏனெனில் பாவம் அதை செய்தது. தேவனே, இன்றிரவு எல்லா பாவங்களையும் அகற்றிப் போட்டுவிட்டு, உம்முடைய ஆசீர்வாதங்களாலும் உம்முடைய இரத்தத்தினாலும் அந்த தோட்டத்திற்கு மீண்டுமாக தண்ணீர் பாய்ச்சும், கர்த்தாவே, அது அப் படியே ஆகட்டும் - அந்த பாவமானது எடுக்கப்படட்டும். 60. இப்பொழுது, கர்த்தாவே, நீர் இன்னுமாக அதே கர்த்தராகிய இயேசுவாய் இருக்கிறீர் என்றும் நான் உம்முடைய ஊழியக்காரன் என்பதையும் ஜனங்கள் அறிந்துக்கொள்ளட்டும், இப்பொழுது நான் ஜெபிக்கி றேன், இந்த கடினமான, முரட்டுத்தனமான பேச்சிற்கு பிறகு, கர்த்தாவே, நீர் - நீர் ஜனங்களை நேசிக்கிறீர் என்றும், இது உம்முடைய செய்தி என்றும், அவர்கள் சுகமாக இருக்கவும், செழிப்படையவும், நல்ல காரியங்களை செய்யவும் வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படியாக, இப்பொழுதே காரியங்களை உரைத்து வியாதியஸ்தர்களை குணப்படுத்தும் அந்த பரிசுத்த ஆவியினால் நீர் என்னை அபிஷேகிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அதை அருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கிறோம். ஆமென். ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஏனெனில் முன்பு அவர் என்னை நேசித்தார். நான் ஒருபோதுமே அவரை விட்டுவிட மாட்டேன், நான் ஒருபோதுமே அவரை விட்டுவிட மாட்டேன், நான் ஒருபோதுமே அவரை விட்டுவிட மாட்டேன், ஏனெனில் முன்பு அவர் என்னை நேசித்தார். அதை நீங்கள் உண்மையாகவே கூறுகிறீர்களா? நீங்கள் தேய்த்து சுத்தமாக்கப்பட்டதை போன்று வார்த்தையானது உங்களை உணரவைக்கிறதா? என்னை அது அப்படிதான் உணரவைக்கிறது. சற்றே... வார்த்தையை கேட்பது என்னை அப்படியே சுத்தமாக்கி விடுகிறது, என்னை அப்படியே ஒரு புது நபராக்கி விடுகிறது. உங்களுக்கும் அது அப்படி செய்கிறதா? பில்லி? நீ ஜெப அட்டைகளை கொடுத்தாயா? N, 1 முதல் 100 வரை. எல்லாம் சரி. N-கள், 1 முதல் 100 வரை. அப்படியானால் அவர்களில் சிலரை நாம் அழைக்கலாம். [ஒலிநாடாவில் காலியிடம்] 61. "... நீ அதை கூறு; நீ அப்படி சொல்லாதே. " நான், "அதுதான் உன்னுடைய பிரச்சனை" என்றேன். "நான் அதை தேவனிடம் அறிக்கை செய்துவிட்டேன்." நான், "நீ தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய வில்லை; உன் கணவனுக்கு விரோதமாக பாவம் செய்தாய். சென்று, அவனோடு அதை சரி செய்துகொள்." என்றேன். இறுதியில் அவள் அதை செய்தபோது, அவள் குணமடைந்தாள். பின்பு அவள் திரும்ப வந்தாள். நான், "இப்பொழுது சாத்தான் கிளம்பவேண்டும்" என்றேன். பாருங்கள்? 'ஏனெனில் உங்களுடைய ஜீவியத்தில் பாவம் இருக்கும் வரை சாத்தானால் உங்களுக்கு எதிராக ஒரு குச்சியை நீட்டி வைத்திருக்க முடியும். அது நிச்சயமான உண்மை. அது நீங்கள் செய்த ஏதோவொன்றாய் இருக்கலாம், அல்லது நீங்கள் செய்திருக்க வேண்டிய ஏதோவொன்றாய் இருக்கலாம், இரண்டுமே ஒன்றுதான். பாருங்கள்? எனவே நாம் பார்க்கலாம், அங்கே எத்தனை பேரை நான் அழைத்தேன்? நான் அநேகரை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் எதிலிருந்து அழைத்தேன், 1 முதல் எத்தனை வரை? ஓ, 7 முதல் 15 வரை. 16,17,18,19,20. பெற்றுக்கொள்ளுங்கள் எனவே... இவர்களுக்காக நாம் ஜெபிக்கலாம் நாம்... இப்பொழுது, நம்மில் மற்றவர்கள் இப்பொழுது தலைகளை தாழ்த்தலாம். 62. பரலோக பிதாவே, உம்முடைய பரிசுத்தமான கரங்களானது இந்த கைக்குட்டைகளின் மீதும் இந்த சிறு கூறுகளின் (parcels) மீதும் வைக்கப்படுவதாக, இவைகள் யாருக்கெல்லாம் பதிலாக இங்கே இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் குணமடைய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அதை அருளும். அங்கே மருத்துவமனையில் படுத்திருக்கும் பரிதாபமான வயதான தாயிடமோ, அநேகமாக மோசமான வலிப்பு நோயாலோ அல்லது எதுவாக இருந்தாலும் அதினால் பாதிக்கப் பட்டிருக்கும், அந்த சிறு குழந்தையிடமோ இவைகள் சென்றடையும்போது, கர்த்தாவே, நீர் அதை அறிவீர். அந்த பொல்லாத ஆவிகள் அவர்களை விட்டு போகும்படியாக நான் ஜெபிக்கிறேன். அதை அருளும், அவர்கள் இயேசுவின் நாமத்தால் குணமடைவார்களாக. ஆமென். 63. எல்லாம் சரி, அவர்கள் அனைவரையும் நீங்கள் இன்னுமாக வரிசைப்படுத்தியிருக்கிறீர்களா? அது... எல்லாம் சரி, அப்படியானால் நாம் ஜெப வரிசையை ஆரம்பிக்கலாம், அவர்கள் வரிசையில் இல்லையென்றால். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அடுத்த சில நிமிடங்களுக்கு, உங்களால் முடிந்தால், அவ்விதமாக இப்போது நிற்கபோகிறார்கள், பின்பு வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்க போகிறோம். நான் செய்கிறேன், நீங்கள் உங்களுடைய ருக்கையிலே சில நிமிடங்களுக்கு இருந்து, விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்... ஆனபடியால் நீங்கள் வியாதியாயிருந்து, தேவன் உங்களுக்கு தேவையாயிருப்பாரானால், நீங்கள் இந்த வழியாக பார்த்து, ஜெபித்து, உங்களுடைய இருதயத்தில் கூறினால், இப்படியாக கூறினால், "கர்த்தராகிய தேவனே, எனக்கு நீர் தேவையாயிருக்கிறீர். ஒருவேளை நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். நீர்... சகோதரன் பிரன்ஹா முக்கு என்னை தெரியாது; நிச்சயமாக தெரியாது. நீர் தாமே அவரை திருப்பி, நான் இந்த விதமாக இருப்பதற்கு எதுதான் காரணம் அல்லது ஏதோவொன்றை அது - எனக்கு தெரிந்த உண்மையான ஏதோவொன்றை, அவர் என்னிடமாக கூறும்படி செய்தால், அப்பொழுது எனக்கிருக்கிற எல்லா சந்தேகமும் காணாமல் போய்விடும், இனிமேல் ஒருபோதும் நான் - நான் அவிசுவாசிக்கவே மாட்டேன்" என்று கூறினால். இப்பொழுது, அப்படி - அப்படி கூறுவது ஒரு துணிச்சலான காரியமாயிருக்கிறது. ஆனால், சகோதரனே, சகோதரியே, கிறிஸ்துவின் நாமத்தினால், நீங்கள் அப்படி செய்து, அவர் உங்களை அழைக்கிறாரா இல்லையா என்று பாருங்கள். புரிகிறதா? நீங்கள்... இப்பொழுது சில நேரங்களில் இதுபோன்ற எல்லா காரிய ங்களும் கலவையாக நடந்துகொண்டிருக்க (conglomeration), என்னால் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அது என்னவென்பதை நான் விளக்கி காண்பித்திருக்கிறேன். 64. இப்பொழுது, இங்கே ஒரு - ஒரு சீமாட்டி இருக்கிறாள்; அவள் எனக்கு அந்நியராயிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். சீமாட்டியே, நீங்கள் அந்நியர் தானே? நாம் ஒருவரை ஒருவர் அறியோம், ஜீவியத்தில், ஒருபோதும் சந்தித்ததில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால்... அம்மையாரே? நீங்கள் என்னை ஒரு முறை சந்தித்து இருக்கிறீர்கள். சரியாக எங்கே? வென்டலியா, இல்லினோயிஸ்-ல், நீங்கள் என்னை சந்தித்தீர்கள். எல்லாம் சரி. ஆனால் நிச்சயமாக அது - அது பத்து வருடங்களுக்கு முன்பு, நான் முதன்முதலில் துவங்கினபோது நடந்தது. அந்த கூடாரத்தில் இருந்த அந்த பெரிய கூட்டத்தில் நீங்களும் இருந்தீர்கள். ஓ, என்னே. அது ஒரு பெரிய கூட்டமாயிருந்தது, ஆம் தானே? கண்களே இல்லாத அந்த குருடான பையன் குணமான அந்த இரவு நீங்கள் அங்கே இருந்தீர்களா? கூட்டத்தின் முடிவின் போது, அவன் அங்கே வந்து என்னுடைய டையை (tie) பிடித்து "அது என்ன நிறம்?" என்று கேட்டான், அது நடந்து சுமார் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அங்கே, வென்டலியாவில், ஒரு செருப்பு தைப்பவரும் இருந்தார், அந்தக்கூட்டத்தில் குருடான கண்கள் சுகமாக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். ஒரு இரவில் கர்த்தர் பெருக்கெடுத்து வந்து, அந்த இடத்தை வெள்ளத்தால் மூழ்கடித்தார், அப்பொழுது அவர்கள் கட்டில்களையும் தூக்குப்படுக்கைகளையும் எடுத்தார்கள், மேலும் செய்தித்தாள்கள் அதை பற்றி குறிப்பிட்டன. அது... சிகாகோ செய்தித்தாள் என்னை சகோதரன் ஹென்றி பிரன்ஹாம் என்று குறிப்பிட்டார்கள். நான் ஒருபோதும் அதை, சிகாகோவில் இருக்கும் அந்த "ட்ரிபியுனை" (Tribune - செய்தித்தாளின் பெயர்] மறக்கவே மாட்டேன். கூட்டத்தில் இருந்தது இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு இருந்தது, அப்போதிலிருந்து நீண்ட காலமாகி விட்டது. ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்றுவிட்டது. ஆனால் தேவன் இன்னும் மாறாதவராகவே இருக்கிறார். 65. இப்பொழுது, இந்த சீமாட்டி... அவளுக்கு என்னை தெரியாது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் என்னை அவள் பார்த்ததாக அவள் கூறினால், ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு. பின்பு நீங்கள் இங்கே ஏதேனும் ஒன்றிற்காக இருக்கிறீர்கள் என்றால், நான் - நான் - நான் அதை அறியேன். அதை அறிந்துகொள்ள எனக்கு எந்த வழியுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியும். தேவன் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். அது உண்மைதானே? சரி இப்பொழுது, கிணற்றண்டையில் இயேசு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றால், இப்பொழுது நாம் பேசுவதை போன்று நின்று பேசிக்கொண்டிருந்தார், பின்பு இறுதியாக அவளுடைய பிரச்சனை என்னவென்று கண்டறிந்து, அவளிடம் கூறினார்... அது அந்த மேசியாதான் என்று அவள் விசுவாசித்தாள். அவள் விசுவாசித்தாள். அவள், "மேசியா வரும்போது இதை செய்வார் என்பதை சமாரியர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றாள். ஆனால் அவர் யார் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, அவர்தான் அந்த மேசியா என்பதை அவர் அவளிடம் கூறினார். அது அற்புதமானதல்லவா? எவ்வளவு அதிசயம். நல்லது, இன்றிரவும் இன்னமுமாக அவர் மேசியாவாக இருக்கிறார். 66. இப்பொழுது, இந்த ஜனக்கூட்டத்திடம் கூறுகிறேன், மோசே, அவன் சென்று தன்னுடைய கையை குஷ்டரோகமாய் மாற்றி, அதை சுகமாக்கி, தேவன் அவனை அனுப்பினார் என்று ஜனங்களிடம் காண்பித்தபோது, முழு இஸ்ரவேலின் கேள்வியையும் அது தீர்த்து வைத்தது. அவர்கள் முன்னேறி சென்று, அவனை பின்தொடர்ந்தார்கள். அது சரிதானே? ஆனால் தேவன் இன்றிரவு... இந்தப் பெண்ணை நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், பரவாயில்லை. இன்றிரவு இந்தப் பெண்ணை பற்றி தேவனுக்கு தெரியும். எனக்கு அவளைப் பற்றி ஒன்றுமே தெரியாது, அவளைப் பற்றி அறிந்துகொள்ளும்படியாக என்னுடைய ஜீவியத்தில் அவளைப் பார்த்ததே இல்லை. 'நிச்சயமாக, நான் ஜனங்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறேன் அவளால் என்னை காண முடிகிறது, ஆனால் எனக்கு அவளை தெரியாது. இங்கே அவள் இருக்கிறாள். அநேகமாக இங்கே உங்களில் யாருக்கேனும் அவள் தோழியாக இருப்பாள், அதைப் பற்றி உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது, இந்த பெண் எதற்காக இங்கே இருக்கிறாள் என்று அல்லது அவளுடைய பிரச்சனை என்னவென்று தேவனால் என்னிடம் கூற முடிந்தால்... அது ஒருவேளை வீட்டு பிரச்சனையாயிருக்கலாம்; அது ஒருவேளை வியாதியா யிருக்கலாம்; அது ஒருவேளை வேறு யாராவது ஒருவருக்காக இருக்கலாம். நான் - நான் அறியேன். என்னால் உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தினால், அது ஒருவிதமான ஆவிக்குரிய ஒன்றுதான், கண்ணுக்கு தெரியாத வல்லமைதான் அதை செய்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அது உண்மைதானே? சரி - சரி இப்பொழுது, இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, அவர் சரியாக அதைதான் செய்தார் என்றும், முதலாவதாக பிதா அவருக்கு காண்பிக்காமல் அவர் எதையுமே செய்யவில்லை என்றும் வேதாகமம் கூறுகிறது. அது வேதவாக்கியம் தானே? அவர், "நான் செய்கிற இந்த கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" என்றார். இப்பொழுது, இன்றிரவு தன்னுடைய சொந்த இரத்தத்தால் நம்மை சுத்திகரித்து நம்முடைய சரீரங்களில் அவருடைய ஜீவியத்தை அவர் மறுபடியும் உற்பத்தி செய்தால், நாம் அபாத்திரர்களா யிருக்கிறோம், ஆனால் அவருடைய இரத்தத்தின் மூலமாக நம்மை பாத்திரராக்குகிறார், பின்பு இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் சரியாக இங்கே உங்களுடன் இருக்கிறார் என்றும் ஒவ்வொருவரையும் அது திருப்திபடுத்த வேண் டும். அது சரிதானே? இப்பொழுது, அவர்தாமே அதை அருளுவாராக. அவர் செய்யாமலும் போகலாம். என்னால் அதை சொல்ல முடியாது. அவர் செய்யவும் செய்யலாம். ஆனால் அவர்தாமே அதை அருளுவாராக. 67. இப்பொழுது நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். நான் பிரசங்கித்துக்கொண்டே காத்திருக்கிறேன், நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக, பரிசுத்த ஆவிக்காக, சுகமளித்தலின் கூட்டத்திற்கான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக நான் காத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஒரு நிமிடம் நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்... நான்... தேவன் இப்பொழுது அதை வெளிப்படுத்தினால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அது என்னவாக இருந்தா லும், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? இப்பொழுது, ஜனக்கூட்டத்திடம் பேசுகிறேன், ஒரு இளமையான பெண் இங்கே நிற்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்னை விட மிகவும் இளமையானவள், அவளும் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள் மேலும் - மேலும் அவளை பார்ப்பதற்கு ஒரு கிறிஸ்தவள் போன்று எனக்கு தோன்றுகிறது. அவள்... அதை மட்டும் சொல்ல முடியவில்லை... நான் அவளை பார்த்து, அவள் ஒரு கிறிஸ்தவள் போன்று இருக்கிறாள் என்று நினைக்கிறேன். மேலும்... ஆனால் எல்லாவற்றையும் தேவன் சரியாக அறிந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது, தேவனால் கூடுமானால், அல்லது தேவனுக்கு சித்தமானால், "அவரால் கூடுமானால்" என்று கூறவில்லை, உங்களுடைய பிரச்சனை என்னவென்று அவர் எனக்கு வெளிப்படுத்தினால், பின்பு அது முழு கேள்விக்கும் பதிலளித்து தீர்த்து வைக்கிறது. அது எல்லாம் முடிந்து விட்டது. அது சரி. எலியாவின் தேவன் இன்னும் ஜீவிக்கிறார் என்பதை அறிந்துகொள்வது அற்புதமாயிருக்கிறதல்லவா? பாருங்கள்? அவர் செய்கிறார். அது சரி. 68. எல்லாம் சரி நீங்கள் ஒரு கிறிஸ்தவர், ஏனெனில் கர்த்தருடைய தூதனானவர் வந்தது முதற்கொண்டு அந்த உண்மையான வரவேற்பு வர ஆரம்பிக்கிறது, இப்பொழுது ஏதோவொன்று சம்பவித்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். இப்பொழுது, ஒரு கிறிஸ்தவராக, ஒரு கிறிஸ்தவ சகோதரியாகவும், ஒரு கிறிஸ்தவ சகோதரனாகவும்... இப்பொழுது, ஒரு வினாடிக்கு முன்பிலிருந்து, ஏதோவொன்று நடந்தது, நடந்தது தானே? உங்களால் ஏதோவொன்றை உணர முடிகிறது. அது சரியென்றால், உங்களுடைய கையை உயர்த்துங்கள். அது சரி. பாருங்கள்? ஏனெனில் உங்களுக்கும் எனக்கும் இடையேயிருந்து அந்த அபிஷேகம் தொடங்க ஆரம்பிக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு வெளிச்சம் நின்று கொண்டிருக்கிறது. அதினுடைய புகைப்படத்தை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அதை ஒருபோதும் பார்த்த தில்லையா. அவர்கள் அதை இங்கே வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அது சரியாக இப்பொழுது உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கிறது. உங்களுடைய பிரச்சனை உங்கள் காலில் இருக்கிறது. அது உண்மைதானே, ஆம் தானே? மேலும் அது எலும்பில் இருக்கிறது, அது ஒரு கட்டி, அது புற்றுநோயாயிருக்கிறது. நீங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கிறீர்கள் மேலும் ஒரு கருத்த நிழல் உங்களின் அருகே தொங்கிக்கொண்டிருக்கிறது அது மரணம். அது உண்மை. நீங்கள் வென்டேலி யாவில் இருந்து அல்ல, ஆனால் இல்லினாய்ஸில் இருந்து வந்திருக்கிறீர்கள். ஒரு குன்றுபோன்ற இடத்திலிருந்து, டோவர் ஹில், அதுபோன்ற ஏதோவொன்றிலிருந்து, இல்லினாய்ஸில் இருந்து. (அந்த சகோதரி, "டவர் ஹில்" என்று கூறுகிறார்] ஆம். அது சரி. உங்களுடைய பெயர் வார். லிடியா M. வார். அது சரிதானே? இப்பொழுது என்னை நீங்கள் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இங்கே வாருங்கள். எங்களுடைய பரலோக பிதாவே, வேதாகமத்தில் நீர் இங்கே பூமியில் இருந்த போது நீர் மனிதர்களின் மத்தியில் நடந்து, பரலோகத்திலிருக்கும் பிதாவிடம் உம்மை ஒப்புக் கொடுத்தீர், அவரும் உம்மில் இருந்து, செய்யவேண்டிய காரியங்களையும் பேச வேண்டிய காரியங்களையும் உமக்கு காண்பித்தார். முதலாவதாக அவர் உமக்கு காண்பிக்காமல் நீர் எதையுமே செய்யவில்லை என்று நீர் கூறினீர். பின்பு பிதா உம்மை அனுப்பியதை போல, நீரும் எங்களை அனுப்பி, எங்களோடு வந்து, எங்களுடன் கூட இருப்பீர் என்றும், நீர் செய்த கிரியைகள் தொடரும் என்றும், நீர் மீண்டும் வரும் வரை, உம்முடைய சபையின் மூலமாக உம்முடைய ஊழியம் தொடரும் என்றும் நீர் கூறினீர். மகிமையில் நீர் இரண்டாவது முறையாக வருவதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம். சிகாகோவில் இருக்கும் ஜனங்களின் மத்தியில் இன்றிரவு, அந்த அத்தாட்சி (evidence), ஜீவிக்கிற தேவனுடைய அந்த தொடக்கத்தின் அத்தாட்சி (initial evidence) இன்றிரவு இங்கே மேடையின் மீது இருக்கிறது. உலகத்தின் முடிவு பரியந்தம் செய்யப்படும் என்று அவர் கூறிய அந்த அடையாளங்கள் இப்பொழுது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. நம்முடைய சகோதரியின் மீது அவளுடைய ஜீவனை எடுக்கும்படியாக இருக்கும் இந்த பிசாசானவன், கிறிஸ்துவின் நாமத்தினால் சபிக்கப்படுவானாக, அவளை விட்டு வெளியே வா, அவள் ஜீவிக்கட்டும். ஆமென். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, மகிழ்ச்சியாகவும் களிகூர்ந்தபடியே செல்லுங்கள். ஆமென். 69. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொ ழுது, பாருங்கள், நான் சுமார் இரண்டு மணி நேரமாக பிரசங்கித்து கொண்டிருக்கிறேன். எல்லாம் சரி, அந்த ஒரு தரிசனம், வியர்வையின் துளிகளை பாருங்கள். புரிகிறதா? அது உங்களை பலவீனப் படுத்திவிடுகிறது. ஏதோ வொன்று உங்களை விட்டு சென்று விடுகிறது. அந்த காரியம் அந்த சீமாட்டியை விட்டு சென்று விட்டது. பாருங்கள்? அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டாள், "என்னைவிட்டு ஏதோவொன்று சென்றது" என்றார்.. அதிலிருந்து அல்ல... எல்லாம் சரி, அந்த மனிதனை அழைத்துவாருங்கள். இப்பொழுது, நீங்கள் விரும்பினால் தயவு செய்து பயபக்தியாய் இருங்கள். பொல்லாத ஆவிகள் ஒருவரை விட்டு வெளியே வந்து, மற்றவர்களுக்குள் சென்று விடுகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள் அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? எனவே பயபக்தியாய் இருங்கள். 70. ஐயா, தேவன் தான் உங்களுக்கு உதவி செய்யவேண்டும், 'ஏனெனில் அது புற்றுநோய் என்பதையும், அந்த பிரச்சனை குடல்களில் இருக்கிறது என்பதையும் நீங்கள் - நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உட்காரும்போது, மெத்தையை (cushion) பயன்படுத்தி உட்கார வேண்டியதாயிருக்கிறது. ஆனால் தேவனால் மட்டும்தான் உங்களுக்கு உதவி செய்யமுடியும். நான் அவரிடம் கேட்டுக்கொண்டால் அவர் உங்களுக்கும் இன்றிரவு இங்கிருக்கும் இந்த எல்லா ஜனங்களின் சேனையாகிய, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் உதவி செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அவரை துதித்து எல்லா மகிமையையும் அவருக்கே கொடுப்பீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் அவரை நேசித்து, அவரை சேவிப்பீர்களா, நீங்கள் அப்படி செய்வீர்களா? நீங்கள் செய்வீர்கள். கர்த்தர் தாமே உங்களுக்கு ஆசீர்வாதங்களை அருளுவாராக. பரலோக பிதாவே, இந்த மனிதனின் முகத்தை நோக்கி பார்க்கும்போது, சமாரியாவின் வாசலில், அது சீரியர்களால் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, உட்கார்ந்து இருந்த அந்த குஷ்டரோகிகளை போல இவரும் இன்றிரவு உட்கார்ந்து இருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறேன். அவர்கள் குஷ்டரோகிகளா யிருந்தார்கள், அவர்கள், "நாம் மரிக்கும் வரை நாம் ஏன் இங்கே உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் இங்கேயே உட்கார்ந்து இருந்தால், நாம் நிச்சயமாக மரித்து விடுவோம். நாம் நகரத்திற்குள் சென்றாலும், நமக்கென்று அங்கே ஒன்றுமே செய்யப்படாது" என்றார்கள். அவர்கள் சத்துருக்களின் சேனைக்குள் போகும்படியாக ஒரு துணிச்சலான முயற்சியை எடுத்தார்கள். அப்பொழுது நீர் அவர்களுடைய விசுவாசத்திற்கு பலனளித்து, அவர்களுடைய ஜீவியங்களை இரட்சித்தீர். தேவனே, இந்த மனிதனுக்கு, மருத்துவர்களால் இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது, உம்மிடம் வருவதை தவிர இவருக்கு வேறு வழியே இல்லை. நீர் சத்துருவல்ல; இன்றிரவு, இவர் வருவாரா என்று எதிர்பார்த்துகொண்டு இருக்கும் ஒரு நேசிக்கிற பிதாவாய் நீர் இருக்கிறீர். இப்பொழுது, இவர் வந்திருக்கிறார், உம்முடைய ஊழியக்காரானாக இவர் மேல் என் கைகளை நான் வைத்து, இந்த மனிதனை நீர் சுகப்படுத்த வேண்டுமென்றும், இவர் ஜீவிக்கும்படியாக செய்யும் என்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். மேலும் அநேகமாக சில நாட்களில் சிகாகோவிற்கு திரும்பி வரும்போது இவர் வந்து தன்னுடைய சுகமளித்தலுக்காக உமக்கு துதியையும் மகிமையையும் செலுத்துவாராக. ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, போகலாம், ஒன்றையும் சந்தேகப்படாதீர்கள். உங்களுக்கு - உங்களுக்கு இதுவரை எப்போதுமே எதுவுமே ஆகாததைப் போல செல்லுங்கள். இப்பொழுது, அப்படியே பயபக்தியாயிருங்கள், உங்களால் முடிந்த அளவுக்கு பயபக்தியாயிருங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். கர்த்தராகிய இயேசு ஒருவரால் மாத்திரமே வியாதியஸ்தர்களை சுகப்படுத்த முடியும்."உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே." அது உண்மைதானே? அது தான் சத்தியம் என்று வேதாகமம் கூறுகிறது. வேதாகமம் அவ்வாறு கூறினால் அது தான் சத்தியம் என்பதை நாம் அறிவோம். 71. இப்பொழுது, இங்கே ஒரு சீமாட்டி உட்கார்ந்து இருக்கிறாள், மாறாக, எனக்கு முன்பாக நின்றிருக்கிறாள், எனக்கு அந்நியராயிருக்கிறாள். அது... சீமாட்டியே, அது உண்மை, ஆம்தானே? எனக்கு உங்களை தெரியாது. ஆனால் இயேசுவுக்கு உங்களை தெரியும். இப்பொழுது, உங்களுக்கு உதவி செய்ய எனக்கு வழியிருந்தும், நான் அப்படி செய்யாமல் போனால், நான் ஒரு மோசமான மனிதனாயிருப்பேன் அல்லவா? நல்லது, அங்கே - அங்கே அந்த - அந்த நியாயத்தீர்ப்பின் மேடையில் (judgment bar) தேவன் என்னிடம் என்ன கூறுவார்? அவர், "போய் அந்த பெண்ணிற்கு உதவி செய் என்று நான் - நான் உன்னிடம் கூறினேன், நீயோ செய்யவில்லை." என்று சொன்னால். அதற்கு நான் பதில் கூற வேண்டும். ஆனால் நான்... உங்களுக்கு உதவி செய்யும்படியாக எனக்கு - எனக்கு எந்த வழியுமே இல்லை, தேவனிடத்தில் உங்களுடைய விசுவாசத்தை பெருக செய்யும் ஏதோவொன்று மாத்திரமே. அது சரிதானே? மேலும் இயேசு உங்களுக்காக மரித்தபோதே உங்களுக்கான சுகமளித்தல் நிறைவேறிவிட்டது. அதை பெற்றுக்கொள்ள உங்களுக்கு விசுவாசம் இருந்தால் போதும். அது சரிதானே? இப்பொழுது, நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்கள். ஜனக்கூட்டமும் அதையே செய்வீர்களா? எல்லாம் சரி, சகோதரியே, இந்த பக்கமாக ஒரு நிமிடம் பாருங்கள். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் பார்க்க கூடிய முதல் காரியம் எனக்கு முன்பாக இரத்தம் சொட்டுகிறது. அதில் சர்க்கரை இருக்கிறது, அது சர்க்கரை நோயாயிருக்கிறது. உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை நோயிருக்கிறது (sugar diabetes). அது சரி. இன்சுலின் என்பது ஒரு அற்புதமான காரியம்தான், ஆனால் இயேசுவின் இரத்தமோ மேம்பட்டதாயிருக்கிறது. அது உண்மையல்லவா? நல்லது, நீங்கள் ஏதோவொன்றை குறித்து மன உளைச்ச லாகவும் கூட இருக்கிறீர்கள், நீங்கள் ஜெபிக்க கூடிய ஏதோ வொன்று உங்களுடைய இருதயத்தில் இருக்கிறது. அது உங்களுடைய கணவனுக்காக. கூறுங்கள், அவர் ஒரு மருத்துவமனையில் நோயாளியாயிருக்கிறார் (அது சரி.). அரசு மருத்துவமனையில். நீங்கள் விரும்புகிறீர்கள்... நீங்கள் ஜெபிக்கிறீர்கள் அதைப்பற்றி... அது அவருடைய ஆத்துமா. அது சரி. அவருடைய ஆத்துமா இரட்சிக்கப் பட்டுவிட்டது என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லை, எனவே அவருக்காக ஜெபிக்கும்படியாக நீங்கள் விரும்பு கிறீர்கள். நான் உங்களுடைய மனதை படிக்கவில்லை, ஆனால் அது உண்மை, ஆம் தானே? இப்பொழுது, உங்களுடைய மனதில் ஒரு சந்தேகத்தின் நிழல் கூட இப்போது இல்லை, இருக்கிறதா? பரலோக பிதாவே, தேவனுடைய குமாரன் இயேசுவின் நாமத்தினால், இதை நீர் அருளும்படியாக நான் ஜெபிக்கிறேன், அவளுக்கு அவளுக்கான விடுதலையையும் அவளுடைய கணவனையும் தாரும், கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். மருத்துவமனையின் நோயாளி பதிவேட்டை பார்த்துக் கொண்டிருக்கிறேன், திருமதி. ஹில் அப்படியானால் நீங்கள் முன்னேறி செல்லலாம். ஆமென். அது உங்களை பெலப்படுத்தியது, அது பெலப்படுத்தியது தானே? அந்த பெயரை நான் அந்த நோயாளிபதிவேட்டில்பார்த்தேன்; அந்த காரணத்தால் தான் நான் அதை கூறினேன். உங்களுக்கு புரிகிறதா? 72. எல்லாம் சரி, நீங்கள் வருவீர்களா? தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள், ஆனால் விசுவாசியுங்கள. கர்த்தராகிய இயேசு ஜீவித்து ஆளுகை செய்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஒரு ஊழியக்காரரின் மனைவியா? அது உங்களுடைய நுழைவுச்சீட்டில் இல்லை. ஆனால் நான் நினைத்தேன் நான் ஏதோவொரு மேடையையும், யாரோ ஒருவர் பிரசங்கிப்பதையோ அல்லது வேறு எதையோ நான் கண்டேன். அது உங்களுடைய கணவன், 'ஏனெனில் சீமாட்டியாக இருக்கும் நீங்கள், அவர் செய்ததை போல வேறு யாரோ ஒருவர் தங்களுடைய கையை உங்களை சுற்றி போட்டுகொள்வதை - அனுமதிக்கமாட்டீர்கள் (அது சரி) என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் நீங்கள் ஒரு அசலான சீமாட்டியாயிருக்கிறீர்கள். நான் உங்களை பாராட்டுகிறேன். கர்த்தராகிய இயேசுவால் உங்களை சுகப்படுத்த முடியும், உங்களை நன்றாக்க முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வேறு யாரோ ஒருவருக்காகவும் ஜெபிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், நீங்கள் விரும்பவில்லையா? பிள்ளைக்காக, அதற்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது. அதற்கு இருக்கிறதுதானே, அலர்ஜி காய்ச்சலை (hay fever) போன்று? அது உண்மை, ஒரு சிறு பெண், சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வயதிருக்கும் என்று நான் கூறுவேன். அது உண்மைதானே, ஆம் தானே? அது உங்களுடைய மகள். நீங்கள் இல்லினாய்ஸில் இருந்து வரவில்லை; நீங்கள் ஒரு - ஒரு - ஒரு சமவெளி போன்ற, நீண்ட சமவெளிகளில் இருக்கும் மாகாணத்திலிருந்து, பார்கர் என்று அழைக்கப்படுகிற இடத்திலிருந்து, கன்சாஸிலிலிருந்து, அங்கிருந்து தான் நீங்கள் வருகிறீர்கள். அது சரி. என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்த உங்களுடைய அந்த கைக்குட்டையை உங்களுடைய பிள்ளையின் மீது வையுங்கள், எல்லாம் சரியாகி விடும். இங்கே வாருங்கள். பரலோக பிதாவே, இயேசுவின் நிமித்தமாக, நீர் இவளை சுகமாக்கி நன்றாக்க வேண்டுமென்று, இந்த பெண்ணை நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். இப்பொழுது, திருமதி. மௌக், நீங்கள் கன்சாஸ்க்கு வீட்டிற்கு போய், சுகமாயிருங்கள். 73. ஓ, இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந் தார். அவர் நிஜமானவர் மேலும் அவர் அற்புதமானவர். சகோதரியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஒரு சில நிமிடங் களுக்கு முன்பு நீங்கள் சரியாக இங்கே உட்கார்ந்து இருந் தீர்கள். அது சரி. மேலே இருந்த என்னை நீங்கள் பார்த்து கொண்டிருக்கையில், நான் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று நீங்கள் ஏதோவொன்றை குறித்து முழுவதுமாக சிலிர்ப்படைந்ததை போன்று இருந்தது, ஆம் தானே? அப்பொழுது அது உங்கள் மேல் இருந்த தரிசனம்; என்பதை என்னால் கூற முடியும். அந்த சிறு கட்டி (cyst) உங்களை பாதிக்காது; உங்களுக்கு அது தெரியும், தெரியும் தானே? அது உங்களை பாதிக்காது. உங்களுடைய இருதயத்தில் நீங்கள் கொண்டிருக்கிறதான கவலைகள், அதுவும் உங்களை பாதிக்காது; ஆனால் தேவன் சுகமாக்குகிறார் என்பதை நீங்கள் கட்டாயமாக நினைவுக்கூற வேண்டும். உங்களுடைய தந்தை முழுவதுமாக சரியாகி விடுவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவனால் அந்த புற்று நோயை குணப்படுத்த முடியும், நீங்கள் அதை விசுவாசித்தால். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? கூறுங்கள், உங்களுடைய தாயாருக்கும் கூட ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. அது உண்மைதானே? இப் பொழுது, நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு எதற்காக மரித்தாரோ அந்த ஒவ்வொன்றும் இன்றிரவு உங்களுக்கு சொந்தமாயிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? பரலோக பிதாவே, இந்த அன்பான பெண்ணை அவள் இங்கே தேவையோடு நிற்கிற வேளையிலே நான் ஆசீர் வதிக்கிறேன், நீர் இவளை சுகமாக்க வேண்டுமென்றும், இவள் கேட்டுக்கொள்ளும் இவளுடைய அன்பானவர்களையும் சுகமாக்க வேண்டுமென்றும், நான் கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். ஆமென். இப்பொழுது, நீங்கள் அவைகளை எடுத்துக்கொண்டு சென்று அவைகளை இருவர் மேலும் வையுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் கூறலாம். [சபையார் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுகிறார்கள்.] 74. ஓ, வயிற்று பிரச்சனை மிகவும் மோசமானது, உங்க ளுக்கு விளைவிக்கிறது, உங்களுக்கு தெரியும்... ஆனால் தேவன் அதை சுகமாக்குகிறராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சென்று சாப்பிட விரும்புகிறீர்களா? தேவன் உங்களை நலமாக்குவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் நினைக்கிறீர்களா? எல்லாம் சரி, தேவனை துதித்துக்கொண்டே தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டேயிருங்கள், சென்று கொண்டே இருங்கள், கர்த்தருடைய சித்தத்தை செய்யுங்கள். ஆமென். முதுகு பிரச்சனையும் கூட இருக்கிறது, சகோதரியே, ஆனால் தேவனால் அதை சரியாக்க முடியும், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நிச்சயமாக. அப்படியானால் தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்; அவர் அதை செய்து விட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். இப்பொழுது, நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன், அந்த சீமாட்டிக்கு வயிற்று பிரச்சனை என்று நான் சொன்னபோது, ஒரு விளங்காத உணர்வு உங்கள் மீது வீசி சென்றது. இப்பொழுது, நீங்களும் சென்று சாப்பிடுங்கள்; அந்த வயிற்று புண் உங்களை விட்டு சென்றுவிட்டது. ஆமென். 75. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை; எல்லா துதியும், வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லா அதிகாரங்க ளும் அவருடைய கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை குறித்து ஜனக்கூட்டத்தில் இருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவன் நிஜமாயிருக்கிறார், அவர் நிஜமாயிருக்கிறார் அல்லவா? அவரால் குணமாக்க முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அவரால் சுகமாக்க முடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்க வில்லையா? அவர் செய்ய வேண்டுமென்று மிகவும் வாஞ்சிக்கும் எதை வேண்டுமானாலும் அவரால் செய்ய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஆமென். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். என்னுடைய இருதயத்தில் ஏதோவொன்று பொங்கி பொங்கி வழிகிறது. நான் கர்த்தராகிய இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன். நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், சரியாக இப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கான அட்டைகள் இல்லாமல், அங்கே எத்தனை பேர் சிறிது நேரத்திற்கு முன்பு உங்களுடைய கையை உயர்த்தினீர்கள், நீங்கள் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவன் அப்படியே - அப்படியே பரிசுத்த ஆவியை கீழே அனுப்பவேண்டு மென்று நீங்கள் ஜெபிக்கும்படி நான் விரும்புகிறேன் மேலும்... 76. நான் உங்களிடம் எதுவுமே சொல்லாமல், உங்களுக்காக ஜெபம் மட்டும் செய்து, நீங்கள்சுகமாக போகிறீர்கள் என்று உங்களிடம் கூறினால், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? அப்படியானால் முன்னேறி செல்லுங்கள்; கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த தொண்டையை பற்றி என்ன? தேவன் அதை குணப்படுத்துவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய மகிமைக்காக நீங்கள் பாட விரும்புகிறீர்களா. நீங்கள் ஒரு பாடகராயிருந்தீர்கள், நீங்கள் இருந்தீர்கள் தானே? தேவனுடைய மகிமைக்காக நீங்கள் பாட விரும்புகிறீர்கள். எல்லாம் சரி, நீங்கள் பாட போகிறீர்கள். எல்லாம் சரி. தேவனில் விசுவாசமாய் மாத்திரம் இருங்கள். அங்கே உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளைஞன், நான் அதை கூறியபோது அவன் முழுவதுமாக சிலிர்த்துப் போனான். அவனுடைய முகத்தில் அவனுக்கு ஏதோவொரு கோளாறு இருக்கிறது. அது சரி, ஆம் தானே, இளைஞனே? இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? அந்த - அந்த சுரப்பி பிரச்சனையையும் கூட, தேவனால் அதை சரி செய்ய முடியும். நீ அதை விசுவாசிக்கிறாயா? நான் அதை கூறியதற்கான காரணம் என்னவென்றால், நீ அதை வேறு எதுவாகவோ புரிந்துகொள்வாயோ என்பதனால் தான் (உனக்கு புரிகிறதா?) அந்த... ?... ஆமென். எல்லாம் சரி. தேவன் அதை செய்வார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? ஆமென். 77. அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய தலையை நீங்கள் அசைத்தீர்கள், அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த கறுப்பின சீமாட்டி, அங்கே முன் வரிசையில் உட்கார்ந்து, என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள். இந்த பக்கமாக பார்த்து தலையை அசைத்தாள், "அது சரி," என்று அவள் கூறினாள். ஹுஹ்_ஹுஹ். உங்க ளுடைய தலையில் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறது தானே? அது சரி. என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அவருடைய ஊ - அவருடைய ஊழியக்காரன் என்று நான் சொல்ல வருவதை? நீங்கள் தீர்க்கதரிசி என்று சொல்லும்போது அது ஜனங்களை இடறலடைய செய்கிறது. பாருங்கள்? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேறு ஏதோவொன்று இருக்கிறது என்னால் அதை சரியாக பார்க்க முடியவில்லை. வேறு ஏதோவொன்று நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது என்னவென்பதை என்னால் கூற முடியவில்லை. நான் இரண்டு நபர்களை பார்க்கிறேன். அது வேறு யாரோ ஒருவர். அது இன்னொரு சீமாட்டி ஆம், நீங்கள் இன்னொரு சீமாட்டிக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய தோழி; அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது, அவளுக்கு இருக்கிறது தானே? அது சரி. ஆமென். அல்லேலூயா. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப் படுவதாக. அவர் அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கிறார் (everlasting to everlasting). அவர் தேவனாயிருக்கிறார். 78. அந்த மனிதனுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் சிறிய சீமாட்டி, அவள் மிகவும் விடாமுயற்சியுடன் அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், ஒருவிதத்தில் உடல் பருமனாயிருக்கிறாள், அவளுக்கு வீங்கிய சுரப்பிகள் இருக்கின்றன, அங்கே பின்னாடி உட்கார்ந்து இருக்கிறாள். ஆம், அம்மையாரே. நீங்கள் சுகமடையும் படி மிகமிக விடாமுயற்சியுடன் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் ஜெபிக்கவில்லையா? உங்களுக்கு பின்பாக இருக்கும் மனிதன் அவனுக்கு விருப்பமிருந்தால் உங்கள் மீது அவனுடைய கையை வைக்கும்படி நான் கேட்கிறேன். சகோதரனே, எனக்காக நீ அதை செய்வாயா? எல்லாம் சரி. பரலோக பிதாவே, அந்த பெண்ணை ஆசீர்வதியும். அவள் தடைகளை வெல்ல முயற்சித்து கொண்டிருக் கிறாள். அந்த ஒளியின் மேகம் (Mist of that light) அவள் மீது தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன், அவளுடைய சுகமளித்தலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீர் அருளும் படியாக நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேனே, நீ இங்கே நின்றிருந்தபோதே நீ நீ சுகமாகிவிட்டாய், எனவே முன்னேறி செல், தேவனுக்கு துதியையும் மகிமையையும் செலுத்து. ஆமென். நாம், "கர்த்தருக்கு நன்றி" என்று கூறலாம். [சபையார், "கர்த்தருக்கு நன்றி" என்று கூறுகிறார்கள்] ஓ, அவர் அற்புதமானவர். 79. அங்கே பின்னாடி உட்கார்ந்திருக்கிற சீமாட்டியே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு வயிற்று பிரச்சனை இருக்கிறது, இல்லையா? உங்களுக்கு ஒரு சிறு பெண்ணும் இருக்கிறாள் அவளுக்கும் கூட வயிற்று பிரச்சனை இருக்கிறது. ஓ, அது உங்களை ஆச்சரியப்பட வைத்தது, இல்லையா? ஆனால் அப்பொழுதே நீங்கள் சுகமாகி விட்டீர்கள். ஆமென். நீங்கள் ஒருவிதத்தில் எளிதில் பதட்டமடையக்கூடிய ஒரு குடும்பமாயிருக்கிறீர் கள். வயிற்றில் இருக்கும் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனையே அதற்கு காரணம். நீங்கள் பதட்டமடைவதை அந்த சிறு பெண் உங்களிடமிருந்து சுதந்தரித்து கொண்டாள். அது சரி. உணவு செரிமானம் ஆகாமல் எதுகளித்து ஏப்பம் வருவதும் மற்றவைகளும். அது சரி. அது கர்த்தர் உரைக்கிறதாவதாயிருக்கிறது... ?... அங்கே உங்களுக்கு பக்கத்தில் ஒரு சீமாட்டி உட்கார்ந்து இருக்கிறாள்; ஒருவிதத்தில் அவளுக்கு தலைசுற்றல் போன்றது வருகிறது. அவள்... சீமாட்டியே, அது சரிதானே? உங்களுடைய கையை உயர்த்துங்கள். அது சரி. நீங்கள் சுகமடைய விரும்புகிறீர்களா? நல்லது, சற்று முன்னர் வயிற்று பிரச்சனையிலிருந்து குணமான சீமாட்டியே, சகோதரியே, உங்களுடைய கையை அவள் மீது வையுங்கள். பிதாவே, இதை நீர் உறுதிப்படுத்த வேண்டுமென்று கிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையின் மூலமாக அந்த ஆவிகளை அந்த ஜனங்களிலிருந்து இயேசுவின் நாமத்தில் துரத்து கிறேன். ஆமென். 80. அவர் அற்புதமானவர். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு உங்களுக்கு இன்னும் அதிகமான அத்தாட்சி வேண்டுமா? இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இன்னும் உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது? அவிசுவாசிப்பது பாவமாகும். பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். அது சரிதானே? ஏதோவொன்றை, அதை செய்யும்படிக்கான பலம் எனக்கு மீதி இருக்கும்போதே, நான் அதை சரியாக இப்பொழுது செய்ய விரும்புகிறேன். நீங்கள் இதை செய்வீர்கள் என்று நான் நம்பி உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு பாவத்தையும் நீங்கள் சரியாக இப்போதே அறிக்கை செய்வீர்கள் என்று நான் உங்களை நம்ப போகிறேன். அது தவறு என்று தேவனிடம் அறிக்கை செய்யுங்கள். என்னுடைய முழு இருதயத்தோடும், என்னுடைய முழு பெலத்தோடும், என்னில் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நான் முயற்சிக்கப்போகிறேன்... 81. தேவனே, உம்மிடத்தில் எனக்கு தயவு கிடைத்ததா னால், இன்றிரவு தயவு செய்து என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும், நான் உத்தமமாக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இந்த ஜனங்கள், தங்களுடைய இருதயத்தில் உத்தமமாக இருக்கிறார்கள் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். அவர்கள் இங்கேயும் அங்கேயுமென அலைந்து திரிந்து, இதினாலும் அதினாலும், மற்றும் எல்லாவிதமான சபைகளாலும், கோட்பாடுகளினாலும் போதிக்கப்பட்டு, எதுவரையென்றால், பிதாவே, அவர்கள் மீது நான் பரிதாபப் படுகிறேன், அவர்கள் நன்றாக இருக்க முயற்சிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடம் வேண்டுகிறேன், இன்றிரவு கேட்டருளும், நீர் தயவுகூர்ந்து, ஜெபத்திற்கு பதில் தாரும். மேலும், பிதாவே, தேவனுடைய ஆவியானவர் இப்போதே புறப்பட்டு சென்று அதிகதிகமாய் அபரிவிதமாக செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். தேவனே, பரலோகத்திலிருந்து கேட்டருளும்; ஜனங்களு டைய இருதயங்கள் ஒவ்வொன்றினூடாகவும் இழுத்து செல்லப் பட்டிருக்கிறது. நீர்தான்- நீர்தான் இந்த அறையில் இருக்கிறீர் என்று அவர்கள் உணர்வடைந்து, இந்த நேரத்தில் எழும்பி அறிந்துக்கொள்ள முடியாமல் இருப் பதுதான், அதை மிகவும் காரிருளாக்குகிறது. கர்த்தாவே நானல்ல, நீர் இங்கே இருக்கிறீர்; இதை செய்து கொண்டிருப்பது நீர்தான். கிறிஸ்துவின் நாமத்தினால், நீர் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதத்தை அருளும்படியாக நான் ஜெபிக்கிறேன். 82. இப்பொழுது, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளை வையுங்கள். வியாதியாயிருக்கும் ஒவ்வொரு நபரும், உங்களுடைய கையை உயர்த்துங்கள். இப்பொழுது ev... வியாதியாயிருக்கும் யார் மீதாவது யாரேனும் உங்களுடைய கையை வையுங்கள். ஐயா, நீங்கள் என்னிடம் வாருங்கள். இப்பொழுது, உங்களுடைய கையை யார் மீதாவது வையுங்கள். ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும் தூய்மையாயுமிருக்கிறது! எவ்வளவு அளவே இல்லாமலும் உறுதியாயுமிருக்கிறது! அது என்றென்றுமாய் நிலைத்திருக்கும், அதுவே பரிசுத்தவான்களும் தூதர்களும் பாடும் பாட்டு. என் அன்பான நண்பர்களே, நீங்கள் ஜெபத்தில் இருக் கையிலே, உங்களுடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையிலே, நீங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கையில், நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு உங்களுடைய பார்வையில் போதுமான அளவுக்கு நான் கிருபை பெற்றேனா? தேவனுடைய இராஜ்ஜியத்தில் உங்களுக்கு நூறு சதவீதம் உதவி செய்யும்படிக்கே நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தேவன் தன்னுடைய வார்த்தையை மீண்டும் உறுதிப்படுத்தினாரா? இந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நான் சிகாகோ முழுவதும் இங்கும் அங்கும் சுற்றி திரிந்த பிறகு தேவன் அதை வெளிப்படுத்தினாரா? அது அப்படியாக இருந்தால், பின்பு நான் தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில் எனக்கு செவி கொடுங்கள். வேதாகமம்"ஒருவர் மீது ஒருவர் கைகளை வையுங்கள், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைப்பார்கள், அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று கூறியிருக்கிறது. 83. நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் உத்தமமாகவும், தேவனுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த பணிக்காக தேவன் என்னை அழைத் திருக்கிறார் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். மேலும் நான் விசுவாசிக்கிறேன் நான் மிகவும் உத்தமத்துடன் கேட்டுக்கொண்டால், நீங்களும் இந்த ஒரு மகத்தான கூடுகை ஜெபத்தில் மிக உத்தமமாக விசுவாசித்தால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஐக்கியத் தில் நம்முடைய கைகளும் இருதயங்களும் ஒன்றாக இணைந்திருக்கிறது, அவர் இங்கே - சரியாக இந்த கட்டிடத்தில் இருக்கிறார்... எந்த ஒரு - எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், அவர் இங்கே இருக்கிறார் என்று தவறாத அடையாளங்கள் காண்பித்துக்கொண்டிருக்கிறது... உங்களால் உணர முடிகிறதா எவ்வளவு... ? ... இதுபோன்ற ஒரு கூட்டத்தில் நம்முடைய இருதயங்கள் இருந்து நம்முடைய பொறுமையை காத்துக்கொள்வதா? இதுபோன்ற ஒரு கூட்டத்தில் அமர்ந்து, இந்த காரியங்கள் நடப்பதை பார்த்து, அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல், அங்கே அமைதியாக- அங்கே வளர்ந்ததை போன்று நாம் உட்கார்ந்திருக்கும் படிக்கு நாம் எவ்வளவு தூரம் விலகி சென்று விட்டோம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, தேவனுடைய காரியங்களை எவ்வளவு குறைவாக அழைத்தோம். இந்த காரியங்களின் மூலமாக நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடிகிறதா? இப்பொழுது, நம்முடைய இருதயங்களை சரியாக இப்பொழுதே நாம் திறக்கலாம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, நம்முடைய திறந்த இருதயத்துடன் நாம் வந்து, "கர்த்தராகிய இயேசுவே, எந்தவொரு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி, நான் சரியாக இப்பொழுதே உம்மை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறலாம். 84. இப்பொழுது, சாத்தானே, நான் உன்னை கடிந்து கொள்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜனங்களை விட்டு வெளியே வா. நீ வெறும் ஒரு பழைய சந்தேகிப்பவன், ஜனங்கள் அவிசுவாசிக்கும் படியாக நீ செய்கிறாய், ஆனால் உன்னுடைய பிடியை நீ இழந்து விட்டாய். வியாதியஸ்தர்களை சுகப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் சரியாக இங்கே பிரசன்னமாயிருக்கிறார்; தேவனுடைய வல்லமை இங்கே இருக்கிறது. சாத்தானே, இந்த ஜனங்களை விட்டு உன்னை நாங்கள் வெளியே துரத்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜனங்களை விட்டு வெளியே வா. இப்பொழுது, நான் இந்த ஆராதனையை சகோதரினிடம்... ஒப்படைக்கையில், ஒவ்வொருவரும் நின்று அவருக்கு துதியை செலுத்துங்கள். 38 PAINTED - FACE JAZEBEL முகவர்ணம் பூசியுள்ள யேசபேல் 39